போட்ட வாக்கை திரும்ப பெரும் உரிமை வேண்டும்
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. கட்சிகள் கொள்கை வேறு, தேர்தல் வேறு என்று வித வித மான வாதங்கள் வைத்து மக்களை ஏமாற்றும் காலம். தேர்தலுக்கு முன்பு இப்படி ஏமாற்றும் கட்சிகள் தேர்தலுக்கு பின் தங்கள் விருப்பப்படி கூட்டணியை மாற்றி அமைக்கும். ஒரு முறை ஒட்டு போட்டால் அடுத்த ஐந்து வருடத்துக்கு குறுநில மன்னர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்யலாம். பிரணாப் முகர்ஜியைப் போல திமிராக பேசலாம். இதற்கு பழைய மன்னராட்சியே தேவலை. மன்னர்களுக்கு கொஞ்சம் அதிக பொறுப்பு இருந்தது. எதிரியிடம் மாட்டிக்கிட்டால் கதை முடிந்துவிடும். இந்த போலி ஜனநாயகத்தில் சண்டை போடஏதாவது ஏழை ராணுவ வீரன் கிடைப்பான்.
இது இப்படியே போனால் விரைவில் எல்லா மாநிலங்களும் காஷ்மிஇர் போல ஆகும். மக்களுக்கு போட்ட ஓட்டை திரும்ப பெரும் உரிமை இருந்தால் மட்டுமே ஓரளவு ஜனநாயகம் வளரும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு நிச்சயம் மக்கள் ஆதரவு இருக்கும், ஆனால் சட்டம் இயற்றும் உரிமையை கட்சிகள் கையில் வைத்திருக்கிறது. அரசியல் சட்ட திருத்தம் செய்ய, இதற்காக பொது நல வழைக்கு போடலாமா? இந்திய மக்களிடம் ஆதரவு கையெழுத்து வாங்கலாம். விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.சட்டப்படி வேறு என்ன வழிமுறை இருக்கிறது ?
1 Comments:
நல்ல சிந்தனை, வாழ்த்துக்கள்...!
தங்களது கருத்துக்களை வழிமொழிகிறேன்!
Post a Comment
<< Home