ullal

Monday, May 14, 2007

குடும்பச் சண்டையை கூடி ரசிக்கும் குடிமக்களே..

ஒரு திருடனுக்கு ரொம்ப வயதாகி விட்டது. இனி திருட்டு தொழில்செய்ய முடியாது என்ற நிலைமை. தன் நான்கு மகன்கள்கால் திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்ஆகியோரைக் கூப்பிட்டு உங்களில் யார் திருட்டு தொழிலை நன்றாக செய்கிறீர்களோ அவனை தலைவனாகக் கொண்டு நீங்கள் திருட்டுத்தொழிலை நன்றாக செய்ய வேண்டும் என்று சொன்னான். ஒரு திருடன்மதுரையில், ஒருவன் சென்னையில் தங்கள் திறமையை காட்ட...கொஞ்சம் இருங்க ஏதோ ஆட்டோ சத்தம் கேக்குது.
தேர்தலில் தோற்கும்போது மானங்கெட்ட தமிழர்களே என்று ஒருவர்கடிதம் வரைவார். இந்த உண்மையை நன்றாக் புரிந்துக் கொண்டவர்கள் நாம் என்ன செய்தாலும் இந்த தமிழ்ர்களுக்கு ரோசம் வராது என்றதைரியத்தில் ஆடுவது அமர்க்களமாக உள்ளது.

ஒரு பக்கம் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பிரதம மந்திரிக்கு கஷ்டப்பட்டு கடிதம் எழுதி போஸ்ட் பண்ணுவது. அடுத்த நாளே பொன் விழா கொண்டாடுவது. பொன் விழா மேடையில் பிரதம மந்திரி. விழாவை முதல் வரிசையில் அமர்ந்து கண்டு களித்தவர்அஞ்சா நெஞ்சன். அதற்குள் இவர் மனு நீதி சோழனா , மக்கா சோளமா, மனு சோழன் மனு நீதியை கடைபிடித்தானா, மனு நீதியா இப்படி ஒரே ஜல்லியடி சவுண்டு.(இவர்தான் அய்யா உண்மையான 'மனுநீதி' சோழன்.) டாட்டாவை மிரட்டினார்,பாட்டாவை மிரட்டினார் என்று எழுதிய பதிவர்கள் தயாநிதி மாறனின்திறமையை திடீரென்று கண்டுபிடித்து விட்டார்கள்.(?)


கருத்து சுதந்திரத்துக்காக வலைப்பதிவு ஆரம்பித்தவர்கள் கூட கருத்து கணிப்புகளைஆதரிப்பதில்லை என்ற உண்மையும் வெளி வந்துள்ளது. தங்கள் கட்சியைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக கருத்து வெளியிடலாம்.ரவுடித்தனத்தை மொத்த கட்சியும் குடும்பமும் ஆதரிக்குது.



இது எல்லாம் போதாது, கனவு காணும் ஜனாதிபதி, கனவு காண்பதை விட்டுவிட்டு நாட்டில் இரண்டு கட்சி ஆட்சி முறைவேண்டுமென்று ஐடியா குடுக்கிறார். ரிடையர் ஆகும் நேரத்தில்இப்படி ஒரு நல்லெண்ணம் இவருக்கு.


அப்பாவி சிட்டிசன்கள் என்ன செய்ய வேண்டும்? போலீஸ் உதவாத போது சிட்டிசன்களே அவ்வப்பொழுது ரவுடிகளை சுட்டு தள்ளிடலாமா? அல்லது ரவுடிகளுக்கு போட்டியாக ஒரு மக்கள் ரவுடிப் படையை இறக்குவதா? அல்லது செக்யூரிடி கேட்டுகளுக்கு பின் ஒளிந்துக் கொள்வதா? அல்லது கம்முன்னு நாடகத்தை தொடர்ந்து பார்ப்பதா?

4 Comments:

At 1:17 PM, Anonymous Anonymous said...

everybody forgot those 3 persons...Karuna is great person...He turned everybody's views to Dayanidhi maran now...People will forget Madurai Incident in another 2 - 3 days (which is already done)...Another week more Tamilnadu will start speaking about Sivaji...that's it...as 3 persons went to grave...the CBI enquiry will also travel swiftly into the grave...

 
At 5:47 AM, Blogger வெங்கட்ராமன் said...

ஒரு திருடனுக்கு ரொம்ப வயதாகி விட்டது. இனி திருட்டு தொழில்செய்ய முடியாது என்ற நிலைமை. தன் நான்கு மகன்கள்கால் திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்ஆகியோரைக் கூப்பிட்டு உங்களில் யார் திருட்டு தொழிலை நன்றாக செய்கிறீர்களோ அவனை தலைவனாகக் கொண்டு நீங்கள் திருட்டுத்தொழிலை நன்றாக செய்ய வேண்டும் என்று சொன்னான். ஒரு திருடன்மதுரையில், ஒருவன் சென்னையில் தங்கள் திறமையை காட்ட...

என்ன தல சூப்பரா ஆரம்பிச்சிட்டு, அப்புடியே ரூட்ட மாத்திட்ட. . . .

பிரச்சனைய திசை திருப்பி எப்படியோ கலைஞர் தன் மகன் அழகிரிய காப்பாத்தீட்டார் . . . .

 
At 9:02 AM, Anonymous Anonymous said...

we need to get rid of the brahmins ASAP

 
At 11:36 AM, Blogger aathirai said...

இந்த கதைக்கு காப்பிரைட் எல்லாம் இல்லை. யார்
வேண்டுமானாலும் தொடரலாம்.

 

Post a Comment

<< Home