ullal

Tuesday, February 10, 2009

கருணாநிதி கேள்வி பதில்

(கண்டிப்பா முரசொலியில் தேட வேண்டாம்)

திமுகவை சர்வாதிகாரம் செய்வதாக சொல்றாங்களே ? நீங்கள் உண்மையிலேயே ஜனநாயகவாதியா ?

இது உண்மையல்ல. அம்மாவின் ஆட்சியில் இப்படி போராட்டம், கூச்சல் போட முடியுமா? இந்நேரம் எல்லாரும் பொடாவில் புட்பால் விளையாடப் போயிருப்பார்கள். நாங்கள் சீமானை சாதாரண சட்டத்தில்தான் சைலன்ட் ஆக்கினோம்.


திமுக குடும்ப அரசியல் செய்கிறதா?

தவறு. தமிழ்கத்தின் ஒரே ஜனநாயக கட்சி திமுகதான். எப்பவும் பொதுக்குழுவைக் கூட்டியே மந்திரி, எம்பி, கட்சி பதவிகள் குறிப்பாக பொருளாளர் பதவிகள் என் மகன் , பேரன், பேத்தி , கொள்ளு எள்ளு பேத்தி பேரன் களுக்கு கொடுப்போம். என் குடும்பத்தில் கூட ஜனநாயகமா எல்லா 'வீட்டுக்கும்' பதவி கொடுத்திருக்கோம்.


வைகோவை வெளியில் அனுப்பியது ஜனநாயகமா?
அவரை நானே அனுப்பியிருந்தால் தான் தவறு. அது பொதுக்குழு எடுத்த முடிவு.


எம்ஜிஆரை அனுப்பியது?
கட்சியில் கணக்கு கேட்பது தடை செய்யப்பட்டது. கட்சி ரூல்ஸை மதிக்காமல் செயல்பட்டார். பொதுக்குழு அவரை வெளியே அனுப்பியது.


உங்கள் கட்சியில் சகோதர யுத்தம் நடந்ததாமே ?
எங்கள் கட்சியில் மட்டுமே ஜனநாயகமாக உள் கட்சி தேர்தல் நடத்துகிறோம். அதனால் ஒரு சிலரை போட்டு தள்ள வேண்டியிருந்தது. மற்ற கட்சிகளும் தேர்தல் நடத்தினால் அவர்களும் இதையே செய்ய வேண்டியிருக்கும்.


தினகரன்மூன்று பேரை காலி பண்ணிய வழ்க்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

சட்டம் கண்டிப்பாக என்றாவது தன் கடமையை செய்யும். அய்யகோ ! அவர்களை தண்டிக்காமல் நான் எப்படி ஆட்சியை விட்டு போவது ? கண்டிப்பாக அவர்கள் தண்டனை அடையும் வரையில் நான் ஆட்சியை விட்டு போக மாட்டேன்.


ராஜினாமா , இறுதி வேண்டுகோள், பேரணி அடுத்தது என்ன ?

இருங்க . அகராதியை தான் பார்க்கணும். கடைசி மன்றாடுதல் நு வெச்சுக்குங்க. நம் உடன் பிறப்புகள் சத்திய மூர்த்தி பவனை சுற்றி அங்கப்ரதட்சனம் செய்வார்கள். மறக்காமல் இந்த போராட்டத்துக்கு நிதி அளியுங்கள்.


இலங்கை பிரச்சினையை நீங்கதான் தீர்க்கணும் என்று ராஜிவ் காந்தி சொன்னாரா?

ஆமாம் சொன்னார்.

இதற்கு சாட்சி ஏதாவது இருக்கா?

முரசொலி மாறன் பக்கத்தில் இருந்ததாக ஸ்டாலின் சொல்லி இருக்கார். அதை படித்து பாருங்கள்.


அவங்க ரெண்டுபெரும் தான் போய்ட்டாங்களே ? யாரிடம் இதை கேட்பது?

வேண்டுமானால் சோனியா காந்தியிடம் கேட்டு பாருங்கள். பக்கத்தில் இருந்த தங்கபாலுவையும் கேட்டு பாருங்கள்.


இலங்கை பிரச்சினைக்கு என்ன தீர்வு ? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ?

அது தன்னாலேயே தீர்ந்துவிடும். இன்னும் ரெண்டு லட்சம் பேர் தான் மிச்சம் இருக்காங்களாம்.


தமிழ்கத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலினா?

ஆமாம். ஸ்டாலினே தமிழ்நாட்டிற்கு முதலமைச்சரா வரணும் என்று பல வருடங்கள் முன்பு பெரியார் கூட சொன்னார்.


தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரிப்பது தவறா?நிச்சயமாக சட்டப்படி தவறுதான்.


அப்படி ஆதரிப்பவர்களுடன் கூட்டணி வைப்பது ?
தேர்தல் கொள்கை கூட்டணி தவறல்ல. சோனியாவே வைகோவுடன் கூட்டணி வைக்கலியா என்ன?

4 Comments:

At 12:59 PM, Blogger சின்னப் பையன் said...

:-)))))))))))))

 
At 5:26 PM, Anonymous Anonymous said...

super.

 
At 5:46 PM, Blogger ttpian said...

ரொம்ப ரொம்ப வயித்தை வலிக்கிரது....
மாமாவும்,மாமியும் உஙலை உதைக்க வாஇப்பு உள்ளது

 
At 5:46 PM, Blogger ttpian said...

ரொம்ப ரொம்ப வயித்தை வலிக்கிரது....
மாமாவும்,மாமியும் உஙலை உதைக்க வாஇப்பு உள்ளது

 

Post a Comment

<< Home