திமுகழக மாதிரி கடிதம்
உடன்பிறப்பே,
நாம் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் காட்டிய வழியிலே நீண்ட நெடு நாட்களாக கழகத்தை கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நடத்தி வருகிறோம்.
இந்த நெடிய பாதையில் நம் முதுகில் குத்திய வஞ்சக நரிகளின் எண்ணிக்கை ஏராளம். நாம் போட்ட பதவி பிச்சையில் நேற்று வரை அனுபவித்த ---------------------------------- ( சி,பி.எம்/ மதிமுக /வி.சி. /பாமக/கான்க்ரசு/பாஜக ) இன்று ஆரிய மாயையில் விழுந்து --------------------------- மதவெறி / பண்ணையார்கள் /பார்ப்பனிய
கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்கள். இவர்கள் ------------------------ (சிறுதாவூர் / சேது /ராமர் கோயில் /டாஸ்மாக் ) பிரச்சினையில் அதிமுகவை எதிர்த்தது நினைவு இருக்கலாம். ஆரிய திராவிடப் போராட்டம் ராமாயணக் காலத்திலேயே இருந்தது. நான்
சூத்திரனாக இருப்பது பலர் கண்களை உறுத்துகிறது. அடுத்து தினமலர் ஐயரின் தபால் தலை வெளியீட்டுக்கு போக நேரமாகிவிட்டது. கலைஞ்சர் டிவியின் போர்டு கூட்டம் வேறு இருக்கு. ஆகையால்
மானாட, மயிலாட காணத தவறாதீர்கள்.
வாழ்க திராவிடம்.
மு. க.
தேதி --------------
(குறிப்பு - அறிக்கையை அச்சிடும் முன் தேதிக்கு ஏற்ப கோடிட்ட இடங்களில் நிரப்பவும் )
0 Comments:
Post a Comment
<< Home