ullal

Monday, June 04, 2007

துக்ளக் கோனார் நோட்ஸ்

துக்ளக் அலுவலகத்தில் ஆள் எடுத்தால் நேர்முகத் தேர்வுக்குதயாரிப்பது எப்படி? கோனார் நோட்ஸ் வினாக்கள் இங்கே.விடைகள் பின்னூட்டத்தில் வரும்.

1. ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றால், என்னகார்ட்டூன் போடுவாய்?

அ. திமுக வின் விஞ்ஞான ஊழல்
ஆ. சர்க்காரியா கமிசன்
இ. லாலுவின் கார்ட்டூன்
ஈ. போபர்ஸ் கார்ட்டூன்

2. பா.ஜ.க. எம்பி வெளிநாட்டுக்கு ஆள் கடத்தினால் என்ன தலையங்கம் எழுதுவாய்?
அ. இதனால் வெளிநாட்டு உறவு வளரும்.
ஆ. இந்தியாவின் ஜனத்தொகை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வு
இ. திமுகக்காரன் அரிசி கடத்துறான்.
ஈ. ரோமன் கிருத்துவ சதி.

3.வேண்டப்பட்ட கட்சிக்காரர்கள் மசூதியை இடித்தால் என்ன கட்டுரை எழுதலாம்?
அ. 500 வருடமாக தொழுகை நடத்தாததால் அது மசூதியே அல்ல.
ஆ. பழைய கட்டடம் முஸ்லிம்களின் தலையில் விழாமலிருக்கபாதுகாப்புக்கு இடித்தார்கள்.
இ.கைதவறி இடித்தார்கள்.
ஈ. கோவில்களை இடித்த முஸ்லிம் மன்னர்கள் பற்றி எழுதலாம்
உ. நாசா சொல்லுது இதுக்கு கீழதான் ராமர் பிறந்தார்.


4.ஆதாம் பாலத்தை யாராவது இடித்தால்...
அ. பல லட்சக்கணக்கான வருடங்கள் பூசை கீசை இல்லாவிட்டாலும், இதுஇந்துக்களின் புனித இடம்.
ஆ. ஏற்கெனவே சிலரை கைது செய்து சுனாமி வந்தது போல பூகம்பம் வரும். இ. நாசாவே சொல்லுது அது ராமர் கட்டிய பாலம்தான்.
ஈ. டி ஆர் பாலுவுக்கு இதை இடிப்பதால் என்ன $$லாபம்?

5. குஜராத்தில் கலவரம் நேர்ந்து 2000 பேர் செத்தால்..
அ. முஸ்லிம்கள் கலவரம் செய்தார்கள்.
ஆ. திகக்காரர்கள் பூணூல் அறுத்தது பற்றி எழுதலாம்.
இ. வாரிசு அரசியல் பற்றி எழுதலாம்.
ஈ. மோடியின் நல்லாட்சியின் பேரை கெடுக்க பாகிஸ்தான் சதி
உ. பருப்பு தேங்கா செய்வது எப்படி?

6. தமிழ்நாட்டில் சாதி கலவரத்தில் நாலு பேர் இறந்துவிட்டால்
அ. சட்டம் ஒழுங்கு குலைந்தது.

ஆ. ஆட்சியை கலைக்க வேண்டும்.
இ. ஜனாதிபதிக்கு பெட்டிசன்
ஈ. வெள்ளை மாளிகைக்கு கடிதம்.
உ. மியூசிக் அகாதமியில் 60+ தாத்தாக்களின் கூட்டம்

7. நம்மாளை கைது செய்தால்..
அ. போலீஸ் விதி முறையை மீறியது .
ஆ. சுப்ரமண்ய சாமியின் பேட்டி
இ. கேசை ஆந்திராவுக்கு மாற்ற வேண்டும். (அங்க நம்ம ஜட்ஜ்)
ஈ. ப்ராசிக்யூசனின் கடமைகள் கட்டுரை எழுதலாம்.

8. நமக்கு பிடிக்காதவர்களை கைது செய்தால் அல்லது வன்முறைசெய்தால்
அ. போலீஸ் சில சமயங்களில் சின்ன விதி மீறல்கள் செய்யும். இதுரொம்ப சின்ன விசயம்.
ஆ. கேசை சிபிஐக்கு மாத்து
இ. கேசை சிபிஐக்கு மாத்தினால், கார்டூன்
ஈ. all of the above


பிகு: துக்ளக்கில் வேலை கிடைக்காவிட்டால் வேறு பல பத்திரிகை வேலைகளுக்கும் இதே கோனார் நோட்ஸ் பயன்படுத்தலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்கா.?

11 Comments:

At 1:01 PM, Blogger Mike said...

சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.

 
At 1:55 PM, Anonymous Anonymous said...

Hi,
indha padhivai paditthal eppadi ellam dravida veriyargalkku jaalra thattalamnu theridhu kollalam.
nanri.

 
At 4:12 PM, Blogger aathirai said...

anony,
Ennal thuglak ayum kindal panna mudiyum. dmk vayum kindal panna mudiyum. thuglakkal irandum panna mudiyadhu.

ungalalum mudiyadhu endru therigiradhu.

 
At 3:23 AM, Anonymous Anonymous said...

Nice kick back.

 
At 4:22 AM, Blogger அசுரன் said...

வெகு சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.... :-))

அசுரன்

 
At 5:47 AM, Blogger சிவபாலன் said...

//துக்ளக்கில் வேலை கிடைக்காவிட்டால் வேறு பல பத்திரிகை வேலைகளுக்கும் இதே கோனார் நோட்ஸ் பயன்படுத்தலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்கா.? //


Excellent!


I agree with you!

You should have included RESERVATION Issue also. They never give news abour Pro Reservation Rally. But, they will give prominent coverage to anti reservation.

Thanks.

 
At 6:06 AM, Anonymous Anonymous said...

//Ennal thuglak ayum kindal panna mudiyum. dmk vayum kindal panna mudiyum. thuglakkal irandum panna mudiyadhu.
//

It shows that you never read Tuglak :-))

There are tonnes of cartoons spoofing BJP / ADMK and even Tuglak (the mascot) himself.

Its surprise to see people has such a biased reading on Tuglak only because Cho has some spine to call a spade as a spade.

Not sure whether you want to publish this comment.

 
At 7:00 AM, Blogger aathirai said...

நம் வலையுலக துக்ளக் மார்கெட்டர்களின் தயவால்
அவ்வப்பொழுது படித்த விஷயங்கள்தான் இவை.

சிவபாலன்,
முக்கியமான விஷ்யம் மிஸ் ஆயிடுச்சு.

 
At 7:45 AM, Blogger உண்மைத்தமிழன் said...

தூள்.. துக்ளக்கின் நீண்ட வருட கால வாசகரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அட்சர சுத்தமா எழுதியிருக்கீங்க.. நல்ல நகைச்சுவை ஸார்.. துக்ளக்கை படிக்க படிக்க இது தானா ஒட்டிரும்னு நினைக்கிறேன். எனக்கும் அப்படித்தான்.. ஹி.ஹி..ஹி.

 
At 11:16 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல நையாண்டி. விபரங்களும் வியக்கவைக்குது. துக்ளக் மட்டுமல்ல இருநிலைகளைக்கொண்ட எவருக்கும் இது பொருந்தும்.

கலக்கல் காமெடி :)

 
At 8:04 PM, Blogger Kasi Arumugam said...

:-))
good observation and expression.

 

Post a Comment

<< Home