ullal

Wednesday, May 09, 2007

இந்துக்களுக்கு பலதார மணம் செய்யும் தனி மனித உரிமை வேண்டும்

இப்பொழுதெல்லாம் அந்த காலத்து சர்வாதிகாரம் போலஇல்லாமல் பல விஷயங்களில் தனிமனித உரிமை பெருகி வருகிறது. ஊருக்குள் சாமியார்கள் நிர்வாணமாக போவது தனி மனித உரிமை, மத உரிமை என்றெல்லாம்சொன்னார்கள். பொது இடத்தில் கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பதற்கும் தனி உரிமை இருக்கிறது. (இன்னும்வேறு எதற்கெல்லாம் தனி மனித உரிமை இருக்கு என்றுதற்போது தெரியவில்லை. காலப்போக்கில் தெரிய வரும்.)

இப்படி பொது இடங்களில் பெண்கள் இருப்பார்களோ,குழந்தைகள் இருப்பார்களோ, அவர்களுடைய பெற்றோர்கள்விரும்புவார்களோ என்று கவலைப்பட தேவையில்லாத அளவுக்குதனிமனித உரிமை இருக்கிறது.
சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை (இப்போதைக்கு மூன்று என்று வைத்துக்கொள்வோம்) தவிர வேரு யாரையும் பாதிக்காதபட்சத்தில்மனைவியும், கணவனும் ஆட்சேபிக்காத பட்சத்தில் இந்து ஆண்களோ, பெண்களோ ஏன் பலதாரமணம் செய்யக்கூடாது?இது ஏன் கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டிருக்கிறது? அதுவும்இந்துக்களுக்கு மட்டும்?


இரண்டு மனைவிகளை வைத்திருப்பவர்களை சிலர் ஏளனம் செய்கிறார்களே? இது நியாயமா? இது சம்பந்தப்பட்டவரின் தனிமனித உரிமை இல்லையா?

80 கோடி இந்துக்களே பதில் சொல்லுங்கள்.

துண்டு செய்தி:குமுதத்தில் ஒரு கட்டுரை வந்தது. ஒரு தமிழக அரசு அதிகாரி இரண்டு மனைவி வைத்திருந்ததால் வேலையில் மெமோ கொடுத்தார்களாம்.

0 Comments:

Post a Comment

<< Home