ரஜினி அடுத்த பிரதமர்
ரஜினியின் திறமைக்கு இவர் தமிழ்நாட்டில் இருக்க வேண்டியவரே இல்லை. இவர் தேசிய அரசியலில் குதித்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கலாம். ரஜினி ரசிகர்கள் இனி தேசிய கட்சியின் 730 வது வட்ட செயலாளர் கனவு காணலாம்.
Rajnikant is the best choice for chief ministership because he has a basic integrity and simplicity, a quality which is very rare these days”- இப்படி சோ வே சொல்லியிருக்கார். ஆனால் ரஜினியின் முக்கியமான பல்டி அடிக்கும் திறமைக்கு இவர் பிரதம மந்திரியாகலாம். அரசியல்வாதிக்கு தேவையான முக்கிய திறமை பல்டி அடிப்பது. கை வெச்ச பல்டி , கை வைக்காத பல்டி எல்லாம் கலக்குவார். எத்தனை படத்தில் சண்டை காட்சியில் பல்டி போட்டிருப்பார் ?
இவர் போட்ட முதல் பிரபலமான பல்டி தைரியலஷ்மியிடம் போட்டது. வழக்கமா அரசியல்வாதிகள் ஒரு பல்டிக்கும் அடுத்த பல்டிக்கும் இடையே போதிய இடைவெளி விடுவார்கள். குறைந்தது ஆறு மாசம் பொறுத்தால் முன்பு என்ன சொன்னார்கள் என்று மக்களுக்கு அதற்குள் மறந்து விடும். இவ்வளவு வேகமாக பல்டி அடிக்க ஒலிம்பிக் வீரர்களால் கூட முடியாது.
பாஜக போன்ற தேசிய கட்சிகளில் ஒரு மாநிலத்தில் இல.கணேசன் காவேரியில் தண்ணீர் விட வேண்டும் என்று போராட்டம் நடத்துவார். இன்னொரு மாநிலத்தில் எடியுரப்பா தமிழ்நாடுக்கு நீலு கொட பேடா ன்னு ஹெளுவார். ஆனால் ஆளுக்கு ஒரு மொழிதான் , ஒரு நிலைப்பாடுதான் ஒரே கட்சிதான் . நம்ம ரஜினி மாதிரி ஒரே நேரத்தில் எரடு மொழியல்லி மாத்தி மாத்தி மாத்தாட முடியுமா? Multiple personality disorder மாதிரி.
மேலும் இவர் கன்னடியர் இல்லை. மராட்டி காரர். இவர் தேசிய முன்றாவது அணி அமைத்தால் தமிழ்நாடு, கர்நாடக, மஹாராஸ்டிரா என்று மூன்று மாநிலத்தில் ஜெயிக்கலாம். மராட்டிகாரர்களுக்கு ஒருவன் மராட்டிக்காரனாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒட்டு போடுவார்கள். தமிழ்ர்கள் வழ்க்கம்போல புரியாமல் ஒட்டு போடுவார்கள். சட்டசபை தேர்தல்ல தோற்று போன வாட்டாள் ஆதரவில் கர்நாடகத்திலும் ஜெயிக்கலாம். அப்பறம் என்ன ரஜினி தான் அடுத்த பிரதமர். அவருக்கு சோ பிரதம ஆலோசகராகிடுவார். திமுக, விஜயகாந்த் , சத்யராஜ் எல்லாம் இவர் கட்சியுடன் கூட்டணி வைக்க வரிசையில் நிற்பார்கள். (சத்யராஜ் அதுக்குள்ளே கட்சி ஆரம்பிச்சிருப்பார். ) ரஜினி சார், பிரதமரானதும் இந்தியாவில் முதலில் உண்ணாவிரதங்களை தடை செஞ்சுடுங்க.
0 Comments:
Post a Comment
<< Home