ullal

Monday, April 13, 2009

ஒ போடாதே ! ஒட்டு போடு !

நம்மில் பலருக்கும் இந்த தேர்தலில் ஒ போடலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் முதலில் அதுவே சரியாக பட்டது. தார்மீக ரீதியாக அதுவே சரியான முடிவாக இருந்தாலும், இந்திய தேர்தல் கணக்குப்படி பார்த்தால் இந்த தேர்தலில் ஒ போடக் கூடாது.


இந்த தேர்தலில் ஒ போடுவதும், விஜயகாந்த், சரத் மற்ற உதிரி கட்சிகளுக்கு ஒட்டு போடுவதும் ஒட்டு பிரிக்கத்தான் உதவும். நம்மில் சிலர் ஒ போட்டாலும், கட்சி ஒட்டு , கள்ள ஒட்டு, பிரியாணி ஓட்டுகளையும் தாண்டி 'ஒ' வால் ஜெயிக்க முடியாது.


ஒரு உதாரணத்துக்கு விஜயகாந்த் 20௦ சதவிகித ஒட்டு வாங்கி, அதிமுக 30 சதவிகித ஒட்டு வாங்கி திமுக/காங்கிரஸ் வேட்பாளர் 32 சதவிகித ஓட்டுக்கள் வாங்கினால், இன்னும் ஒரு 5-10 சதவிகிதம் ஒ வுக்கு விழுந்தால், 60 சதவிகித ஆட்கள் விரும்பாத திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.


தேர்தல் முடிந்தவுடன் நம் பத்திரிகையாளர்கள் மக்கள் தீர்ப்பு (mandate) பற்றி கட்டுரை எழுதுவார்கள். இப்படி மைனாரிடி ஓட்டுக்களை பெற்று காங்கிரஸ் /திமுக தப்பி தவறி ஜெயித்தாலும் ஈழ பிரச்சினை தமிழ் நாட்டில் எதிரொலிக்கவில்லை. இதனால் ஈழ பிரச்சினை தேர்தல் பிரச்சினை அல்ல என்று எழுதுவார்கள். இந்த அரிப்பை வலைப்பதிவுகளிலேயே காண முடிகிறது. ஒருவேளை ஏற்கெனவே இவர்கள் கட்டுரைகளை தயார் செய்தும் இருக்கலாம். இப்படி இவர்கள் எழுதினால் அதையே அரசியல் கட்சிகள் நம்பவும் கூடும்.


(மேலும் இந்த தேர்தல் ஒட்டு பிரிப்பதற்காகவே தேர்தலில் நிற்கும் விஜயகாந்த்தின் உண்மை முகத்தையும் அடையாளம் காட்டி இருக்கிறது. இவர் ஈழ தமிழர்களுக்காக பிரார்த்தனை செய்கிறாராம். )


ஆகவே, இந்த தேர்தலில் திமுக / காங்கிரசு தோற்க வேண்டுமென்றால் 'போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் ' என்று விளம்பிய அம்மாவுக்கு தான் ஒட்டு போடவேண்டும் . இதன்மூலம் ஈழ பிரச்சினையில் தவறான நிலைப்பாடு எடுத்தால் தேர்த்தலில் தோற்க நேரிடும் என்று காங்கிரசு, திமுக வுடன் அதிமுகவுக்கும் சேர்த்து புரிய வைக்கலாம்.

4 Comments:

At 1:03 PM, Anonymous http://blog.krupashankar.com/pullivalai/Default.aspx said...

49 O வையெல்லாம் இன்னும் எத்தனைநாளைக்குத்தான் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கப்போகிறார்களோ... கொஞ்சம் மெனக்கெட்டு கூக்ளில் தேடினால் கூட இந்த 49 O வதந்தி என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 49-Oவுக்கும் repollingக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

 
At 6:39 AM, Anonymous Anonymous said...

ஞானி ஒ போட சொல்றார். நீங்க அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றீங்க.
எப்படி இருந்தாலும் இந்த தேர்தலில் இந்த விளையாட்டு வேண்டாம்.
-aathirai

 
At 8:36 AM, Blogger vaaalpaiyan said...

49'O' நு ஒரு வாக்கு பதிவு வாய்ப்பு இருக்கு.. அனால் இங்க வலைபூ எழுதுற மாதிரி அது எளிதான வேலை இல்லை.. 49'O' வாக்கு பதிவு இயந்திரத்தில் இருக்காது.
அதற்க்கு தனியாக ஒரு விண்ணப்பம் வாக்கு பதிவு நிலைய அதிகாரியிடம் பெற்று கொண்டு அதை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு வர வேண்டும்..
இதெல்லாம் நடக்குற விஷயமா? நாம வாக்கு பதிவு செய்யுற வேட்பாளர் மட்டும் யாருக்கும் தெரிய வேண்டம், அனால் இதெல்லாம் அனைவர்க்கும் தெரிஞ்சி செயனுமாம்? என்ன கொடுமை சார் இது..

 
At 9:51 AM, Anonymous சு. க்ருபா ஷங்கர் said...

ஆதிரை, கொழப்பிட்டேன்னு நெனைக்கறேன். 49 O உண்மை. ஆனால், அந்த சுற்று மின்னஞ்சலில் சொல்லி இருப்பது மாதிரி (ஞானி எழுதியாகத்தான் வந்தது) பெரும்பான்மை மக்கள் 49 O போட்டிருந்தால் மறுதேர்தல் எல்லாம் நடக்காது. அதைத்தான் வதந்தி என்றேன்.

 

Post a Comment

<< Home