கேபிடலிசம் சோசலிசம் டாடாயிசம்
மேற்கு வங்காளத்தில் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக பதினான்கு பேரை படுகொலை செய்ததை ஜாலியன்வாலாபாக் என்று அத்வானி வர்ணித்திருக்கிறார். உலகில் பல்வேறு வாடுகளில் தனிச்சொத்து பாதுகாப்பு சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான தனிச்சொத்தை மதிக்கும் நாடுகளில் ரோடு, பாலம் போன்ற பொது உபயோகத்துக்காக தனி மனிதர்களின் சொத்துக்களை நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
சமீபத்தில் சீன அரசு தனிச்சொத்து பாதுகாப்பு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் சீனர்கள் (அரசுக்கு பயந்து )வெளிவாட்டில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை சீனாவிற்கு கொண்டு வருவார்களாம். இது ஒரு கம்யூனிச நாடு என்று சொல்கிறார்கள்.
அமெரிக்கா தனிமனிதர்களின் சொத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கும் பொது காரியங்களுக்காக மட்டும் அரசு ஒருவரின் விலத்தையோ, வீட்டையோ தகுநத விலை கொடுத்து விட்டு ஆக்கிரமிக்கலாம்.
2005 ஆம் வருடம் இந்த ( http://en.wikipedia.org/wiki/Kelo_v._New_London) வழக்கில் நீதிபதி பொருளாதார வளர்ச்சிக்காக அரசு ஒருவரின் சொத்தைப் பிடுங்கி இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். உடனே துப்பாக்கி சூடு எதுவும் இல்லாமலெ அமெரிக்க மக்கள் கொத்தித்தெழுந்து சட்டத்தையே மாற்றினார்கள். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்காக ஒருவனின் வீட்டைப்பிடுங்கி வால்மார்ட்டுக்கு வழங்க முடியாதபடி செய்து விட்டார்கள்.
http://www.cnsnews.com/ViewCulture.asp?Page=%5CCulture%5Carchive%5C200511%5CCUL20051104a.html
மேற்கு வங்கத்தில் இருக்கும் கம்யூனிச அரசும் மற்ற மாநில அரசுகள் விவசாய விலங்களை பிடுங்கி டாடாவுக்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தானம் செய்வது கேபிடலிசமா, சோசலிசமா அல்லது டாடாயிசமா என்று யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன்.
1 Comments:
தோழரே
புரட்சியின் வீர வணக்கங்கள். நிலவுடமை சமுதாய பார்ப்பனீய பாசிச மதிப்பீடுகளால் கட்டுண்டு புரட்சிக்கு இடையூறாக வாழும் மக்களை புரட்சியை நோக்கி அழைத்து செல்ல இடைநிலை முதலாளித்துவம் தேவை என்கிற நம் தத்துவ பேராசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் கூறிய விசயங்களை, தோழர் ஸ்டாலினும் மாவோவும் சுட்டிக்காட்டிய வழிமுறையில் நிறைவேற்றிடும் போது அதனை பாசிச சக்திகள் ஜாலியன்வாலாபாக் என விமர்சிப்பதை புறந்தள்ளி புரட்டு...சாரி புரட்சி பாதையில் முன்னேறுவோம். நாளைக்கு பொலிட் பீரோவில் 'வரலாற்று தவறு' குறித்து ஒரு தீர்மானம் போட்டால் போயிற்று. வேண்டுமானால் நந்திகிராமில் 'இரத்த சாட்சிகளுக்கு லால்சலாம்' என ஒரு நினைவு தூணையும் வைத்துவிடலாம். புரட்டு பாதையில்...மீண்டும் மன்னிக்கவும் புரட்சி பாதையில் இதெல்லாம் சகஜமப்பா. ஆனால் இது கேபிடலிசமா டாடாயிசமா என்கிற திரிபுவாத நக்கல் எல்லாம் வேண்டாம் தோழர். இதுதான் ISO-9001 தரம் வாய்ந்த மார்க்சியம். வேண்டுமானால் உலகவங்கியிடமே தரச்சான்றிதழ் பெற்றுத்தரலாம்.
ஓங்குக புரட்சி, வாழ்க ஊசிப்போன சோசலிச வடை. செகுவாரா டீ ஷ்ர்ட் போட்டு புரட்சி பதிவிறக்கும் வலைப்பதிவர்களே அணி திரளுங்கள். மார்க்சியத்தையும் இன்ன பிற பிறரை திட்ட jargon வழங்கும் ஈயங்களையும் இழக்க உங்களுக்கு சம்மதமா! தோழர்களே வசைகளை இறக்குங்கள் பதிவுகளில் இழக்க உங்களிடம் எதுவுமில்லை மானம் உட்பட கிடைப்பதற்கோ இருக்கிறது டாடாவின் பாராட்டு!
Post a Comment
<< Home