'டோ ண்டு' ராகவன் என்கவுன்ட்டர்
'முட்டை' ரவிக்கு அடுத்தபடியாக 'மணல்மேடு' சங்கர் என்கவுன்ட்டர்
செய்யப்படலாம் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதி வரும் நேரத்தில்
எதிர்பாராத விதமாக 'டோ ண்டு' ராகவன் இந்தர்நெட் போலீசால் என்கவுன்ட்டர்
செய்யப்பட்டார். இந்த ஆப்பரேசன் பற்றி கமிசனர் கொசுபுடுங்கி அளித்த பேட்டி.
நிருபர் - இந்த ஆப்பரேசன் எப்படி நடந்தது என்று சொல்ல
முடியுமா?
கமிசனர் - வழக்கமாக நம் னைட் ஈகிள் இந்ட்டலிஜென்ஸ் யூனிட் இது போன்ற
குற்றவாளிகளை பொறி வைத்து பிடிக்கும். ஆனால், இந்த குற்றவாளி
சிரிப்பு திருடன் சிங்கார வேலனின் ரசிகராம். அவர் ஞாபக மறதியாக
தனக்குத் தானே பொறி வைத்துக்கொண்டதுதான் காமெடி.
நிருபர் - அப்ப நீங்கல்லாம் மெடல் வாங்கற அளவுக்கு என்னதான்
செய்தீர்கள்?
கமிசனர் - நாங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் வரும்
போலீசு போல குற்றவாளியை சுற்றி வளைத்து 'டுமீல்' 'டுமீல்'
'ஹேண்ட்ஸ் அப்' என்று சொன்னோம். அப்புறம் அவருடன் போட்டோ
எடுத்துக்கொண்டோ ம்.
நிருபர்- 'டோ ண்டு' ராகவனின் கூட்டத்தில் இருந்து யாரும் எதிர்க்கவே
இல்லையா?
கமிசனர்- ம். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை.
அப்பப்போ சிலர் 'கேப்' துப்பாக்கியால் 'டுப்' 'டுப் ' என்று சுட்டு
வருகிறார்கள். நாங்களும் அப்படியே.
நிருபர் - குற்றவாளியின் ஆதரவாளர்கள் அவரொன்றும் பெரிய குற்றம்
செய்யவில்லை என்று சொல்கிறார்களே. அப்படி அவர் என்னதான்
செய்தார்?
கமிசனர் - நாட்டில் உள்ள பெரிய அரசியல் தலைவர்கள், பழங்காலத்து
அரசர்கஈன் 'ஐடெந்த்டிடி'யை திருடி தன் கைவரிசையை காட்டி
வந்தார். இதனால் நாட்டு தலைவர்கள், சிலைகளுக்கெல்லாம்
ஒரே மன உளைச்சல்.
நிருபர் - மாறுவேடம் போடுவது பெரிய குற்றமா?
கமிசனர்- பொதுவாக மாறுவேடம் போடுவது பெரிய குற்றமில்லைதான்.
ஆனால் மாறுவேடம் போடுவது பயங்கர குற்றம் என்று இந்த குற்றவாளியே
பிரச்சாரம் செய்தார். குமுதத்தில் பேட்டி கூட கொடுத்தார். படித்திருப்பீர்கள்.
அவர் போட்ட சட்டத்தில் அவரே வைகோ போல மாட்டிக்கொண்டார்.
அவருக்கு எதிரான ஆதாரங்கள் இன்னும் வந்துக்கொண்டே இருக்கின்றன.
நிருபர் - இனி இதுபோல குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்யப்
போகிறீர்கள்?
கமிசனர்- இனி இது போல குற்றங்கள் நடக்காது. மாறு வேடம் அணிவதை
நாங்கள் லீகலைஸ் செய்து விட்டோ ம்.
இத்துடன் பேட்டி நிறைவடைந்தது.
(ஒடு தமாசுக்காக போட்ட பதிவு. :) )
Labels: டோ ண்டு
6 Comments:
//கமிசனர் - நாங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் வரும்
போலீசு போல குற்றவாளியை சுற்றி வளைத்து 'டுமீல்' 'டுமீல்'
'ஹேண்ட்ஸ் அப்' என்று சொன்னோம். அப்புறம் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.//
அபாரம் ஆதிரை அவர்களே. இதை விட்டு விட்டீர்கள். போட்டோ எடுத்துக்கச்சேயும் சில போலீஸ்காரங்க வரமாட்டேன்னு நகந்துட்டாங்க. கேட்டாக்க இந்தாளோட ஃபோட்டோ எல்லாம் எடுத்துக்கறதான்னு ஃபீல் பண்ணறாங்க. ஆனாக்க ஊரிலே சிலர் இந்தாளோட ஃபோட்டோ எடுத்துக் கிட்டா அவங்க தலைவர் கோச்சுப்பாராம் அதனால்தான்னு பேசிக்கிறாங்க. அவங்க பேயறைஞ்ச மூஞ்சியை பாத்தா பாவமா இருக்கு.
நீங்க இட்ட ஒரு பதிவை நீங்களே அழிச்சதுல எனக்கு ஒரு வருத்தம். நான் சொல்வது ஜயேந்திரர் கைது சமயத்தில் இட்டது. அதைப் பத்தி அப்புறம் ஒரு நாள் கேட்ட போது அதை நீங்க அழிச்சூட்டதா சொன்னீங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
haa haa haa
பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க.
டோ ண்டு சார்,
ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டதுக்கு நன்றி.
ரெம்ப நல்லா இருக்குது கற்பனை..
உயர்வாத்தான் உள்ளுறீங்க
:)
//கமிசனர்- இனி இது போல குற்றங்கள் நடக்காது. மாறு வேடம் அணிவதை
நாங்கள் லீகலைஸ் செய்து விட்டோம்.//
அருமையான நகைச்சுவைக் கற்பனை!
good post
Post a Comment
<< Home