ullal

Wednesday, June 13, 2007

அப்துல்கலாம், இல்லீகல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

லோக்கல் நடிகர்கள் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை ஊடகங்கள்தங்களுடைய ஆதிக்க கொள்கைகளுக்கு ஏற்ப சில பிம்பங்களை கட்டியெழுப்புவது வழக்கம்.


ஆனா இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை? ஜனாதிபதி மாளிகையில்தோட்டம் இவர் இல்லாவிட்டால் வாடி சீரழிந்து போயிடுமாம்? அதனால் இவர்தான்மீண்டும் ஜனாதிபதியா வரணுமாம். நாட்டு மக்கள்(??) இவரைத்தான் ஆதரிக்கிறார்களாம். கலாம் என்ன ஜனாதிபதி மாளிகையின் தோட்டக்காரரா? மதச்சார்பின்மையோடுஇவர்களுக்கு ஜால்ரா அடிப்பதால் கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமாம்.இவர் ஜனாதிபதியாக இருந்து சாதித்து , கிழித்ததுதான் என்ன? முகல் கார்டனில்இருக்கும் மூலிகை செடியெல்லாம் இவருக்குதான் தெரியுமாம். ரிப்பன்வெட்டுவதைத் தவிர வேறு வேலை இல்லாவிட்டால் செடிக்கு தண்ணி ஊத்திதான் பொழுது போக்கவேண்டும்.


அடுத்தது பிரதமர் வீட்டு ரோஜா தோட்டத்தை பாதுகாக்க வாஜ்பேயே மீண்டும்பிரதமராக வரவேண்டும். போயஸ் தோட்டத்து புல் எல்லாம் பச்சையாக வளர ஜெயாவே முதல்வராக வரவேண்டும் என்று நாட்டு மக்கள்(?) ஆசைப்படுவார்கள்.


ஜெயலலிதாவின் மீது தேர்தல் கமிஷன் வேக வேகமாக ஐந்து ஆண்டு ஆட்சிமுடிந்து இப்போது நடவடிக்கை எடுக்குதாம். தினமும் திமுகவை மைனாரிட்டிகட்சி என்று ஜெயலலிதா அழைப்பது போல இனி திமுகக்காரர்கள் ஜெயலலிதாவைஇல்லீகல் முன்னாள் முதல்வர் என்று அழைக்கலாம்.


இவர் இல்லீகல் முதல்வராக இருந்தபோது செய்தவை சில -

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து சிறையில் தள்ளியது..
வைகோவை பொடாவில் தள்ளியது..
கருணாநிதி, மற்றும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியது..
இல்லீகலாக மேலும் பல சொத்துக்களை வாங்கி அங்கு இல்லீகலாகவே கட்டடங்கள் கட்டியது..

0 Comments:

Post a Comment

<< Home