ullal

Thursday, January 18, 2007

விவாகரத்து- ஸ்ரீராமர் சீதை ஸ்டைல்

நன்றி - தலைப்பு உதவி கே.பாலச்சந்தர் நாடகம்

ஸ்ரீராமர் சீதையை பார்த்து இப்படி கேட்கிறார்.

ஏண்டீ சீதை இவ்வளவு நாளா நீ இலங்கையில் இராவணன்
அரண்மனையில் இருந்தியே. அப்ப, அங்கே

சீதை - அங்கே, அங்கே என்ன ?

ஸ்ரீராமர் - இல்லை, அங்க இராவணான், நீ அங்கே எதுவும் நடந்ததா?

மற்றவர்கள் உன்னை இழித்து சொல்வார்களே என்றுதான் கேட்கிறேன்.

சீதை - ஸ்ரீ ராம ப்ரபூ, உங்கள் வாயால் இப்படி கேக்கலாமா? இதோ
இப்பொழுதே என் தூய்மையை நிரூப்பிக்கிறேன்.

சீதை நெருப்பில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்து தங்க
பதுமை போல வெளியே வருகிறாள்.

ஸ்ரீராமர் - சீதே, என் கண்ணே, நீ நல்லவன்னு எனக்கு முன்பே தெரியும்.
ஆனால் மற்றவர்களுக்காக தான் உன்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டேன்.
மீண்டும் நீ ராணியாக என்னுடன் வா.

என்று அரசியல்வாதிகள் போல அந்தர் பல்டி அடிக்கிறார்.

சீதை - ஏ ராமா, நீ இப்படி சொல்லுவேன்னு எனக்கும் முன்பே
தெரியும். ஒரு வேளை நான் டெஸ்ட்டில் பெயிலாகி இருந்தால்
என்னை காட்டுக்கு அனுப்பி இருப்பாய். இப்ப பாசாகிவிட்டதால்
என்னை ராணியாக வர சொல்கிறாய்.

நானும் ரோசம் கெட்டு போய் உன் பின்னால் வருவேன், இதை வைத்து
இன்னும் பத்தாயிரம் வருடங்கள் கழித்து சன் டிவி என்கிற
யந்திரத்தில் வாராவாரம் மெகா சீரியலில் இதே கதையை எடுத்து
பெண்களை எல்லாம் துன்புறுத்த திட்டம் போடுகிறாய்.

உன் எண்ணம் ஈடேறாது. நான் கதை ending ஐ மாத்துறேன்.

நீ அந்தப்புரத்தில் இவ்வளவு நாளாக என்ன பண்ணிணேன்னு நான் கேட்டனா?
நீ எல்லாம் ஒரு கடவுள்! உனக்கு ராவணணே மேல். ஆனா
அவனையும் நீ கொன்று விட்டாய்.

இப்பொழுது நான் என் அப்பா ஜனகராஜா வீட்டுக்கு போகிறேன்.

இந்த ஜீவனாம்சம், சொத்து விவகாரங்கள் என் லாயர் நாரதரிடம்
கொடுத்தனுப்புகிறேன். பெற்றுக்கொள்.

குட்பை.

13 Comments:

At 4:10 PM, Blogger அரை பிளேடு said...

போச்சுடா. பதிலுக்கு சீதை இராமரை நெருப்பில் இறங்க சொன்னாள் என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருப்பேன்.

அப்பா வீடு... விவாகரத்து... ஜீவனாம்சம்... ஆளை விடுங்க.
ஆனா ஆவன்னா விவாகரத்து கேட்கும் நவீன பெண்களின் அராஜகம் ஒழிக...

 
At 5:54 PM, Blogger aathirai said...

அரை ப்ளேடு,
நீங்க சொன்ன அதெ ending எழுத வநது உக்கார்ந்தேன். நீங்க
முந்திகிட்டீங்க.

இன்னொரு முடிவு
சீதை - ராமா, இப்போது உன்னுடைய turn.

ராமர் - என்னது என்னுடைய டர்னா, விளையாடா தே

சீதை - மற்றவர்களுக்காகதான். உம் குதி என்று
தீயில் பிடித்து தள்ளிவிட்டாள்

ராமர் வெளியே முழுசா வந்திருப்பாரா என்று
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

 
At 6:11 PM, Anonymous Anonymous said...

//நீ அந்தப்புரத்தில் இவ்வளவு நாளாக என்ன பண்ணிணேன்னு நான் கேட்டனா?//

ராமர் அப்ப காட்டில இல்ல இருந்தார். அரண்மனைல இல்லையே.

 
At 6:27 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆதிரை,
உங்கள் கதையில் பிழை உள்ளது :)

சீதை இல்லாத போது ராமன் அந்தப்புரத்தில் இருக்கலியே..

**************************
உன் எண்ணம் ஈடேறாது. நான் கதை ending ஐ மாத்துறேன்.

நீ காட்டிலும் சுக்ரீவன் அரண்மனையிலும் இவ்வளவு நாளாக என்ன பண்ணிணேன்னு நான் கேட்டனா? சூர்ப்பனகை வெளியில் தான் இருந்தாள். நீயும் இதே காட்டில் தான் இருந்தாய். ஆக, உங்க ரெண்டு பேருக்கும் இடையில் எதுவும் நடக்கவில்லை என்று நான் எப்படி நம்புவது? நான் கூட நம்பிவிடுவேன் ப்ரபோ.. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? ஆனால், அதோ துணி தோய்க்கிறான் பாருங்கள், அந்த வண்ணானுக்கும் அவன் கழுதைக்கும் தான் சந்தேகம்.

இந்த நெருப்பில் நீங்களும் ஒரு முறை இறங்கி, நிரூபியுங்களேன்.."

(மற்றவை உங்கள் கதை போலவே :) )


ஆதிரை,
இதை விட ஒரு கொடுமை முத்தமிழ்க் குழுமத்தில் தற்போது விவாதத்தில் உள்ளது. திரௌபதி பதிவிரதையா? என்ற தலைப்புடன், ஒவ்வொரு வருடமும் தன் கணவர்களில் ஒருவரை விட்டு இன்னொருவரைப் பார்க்க திரௌபதி போகும் போது தீக்குளித்துவிட்டுப் போனாள் என்று அதீதமான கற்பனைகளால் திரௌபதியின் பத்தினித்தன்மை தினமும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது :(

நீங்க இன்னும் சீதையிலயே இருக்கீங்க.. என்னத்தச் சொல்ல :))

 
At 7:11 PM, Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஈவெரா சிறையிலிருந்து வந்ததும் மணியம்மைக்கிட்ட என்ன கேட்டிருப்பாரு?
'கேட்பாரற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' அப்படீன்னு மணியம்மைகிட்ட இனமான தளபதிங்க ஆராவது முற்போக்கு அப்ளிக்கேஷன் கொடுத்தப்போ மணியம்மை என்ன சொன்னாவை?

 
At 6:00 AM, Blogger aathirai said...

நீலகண்டன்,
உங்கள் பேராவலுக்கு நன்றி. வேறு பெரியார் கிசுகிசு
வேண்டுமென்றால் சொல்லுங்கள். கைவசம் உள்ளது.

அவரும் இதே கேள்வி கேட்டிருந்தால் தான் அவருக்கு கோயில்
கட்டுவீங்களா?

 
At 6:04 AM, Blogger aathirai said...

பொன்ஸ்,
நல்லா improvise செய்திருக்கிறீர்கள். அந்த திரௌபதி
பதிவை ஒரு முறை பார்த்து நொந்து விட்டேன்.
மீண்டும் எட்டி பார்க்கும் எண்ணம் இல்லை.

 
At 7:50 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:28 AM, Anonymous Anonymous said...

ஈவெரா சிறையிலிருந்து வந்ததும் மணியம்மைக்கிட்ட என்ன கேட்டிருப்பாரு?
கடுப்படிக்கும் நீலகண்டரே, இதே கருத்தை ஒருவர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறி இலக்கியமாக பதிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்? இந்துத்துவத்தின் சகிப்புத்தன்மைக்கு இதையும் ஒரு எடுத்துக்காட்டாக விவாதங்களில் பயன்படுத்தியிருப்பீர்களா இல்லையா? கீழ்க்கண்டவாறு:
|| நமது ஞானமரபில் பெரிதும் போற்றப்படும் இராமனையும், சீதையையும் வைத்து காமெடி பண்ணுவதையும் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை நமது பாரத மண்ணுக்கே உரியது. அரேபியாவில் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? ||

:)

 
At 2:05 AM, Anonymous Anonymous said...

test.

 
At 5:47 AM, Blogger aathirai said...

//கடுப்படிக்கும் நீலகண்டரே, இதே கருத்தை ஒருவர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறி இலக்கியமாக பதிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்? //

பதிந்திருந்தால்...

ராமாயணத்தில் ராமர் சொன்னதுதானே இங்கே பதித்திருக்கிறேன்,

நீலகண்டருக்கு ஏன் ஸ்ரீராமர் மீது இவ்வளவு கோபம்?

 
At 6:03 AM, Blogger aathirai said...

இன்னும் ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் எழுதிய
கீமாயணம் (குதிரை கொம்பு என்ற சிறுகதை)யை
எடுத்து போட்டால் என்ன சொல்வார்கள்?

 
At 8:32 AM, Anonymous Anonymous said...

போடுங்களேன்.. ஸொல்றோம்!

 

Post a Comment

<< Home