ullal

Thursday, April 12, 2007

டோண்டு மாமாவும் சோசலிசமும்

டோண்டு மாமா இனி அடுத்த பதிவுகளில் என்ன எழுதப் போகிறார் என்று படிக்காமலே தெரிகிறது. சோசலிசம் உருப்படாது என்று இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

நம்ம டோண்டு மாமா idpl நிறுவனத்தில் எப்படி வேலை செய்தார் என்று அவரேIDPL நினைவுகள் ( குறிப்பாக நாலாவது பாகம்) பதிவில் விளக்கியிருக்கிறார்.அரசாங்க சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை நேரத்தில் தன் சொந்த மொழி பெயர்ப்புவேலைகள் செய்து வியாபாரம் செய்து வந்தார். இவர் மட்டுமல்லாது இந்த வேலைகளுக்கு ஆபீஸ் டைப்பிஸ்ட்டுகளையும் இந்த வேலைக்கு பயன்படுத்திஇருக்கிறார். இந்த ஆபீசில் எல்லோருமே இப்படித்தான் வேலை செய்ததாகவும்எழுதுகிறார்.

அப்புறம் இந்த நிறுவனம் எப்படி உருப்படும் ? இப்படி இவர் அரசு நிறுவனத்தை ஒழித்துவிட்டு ரிட்டையரானபின் நான் கட்டும் வரிப்பணத்தில் இன்னொருவனுக்குஇட ஒதுக்கீடா என்று பின்னூட்டம் வேறு போடுவார். (இவருக்குசம்பளமாக கொடுத்த வரிப்பணமே வெட்டி !)

சோசலிச நாட்டின் தலைப் பகுதியில் இருப்பவர்கள் இப்படி நாட்டுக்காகஉழைத்து(?)க்கொண்டிருக்கும்போது இவர் வேளாவேளைக்குவத்தக்குழம்பு சாப்பிடுவதற்காக யாரோ ஒரு விவசாயி வெறும் நெல் கூலிக்கு நொங்கு நொங்கென்று உழைக்கிறான்.

சோசலிச சிந்தனை உள்ளவர்களைக்கொண்டுதான் சோசலிச நாடு அமைக்க முடியும்.சுயநல சிந்தனை உள்ளவர்களை வைத்து சோசலிச அரசு அமைத்தால் இந்தியாவைப்போல போண்டிதான் ஆகும்.

உண்மையிலேயே பொது நலத்துக்காக உழைத்துதங்கள் சொந்த குடும்பங்களைக்கூட கவனிக்காமல் விட்டவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் இந்தஅமைப்பில் அவர்கள் எல்லாம் லூசுகள் ஆவார்கள். டோண்டு மாமா தன் குடும்பத்துக்காக ஒன்றரை வேலை செய்து இரண்டு சம்பாத்தியம் செய்தது தவறு என்றும் சொல்ல முடியாது. இவரே ஒரு தனியார் நிறுவனத்தில்வேலை செய்திருந்தால் ஒரு ஐம்பது சதவிகிதமாவது உழைத்திருப்பார். இவருடையசொந்த மொழிபெயர்ப்பு தொழிலுக்காக நூறு சதம் உழைக்கிறார் என்றே நம்புகிறேன். சரியா டோண்டு அவர்களே?

வழக்கம்போல டோண்டு மாமா சீரியசா எடுத்துக்க மாட்டார்னு ஒரு நம்பிக்கையில பதிவு போட்டாச்சு.

18 Comments:

At 9:06 AM, Blogger dondu(#11168674346665545885) said...

//வழக்கம்போல டோண்டு மாமா சீரியசா எடுத்துக்க மாட்டார்னு ஒரு நம்பிக்கையில பதிவு போட்டாச்சு.//
எதுக்கு சீரியசாக எடுத்துக்கணும்? சரி விஷயத்துக்கு வரேன்.

எனக்கு அதிகார பூர்வமாக 2 டெஸிக்னேஷன்கள் கொடுக்கப்பட்டன. அதுவும் வெளிப்படையான சம்பந்தம் இல்லாத பொறியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்த டெசிக்னேஷனில் 12 வருடம் இருந்திருக்கிறேன். இம்மாதிரி அது வரை யாருக்கும் அளிக்கப்பட்டதில்லை. அளிக்கப்படவும் போவதில்லை. இரு கடமைகளையும் நன்றாகவே நிறைவேற்றினேன் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

மொழிபெயர்ப்பாளனாக என் கம்பெனியில் நான் மட்டும் இருந்ததால் கம்பேர் செய்ய ஏலாமல் போயிருக்கலாம். ஆனால் பொறியாளனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செவ்வனே செய்தாகி விட்டது. இருக்கும் பொறியாளர்களிலேயே பல இனிஷியேடிவ் எடுத்து வேலை செய்ததையும் ஜெனெரேடிங் செட் போட ஏற்பாடு செய்ததையும் கூறியுள்ளேனே.

உங்களை பார்க்கும் போது என்னுடன் வேலை செய்த குப்தா என்பவர் நினைவுக்கு வருகிறார். அவர் வெளி வேலை எதுவும் எடுத்து செய்யவில்லை. அதே சமயம் கம்பெனி வேலையையும் சொதப்பினார். வெளி வேலை எடுத்து செய்யாததற்கு காரணம் அறிவது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை. அவருக்கு வேலையே தெரியாது. அவ்வளவே.

நீங்கள் சொன்னதுபோல நான் தனியார் கம்பெனியில் இருந்திருந்தாலும் அதற்கேற்ப நடந்து கொள்ள தெரியும். நிலைமைக்கு ஏற்ப அதன் சாதகங்களை எடுத்து பாதகங்களை ஒதுக்க வேண்டும் என கூறுவதற்காக நான் கொடுத்த உதாரணங்களை நீங்கள் புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது.

மற்றப்படி சோஷலிஸம் உருப்படாது என்று கூறத்தான் போகிறேன். எவ்வளவு முறை வேண்டுமானாலும் அதை கூறுவேன். காத்திருந்து பாருங்கள்.
இப்போது ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை. அத்துடன் தமிழ்மண பதிவிடல், பின்னூட்டங்களிடல், எனது மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் பதிவுகள் போடல் என்று ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்ற நிலை இப்போது. ஒன்று மட்டும் நினைவில் வைக்கவும். அதிகம் வேலை செய்யும் மனிதன் எப்போதுமே புது வேலைகளை எடுக்கத் தயங்க மாட்டான். சோம்பேறிகள்தான் நேரமே இல்லை எனத் தூங்கிக் கொண்டே புலம்புவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 9:08 AM, Blogger dondu(#11168674346665545885) said...

This comment has been removed by the author.

 
At 10:18 AM, Blogger aathirai said...

நீங்கள் செய்தது தவறு என்று சொல்ல முடியாது. உங்களை
வைத்து முழு நேரமும் வேலை வாங்காதவர்களைத்தான்
சொல்ல வேண்டும்.

மேலும் சிலர் எட்டு மணி நேர வேலையை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டு
வேறு வேலை செய்வார்கள். சிலர் 2 மணி நேரத்தில் முடிக்கிற
வேலையை இழுத்து இழுத்து 8 மணி நேரம் செய்வார்கள்.

முன்பு நான் வேலை செய்த ஒரு தொழிற்சாலையில்
production engineer வந்து time பண்ணும்போது
நிறுத்தி நிதானமாக வேலை செய்வார்கள். அந்த ஆளும் இவர்
ஒரு நாளைக்கு component செய்வார் என்று எழுதிக்கொண்டு
போவார். production ஆரம்பித்தப்பறம் பாத்தால் இவர் 2 மணி
நேரத்தில் வேலையை முடித்துவிட்டு தூங்கவோ, அரட்டை
அடிக்கவோ செய்வார்கள்.

 
At 10:41 AM, Anonymous Anonymous said...

டோண்டு மாமா ஒரு பாசிசவாதி என்பது வெளிப்படையான உண்மை. அமெரிக்க,இஸ்ரேலிய, ஆரிய, பார்பன சிந்தனையின் மொத்த குத்தகைதாரர். அவரிடம் போய் சமதர்மத்தை எதிர்பார்ப்பது பெரும் தவறு.

 
At 12:26 PM, Anonymous Anonymous said...

என்னை பொருத்தவரை டோண்டு ஐய்யா ஒரு சுதந்திரவாதி, பாசிஸ்டுக்கும், சொஸியலிஸ்டுக்கும் நேர் எதிர்.

எப்படி ரென்டுக்குமே நேர் எதிர் கேட்டினா?
அது புரிய, நீ வளரனும் தம்பி.

 
At 1:55 PM, Anonymous Anonymous said...

மானிக் பாட்ஷா!! டோண்டு அங்கிள் ஒரு சுய விளம்பரப் பிரியர். அது மட்டுமல்ல அவர் பாசிசவாதி. இல்லையென்றால் நீங்க போகவேண்டிய இடம் கீழ்ப்பாக்கம்.

 
At 10:43 PM, Anonymous Anonymous said...

//என்னை பொருத்தவரை டோண்டு ஐய்யா ஒரு சுதந்திரவாதி, பாசிஸ்டுக்கும், சொஸியலிஸ்டுக்கும் நேர் எதிர்.//
ஹி ஹி ஹி.. எம்ஜியாரின் அண்ணாயிசம் மாதிரி இருக்குய்யா..

ஆதிரை அம்மா.. எப்படிம்மா இதெல்லாம்??? இப்படி அடிச்சி வெளையாடுறீங்க?!!! :))

 
At 7:17 AM, Blogger dondu(#11168674346665545885) said...

test

 
At 7:26 AM, Blogger dondu(#11168674346665545885) said...

//ஹி ஹி ஹி.. எம்ஜியாரின் அண்ணாயிசம் மாதிரி இருக்குய்யா..//

:)
அண்ணாயிசம்னதும் ஞாபகத்துக்கு வருகிறது. அதை அவர் காப்பிடலிசம், கம்யூனிசம் மற்றும் பாசிசம் என்பவை சேர்ந்த கலவை என்றிருக்கிறார்.

கருணாநிதி, "அடப்பாவி" என்று தொடங்கி ஏதோ கூறியிருக்கிறார் (அது மறந்து விட்டது, சாரி). உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் பாவி என்றால் சாது என்று பொருள் கூற, கருணாநிதிக்கு மூச்சே நின்று விட்டது. அதை குறித்து கேலி பேச, எம்.ஜி.ஆர். ஒரு குறிப்பிட்ட அகராதியை சொல்லி அதில் இருக்கிறது என்று கூற, அதை எல்லோரும் சரி பார்க்க, அதில் அப்படியே இருக்க, கருணாநிதி கப்சிப் ஆனார். (ஒரு வேளை இதை மனதில் வைத்துத்தான் பின்னாளில் கருணாநிதி அவர்கள், ஹிந்து என்றால் திருடன் என்று அகராதியில் போட்டிருக்கிறது என்றாரோ?)

இதே அண்ணாயிசத்தைப் பற்றி அக்கால திமுக பத்திரிகை ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தார்கள்.

"அண்ணாயிசத்தை பற்றிய விளக்கத்தை எம்ஜிஆர் கூறியதை கேட்டு நாட்டில் பலர் வேட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்" என்று.

அது இருக்கட்டும் ஆதிரை அவர்களே. சோஷலிசத்தை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுத இருக்கிறேன். அப்போது வாருங்கள். நேரு பற்றிய முதல் பதிவிலேயே அதை கோடி காட்டியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 8:28 AM, Blogger aathirai said...

சாதுக்கள் எல்லாம் பாவிகளா?
:)

 
At 10:27 AM, Anonymous Anonymous said...

//ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்ற நிலை இப்போது//

இன்னா ப்ரெயின் ப்பா இவ்ருக்கு. இவரு 'பேசாம' இந்திய பிரதமரா 'ஆய்'டலாம்.

 
At 11:20 AM, Anonymous Anonymous said...

we forgot DONDU UNCLE. Why do you think of him?

 
At 9:30 PM, Blogger ஆதி said...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய டோண்டு சார், சல்மா அயூப் விவகாரத்தில் என்ன நடந்தது என்று அப்படியே தெள்ளத் தெளிவாக நேரில் இருந்து பார்த்தது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார்.

அனைவரும் வந்து படித்துப் பாருங்கள்.

எந்த ஒரு சராசரி மனிதனும் போலீஸ் என்றால் பயந்து குற்றத்தை ஒப்புக் கொள்வான். அதேதான் (சல்மா அயூப்) நமது ஜயராமன்சார் விஷயத்திலும் நடந்துள்ளது என்று டோண்டு சார் எழுதி இருக்கிறார்.

எனக்கும் அப்படித்தான் படுகிறது. இதில் ஏதோ சூழ்ச்சி நடந்து உள்ளது. எனவே இதனை மீண்டும் கிண்டி கிளறி எடுத்து விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதனை போலீசுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் நிறைய போலிகளும் திராவிடர்களும் திம்மிகளும் மாட்டுவார்கள்.

ஒரு மனிதனைக் கூப்பிட்டு அவன் செய்யாத தவறுக்காக மிரட்டி எழுதி வாங்குவது வீரச்செயலா? அந்த லாகின் ஐடியும் பாஸ்வேர்டும் களவு போய்விட்டது என்று எத்தனை முறைதான் சொல்வது உங்களுக்கு?

ஜயராமன் பக்கம் உள்ள நியாயத்தையும் நீதியையும் எடுத்துச் சொன்ன என் அன்புக்குறிய டோண்டு சாருக்கு மிகவும் நன்றி.

 
At 7:29 AM, Anonymous Anonymous said...

Hi all dondu &co and amk aa muu kaa guys and gal .I have planned to joinin this discussion .Expect ay blog launch soon.Dondu you just know we people have (younger) more vision .we are now days doing good than what the previous generation done or achived . A indian can think like you exactly .But a NRI will not .because , guys and cals like me doing realy good . Leave your passit works . I am realy working with brahmins . I am watching them all . They are not good role players.all drinkers. They all dont know the Hidhuthuva or real 'Karma'. Just we think like that.They got opertunity they done their superiority or minority. India will be the power full one by us we youngs .You dont worry.Nehru loves childs who realy intiated the test fire of atomic mass destructive webens for India. He intiates Five year plans which doing well. If you dont know you will not understand.I hope he is passit.
you are kind of people .like chater box contains nothing.
India is a democratic country. you wil die sure i am one day .But India remains .we are having the structure similar to britan and america .If you want a system like briten you can start your own political party.If you want realy two party srtucture like America India realy having this two alliences in center party UFA ,NDA.
Dont worry about India - vajravelu annamalai.(vajraa@rediffmail.com)

 
At 7:33 AM, Blogger dondu(#11168674346665545885) said...

ஐயா வஜ்ரவேலு,

ஆங்கிலம் பாவம், அதை விட்டு விடுங்கள். அதை இப்படியா கொலை செய்வீர்கள்?

நீங்க எழுதற மாதிரி நான் ஆங்கிலம் என்னோட எட்டாம் வகுப்பில் நான் எழுதியிருந்தால், எனது வகுப்பாசிரியர் ஜயராம ஐயங்கார் அவர்கள் என்னை ஒரு வாரத்துக்கு பெஞ்சு மேல் நிற்க வைத்திருப்பார். நானும் அதை தவறுன்னு சொல்லியிருக்க மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 9:33 AM, Anonymous Anonymous said...

டோண்டு சுய விளம்பரப் பிரியன். மற்றும்படி சுத்த வேஸ்ட்டு. அதைப் பற்றி
ஒரு பதிவா?

 
At 11:57 AM, Anonymous Anonymous said...

"டோண்டு சுய விளம்பரப் பிரியன். மற்றும்படி சுத்த வேஸ்ட்டு. அதைப் பற்றி ஒரு பதிவா?"

உனக்கு ஏன்டி எரியுது? ஜெலுஸில் குடி, எரிச்சல் குறையும்.

 
At 12:00 PM, Anonymous Anonymous said...

ஆமா விருமான் சொன்னா சரிதான். வெய்ய காலமப்பா எரிச்சல் தாங்காது. போய் ஜேலுசில் குடிப்பா.

 

Post a Comment

<< Home