ullal

Wednesday, August 08, 2007

தினமலருக்கு சில கேள்விகள் - OBC சாதனை

இட ஒதுக்கீடு இல்லாமலே OBC மாணவர்கள் அதிக இடம் பிடித்தார்கள்என்கிறது தினமலர் செய்தி. இவர்கள் 13.74 சதவிகிதம் இடம் பிடித்தார்களாம்.

1. இந்திய நாட்டில் OBCக்கள் எத்தனை சதவிகிதம். 50 சதவிகிதம் இருக்குமா? இவர்கள் 13 சதவிகிதம் இடம் பிடித்தது எப்படி சாதனையாகும்? 27 சதவிகிடம் இடஒதுக்கீடு பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 13 எப்படி சாதனை ஆனது?

2. ஐஐடி அட்மிசனில் சாதி விபரங்கள் சேமிக்கப்படுவதில்லை. சேமிக்கக்கூடாது என்றெல்லாம் ஒரு காலத்தில் வலைப்பதிவில் கூச்சலாக இருந்தது. இப்போதுஅட்மிசன் கிடைத்தவர்களில் யார் OBC என்று எப்படி கண்டுபிடித்தார்கள்?

3. FC எத்தனை இடங்களை பிடித்து சாதனை செய்தது?

1 Comments:

At 5:48 PM, Blogger TBCD said...

எதையும்மே..குதர்க்கமா எழுத அவனுங்களுக்கு மட்டுமே தெரியும்....

 

Post a Comment

<< Home