பொன்னியின் செல்வர் ௧ - ஈ. வே .ரா பக்தர் நோண்டு மாதவன்
ஒரு ஊரில் நோண்டு மாதவன் என்று ஒருவர் இருந்தார். அவர் பெருமையாக
நோண்டு மாதவ அய்யங்கார் என்று தான் கையெழுத்து போடுவார். தன்னை மகர
நெடுங்குழலாதனின் பக்தர் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எந்நேரமும்
யாரோ ஒரு ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி பதிவு எழுதி வந்தார் .
அதே ஊரில் ஒரு நாத்திகரும் இருந்தார். அவருக்கு எந்நேரமும் இந்து
கடவுள்களை நிந்தனை செய்வதே வேலை.
இருவரும் ஒரே நாளில் இறந்து போனார்கள். மேலுலகத்தில் நாத்திகரை
சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்கள். நோண்டு மாதவனை
நரகத்துக்கு அனுப்பினார்கள். சும்மா விடுவாரா நோண்டு ? நேரே
மகர நெடுங்குழஅலாதனிடம் போய் "நாத்திகரை சொர்க்கத்துக்கு
அனுப்பிவிட்டு, என்னை எப்படி நரகத்துக்கு அனுப்பலாம்? " என்று
சண்டை பிடித்தார்.
மகர நெடுங்குழலாதன "நீ என் பக்தன் என்று சொல்லிக்கொண்டு
எப்பொழுதும் யாரோ ஒரு ராமசாமி நாயக்கரையே நினைத்து காலத்திய
ஒட்டினாய். பக்கம் பக்கமாக பதிவு, மீள்பதிவு, மீள் மீள் பதிவு
போட்டு மக்களை ரம்பம் போட்டாய். என்னை பற்றி எத்தனை பதிவு போட்டிருப்பாய் ?
ராமசாமி நாயக்கரைப பற்றி எத்தனை பதிவு போட்டிருக்கிறாய் என்று நீயே
எண்ணிப்பார். நாத்திகன் எப்பொழுதும் எங்களை போல கடவுள்களைப்
பற்றி பேசுகிறார்கள். அதனால் அவர்கள் சொர்க்கத்துக்கும், உன் போன்ற
ஆட்களை நரகத்துக்கும் அனுப்பி விடுவோம் என்று அவையில் முடிவு
செய்துவிட்டோம் " என்று சொன்னார்.
பி.கு- இந்த கதையில் வரும பெயர்கள் அனைத்தும் கற்பனையே.
7 Comments:
நான் அவனில்லை!
ஆக கடவுள் இருப்பதை ஒத்து கொள்கிறீர்கள். அப்படி வாருங்கள் வழிக்கு. குடலறுந்த நரி எத்தனை தூரம் ஓடும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கதையில் ஆன்மீக வீச்சம் அடிக்கிறது உண்மைதான்.
நீங்கள் இந்த பின்னூட்டம் தான் போடுவீர்கள் என்பதையும் முன் கூட்டியே யூகித்துதான் பதிவு போட்டேன்.
//கடவுள் இருப்பதை ஒத்து கொள்கிறீர்கள். அப்படி வாருங்கள் வழிக்கு. குடலறுந்த நரி எத்தனை தூரம் ஓடும்?//
நான் கடவுளில்லைன்னு தானே சொல்ல வந்தேன்!
நீங்க யாரை சொல்றிங்க!
நீங்கள் சொல்லும் கடவுள் கதைகள் எவ்வளவு fantasy யோ அது போலதான் இதுவும்.
@வால்பையன்
உங்களைச் சொல்லவில்லை.
//கதையில் ஆன்மீக வீச்சம் அடிக்கிறது உண்மைதான்.
நீங்கள் இந்த பின்னூட்டம் தான் போடுவீர்கள் என்பதையும் முன் கூட்டியே யூகித்துதான் பதிவு போட்டேன்.//
உங்கள் பதிவில் நீங்கள் ஏன் அனானிமஸாக வரவேண்டும் ஆதிரை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் பதிவில் நீங்கள் ஏன் அனானிமஸாக வரவேண்டும் ஆதிரை?
//
somberithanam.
Post a Comment
<< Home