ullal

Wednesday, May 09, 2007

அண்ணன் கேப்டன் விஜயகான்த் அவர்களே,

உங்களுடைய குமுதம் பேட்டியை படிச்சேங்க. சும்மா பின்னி எடுத்திட்டீங்கண்ணே.

அதிலும் இந்த இட ஒதுக்கீடு பத்தி தெளிவா பேசியிருக்கீங்க. இதுக்கு முன்னாடி செய்தி வாசிப்பவரா இருந்தீங்களா? கோர்ட் என்ன சொல்லுது, அவங்க என்ன சொல்றாங்கன்னு சொல்றீங்க. இது எங்களுக்கு தெரியாதா? 'நீங்க' இட ஒதுக்கீடு பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு எப்ப சொல்வீங்க?

சட்டசபைல ஒரு வேலையும் இல்ல. அங்க போகறதில்லேன்னு சொல்றீங்க. ஓரளவு நியாயமாவே இருக்கு. உங்க தொகுதிக்கு கோரிக்கை எல்லாம் எதுவும் இல்லீங்களா?


தொகுதி நிதி ஒரு கோடி 20 லட்சத்த அப்படியே தொகுதிக்கு குடுத்திட்டீங்க. ரொம்ப சந்தோசமுங்க. ஆமா தொகுதி நிதின்னா என்னங்க? தொகுதிக்கு குடுப்பதுதானேன்னு சிலர் கேக்கறாங்க. நான் கேக்க மாட்டேன். நீங்க சொன்னா கரெக்டாதான் இருக்கும்.


தொகுதிக்கு பத்து கோவில், ஆறு லட்சத்துல கிறிஸ்தவ ஆஸ்பத்திரி ( அப்ப இந்துக்கள் இங்க போகக்கூடாதா?) முஸ்லிம் கட்டடம்னு நிறைய நிறைய சென்சுருக்கீங்க. ஆறு லச்சத்துல ஆஸ்பத்திரி கட்ட முடியுங்களா? ஆனா அரசியல்ல நல்லாவே தேறிட்டீங்க.


வித்தியாச அரசியலுக்கு விஜயகான்த். கேக்கவே எவ்வளோ நல்லா இருக்கு? அடுத்த பத்தில் அவங்க மட்டும் போஸ்டர் கட் அவுட் வெக்கலாமான்னு பின்னிட்டீங்க போங்க. அப்ப நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசன்னு நான்,' நான் ' கேக்க மாட்டேன்.


ஏதோ பாண்டிச்சேரி ஆஸ்பத்திரி பத்தி சொல்லி இருக்கீங்க. சத்தியமா இன்னும் புரியவே இல்லீங்க.

இவ்வளவு ஏன்? என் சம்பளமே தொகுதிக்குதான் போகுதுன்னு சொல்றீங்க. உங்களுக்கு உண்மையிலேயே பெரிய மனசு. இது ஒரு அம்பது கொடி இருக்குமா?ஆனா @இலர் இப்படி சொல்றாங்க. வாரன் பப்பே கொடுக்கற பில்லியனை விட புஷ்ஷோட கையெழுத்து ந்றைய பேரோட தலியெழுத்த மாத்தும். சமூகசேவை வேற. அரசியல் வேறன்னு சொல்றாங்க. கிறுக்கு பயலுக.

கடைசி பத்தில உங்க மதுவிலக்கு கொள்கைய சொல்லிட்டீங்க. கள்ளச்சாராயத்த ஒழிக்கணும்னு சொல்றீங்க. நீங்க மதுவிலக்கு ஆதரவாளர். கரெக்ட்டா? அப்ப இதுக்கு முன்னாடி கள்ளுக்கடைய தெறக்கனும்னு சொன்னது நீங்களா? பண்ருட்டியா?


உங்க கொள்கை பேட்டிய படிச்சு லேசா கிறுகிறுன்னு வருது. யாராது வாங்களேன்.

6 Comments:

At 4:35 PM, Blogger -L-L-D-a-s-u said...

பேட்டியை படிக்கும் போது நான் சிரித்த விஷயங்களை ஒளிந்திருந்து பார்த்து இங்கு கட்டுரையாக்கிவிட்டீர்கள் போலிருக்கிறது..

என்னத்த சொல்றது ..

 
At 5:06 PM, Anonymous Anonymous said...

//கள்ளச்சாராயத்த ஒழிக்கணும்னு சொல்றீங்க. நீங்க மதுவிலக்கு ஆதரவாளர். கரெக்ட்டா? அப்ப இதுக்கு முன்னாடி கள்ளுக்கடைய தெறக்கனும்னு சொன்னது நீங்களா? பண்ருட்டியா?//

Ozhungaa padimayya. KALLA sarayathai ozhikka sonnaru. Adhukku peru madhu vilakku illa velakkennai

 
At 6:33 PM, Blogger aathirai said...

mariyadhaikuriya anony,
nalla sarayam kidaikumpodhu yaar kalla sarayam kaachuvargal?

madhu vilakai patri pesumpodhudhan kalla sarayam patriya peche varugiradhu. madhu vilakai amal paduthinal kalla sarayam odum endru solvargal.

 
At 2:34 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

தாஸை வழிமொழிகிறேன். குமுதத்தை விடுங்க. இதே பேட்டியைப் பதிவில் போட்டு, "தெளிவான பேட்டின்னு" ஔஒருத்தர் சர்டிபிகேட் கொடுத்திருந்தாரே, பார்த்தீங்களா?

 
At 6:37 AM, Anonymous Anonymous said...

Pls idhellam seriousa eduthukkathinga, thalaivar eppavume konjam comedya pesuvaru. but appadi pesumpodhu avaroda face mattumthan seriousa irukkum. pesurathu ellam comedya than irukum. adha serious edukka kodathu.
ayyo ayyo chinnapulla thanamalla iruku

George,
Kanyakumari

 
At 8:01 AM, Blogger aathirai said...

பொன்ஸ்,
தெளிவா பேசினாலே இப்படி இருக்கு. இவர் மப்புல பேசினா
எப்படி இருக்குமோ?

கடைசி அனானி,
சீரியஸ் எல்லாம் இல்லை. இது டைப் அடிக்க பத்து நிமிசம்
வேஸ்ட் பண்ணனுமான்னு நெனச்சேன். இவரு இல்லாட்டா
அரசியல் ரொம்ப போரடிக்கும்.

 

Post a Comment

<< Home