ullal

Monday, January 22, 2007

மதிப்புற்குரிய பிரதம மந்திரிக்கு

சாமியார் அமைச்சகம் அமைக்க கோரிக்கை
---------------------------

உங்களுடைய நிதி அமைச்சர் இந்தியர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க
மக்களை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி, சலுகைகள் என்றெல்லாம்
அறிவித்தும் நம் மக்களிடம் எதுவும் செல்லுபடியாகவில்லை. ஆகவே
வருமான வரியை பிரச்சினையில்லாமல் வசூலிக்க ஒரு
யோசனை. மத்திய அரசில் சுற்றுலா துறை போல சாமியார் துறை
ஒன்று இருந்தால் வருமான வரியை மிக எளிதாக வசூலிக்கலாம்.

ஏற்கெனவே அறநிலையத்துறை மூலமாக கோயில்களில் சுரண்டுபவன்,
கொள்ளைக்காரன் எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதை வசூலித்து
நாட்டு மக்களுக்கு ரோடு, மருத்துவமனைகள் கட்டி வருகிறோம்.
அது போல ஒரு சாமியார் துறை அமைத்தால் நதி நீர் இணைப்புத்
திட்டம், மருத்துவமனை , இலவச வீடு, டிவி, கார்
திட்டங்களெல்லாம் நிறைவேற்றிவிடலாம். இந்த துறையையும்
கூட்டணி கட்சியை சேர்ந்த கருணாபாபாவின் கொள்ளுப் பேரனுக்கு
அளிக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கு
என்.ஆர்.ஐக்கள், என்,ஆர்,எப் கள் கொடுக்க வேண்டிய வரியையும்
சேர்த்து இந்தியாவே வசூலித்துக்கொள்ளலாம்.
அப்படியே தனியார் சாமியார் மடங்களையும் அரசாங்கமே டேக் ஓவர் செய்து
விடலாம். அப்புறமென்ன இந்தியா சூப்பர் பவராகி நாட்டில் தங்க ரோட்டில்
வெள்ளி கார்கள் ஓட்டலாம்.

சாமியார்களை பணிக்கு எடுப்பதற்கு upsc 'இந்தியன் சாமியார் சர்வீஸ்' (ISS) பரீட்சைகள்
நடத்தலாம். சாமியாராவதற்கு முக்கியமான அடிப்படை தகுதி விண்ணப்பதாரகளுக்கு
வித்தியாசமான ஹேர் ஸ்டைல் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக
எண்ணையைப் பார்க்காது பரட்டையாக பேன் முதல் புலி சிங்கம் வரை
வன விலங்குகள் தலையில் குடி இருக்கலாம். அல்லது ப்ரேமானந்தாவைப்
போல குடுமியோ நிர்வாணச் சாமியார்களைப் போல மொட்டையாகவோ
இருக்கலாம். அமைச்சகத்தில் விபூதி எடுப்பவர்கள், மோதிரம் எடுப்பவர்கள்,
நிர்வாண பூஜை செய்பவர்கள், தீபாவளிக்கு அருளுரை வழங்குபவர்கள்,
கற்பழிப்பு மட்டும் செய்பவர்கள், கற்பழிப்புடன் கொலையும் செய்பவர்கள் என்று க்ரூப் 1,2,3,4... என்று பிரிவுகள் ஏற்படுத்தலாம். பெண் சாமியார்களுக்கு
இந்த வேலைகளில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட சாமியார் கல்லூரியில்
படித்தால் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும். சொல்லிக்கும்படியாக இந்தியாவிடம்
ஒரு பேடன் ட்டும் இல்லை. ஏராளமான புராண குப்பைகள் மட்டுமே நம்மிடம்
உள்ளது. அதனால் இந்த வேலைக்காக அரசாங்கமே (ஐ,ஐ,டிகளை மூடிவிட்டு) இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆப் சாமியாராலஜி தொடங்க வேண்டும். இந்த கல்லூரியில்
அட்மிசனுக்கு கூட்டம் அலை மோதும். ஆகவே பின் தங்கிய வகுப்பினருக்கு
50 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும்
இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

10 Comments:

At 3:48 PM, Blogger குமரன் (Kumaran) said...

சூப்பர்
.
.
.
.
.
.
.
.
.
வயித்தெரிச்சல் பதிவு.

:-))

 
At 6:15 PM, Blogger aathirai said...

குமரன்,
சான்சே இல்லை. அரசாங்கத்தால் நேரடியாக
வசூலிக்க முடியாத பணத்தை இப்படிதான்
வசூலிக்க வேண்டும். பாதியாவது வந்தால் சரி.

 
At 8:17 PM, Blogger bala said...

//பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட சாமியார் கல்லூரியில்
படித்தால் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும். சொல்லிக்கும்படியாக இந்தியாவிடம்
ஒரு பேடன் ட்டும் இல்லை. ஏராளமான புராண குப்பைகள் மட்டுமே நம்மிடம்//

ஆத்திரை அம்மா,

3500 கோடி மஞ்ச துண்டு, பிச்சைக் காசு, 200 கோடிக்கு சாய்பாபாவிடம் கையேந்தி நின்றதில் திராவிட உணர்ச்சி மிக்க நீங்கள் வெட்கப் பட்டதில் நியாயம் உண்டு.ஆனால் சாமியார்களிடம் அநாவசியாமகா ஆத்திரப்பட்டதில் அர்த்தமில்லை.புராணக் குப்பைகளை விடுங்கள்;institute of Saamiyaarology யையும் விடுங்கள்.
பதிலாக திராவிடக் குப்பைகள் கற்பிக்கப்படும் Institute of Dravidology திறந்து "ரோமாபுரி ராணியையும்" பராசக்தி வசனத்தையும் பயிற்ப்பித்தால் நாம் நோபல் பரிசுகள் பெற முடியுமா?கோபத்தை சரியான இடத்தில் காண்பிக்காமல், திராவிட அயோக்யத்தனத்துக்கே, உரித்தான அரைவேக்காடுத்தனத்துடன் உளறிய உங்களுக்கு "ஆத்திர அம்மா" என்ற பட்டம் கொடுத்து குஞ்சுகள் கெளரவப் படுத்தட்டும்.

பாலா

பாலா

 
At 5:28 AM, Blogger aathirai said...

பாலா,
பட்டத்துக்கு நன்றி.

டிராவிடாலஜி லோக்கலில்தான் விற்கும். சாமியாராலஜி
உலகம் பூரா விற்கும். எது தேவலை?

3500 கோடிக்கு பிசினஸ் செய்யும் திறமை, உழைப்பு
இதெல்லாம் வேணும். தண்டவாளத்தில் படுத்து
போராட்டம் செய்யணும். இதை விட சாமியாராவது இன்னும்
ஈஸி.

பாலா,
பட்டத்துக்கு நன்றி.

டிராவிடாலஜி லோக்கலில்தான் விற்கும். சாமியாராலஜி
உலகம் பூரா விற்கும். எது தேவலை?

3500 கோடிக்கு பிசினஸ் செய்யும் திறமை, உழைப்பு
இதெல்லாம் வேணும். தண்டவாளத்தில் படுத்து
போராட்டம் செய்யணும். இதை விட சாமியாராவது இன்னும்
ஈஸி.

மக்களின் தண்ணீர் திட்டத்துக்காக கையை ஏந்தினால் என்ன
தப்பு?

 
At 6:36 AM, Blogger பங்காளி... said...

ஆத்தா...!

ஏன் இம்புட்டு கொலவெறி....கூல்டவுன்...கூல்டவுன்

 
At 6:41 AM, Blogger aathirai said...

இன்னாபா இது. ஒரு மனுசனை பாராட்டக்கூட விட மாட்டேங்கறாங்க.

சாணக்யன் சொன்னான்.

கருணாநிதி செய்தான்.

 
At 6:44 AM, Anonymous Anonymous said...

ஐயா குமரன் (Kumaran),

என்ன சூப்பர் வயித்தெரிச்சல் பதிவு? போட்டுட்டு அதுக்குப் பின்னால எதுக்கு ஒரு ஸ்மைலி? மூலைக்கு மூலை பண்டாரங்களும் சாமியார்களும் இருக்கும் நாட்டில் உருப்படியாக ஒரு அறிவியல் பேடண்ட் இருக்கா என்று ஆதிரை கேட்டதில் என்ன தப்பு?

 
At 7:26 AM, Anonymous Anonymous said...

//அப்படியே தனியார் சாமியார் மடங்களையும் அரசாங்கமே
டேக் ஓவர் செய்துவிடலாம். //
இல்லை. பொன்முட்டை இடும் வாத்துகளை
அறுக்கக்கூடாது.

அழாதீர்கள் பாலா,
நீங்கள் சாமியாரிடம் கொட்டிய பணம் வேறு எங்கோ
போகுதே என்று வருத்தப்படாதீர்கள்.

 
At 8:28 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

:) இப்போவே துண்டு போட்டு வச்சிக்கிறேன், காலேஜில் எனக்கும் ஒரு சீட் :)

 
At 10:31 AM, Anonymous Anonymous said...

//
3500 கோடி மஞ்ச துண்டு, பிச்சைக் காசு, 200 கோடிக்கு
சாய்பாபாவிடம் கையேந்தி நின்றதில் திராவிட உணர்ச்சி மிக்க
நீங்கள் வெட்கப் பட்டதில் நியாயம் உண்டு//

இதிலென்ன வெக்கம் . எல்லாம் நம்ம காசுதான். வ.வ.துறை
ஒரு ரெய்டு போனால் மிரட்டியே வாங்கலாம். கருணாநிதி நல்லவரு.
நயமா வாங்கறார்.சாமியார்களிடம் அரசே 50-50 என்று ஒரு
பார்முலா போட்டுக்கலாம்.

சாமியார் ஏதாவது குறும்பு செய்தா ஆட்சி மாறும்போது அம்மா வந்து
பிடிச்சு உள்ள போட்டுருவாங்க.

 

Post a Comment

<< Home