பால் விலை 5 டாலர் கேசலின் விலை 3 டாலர்
அமெரிக்காவில் ஒரு கேலன் பால் சில மாநிலங்களில் 5 டாலர் வரை உயர்ந்திருக்கிறதாம்.
இந்த விலை உயர்வுக்கு காரணம் விட்டலாச்சார்யா கதை போல போகிறது.
பெட் ரோலியம் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது.
பெட் ரோலியம் விலையை குறைக்க எத்தனால் தயாரிப்பில் இறங்கியுள்ளார்கள்.
சோளத்திலிருந்து எத்தனால் தயாரித்ததால் சோளம் விலை உயர்ந்தது.
சோளம் விலை உயர்ந்ததால் பாட்டு தீவனம் விலை உயர்ந்தது.
மாட்டு தீவனம் விலை உயர்ந்ததால் பால் விலை உயர்ந்தது.
அது மட்டும் இல்லை. சோளம் விதைக்க உரம் அதிகம் தேவைப்படுவதால் மீண்டும் பெட் ரோலிய பொருட்கள் அதிகமாக வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு முழு வட்டம் வந்துவிட்டதா?
எத்தனாலோ, பாலோ ஊத்தி கார் ஓட்டலாம். எத்தனாலோ பெட் ரோலோ பயன்படுத்தி காபி போடமுடியுமா?
3 Comments:
உங்கள் வருத்தம் காபி கிடைக்கவில்லை என்றா இல்லை, மக்கா சோளம் கிடைக்க வில்லை என்றா?.
அங்கே எல்லாம் பால் விலை மேல போனாலும் யாரும் கவலைப்பட மாட்டங்களே , எல்லம் கருப்பு காப்பி குடியர்கள் ஆச்சே! நம்மாளுங்க தான் கள்ளிபால் போல திக்கா பில்டர் காபி குடிப்பாங்க.(கள்ளிபால் குடிச்சா உடம்புக்கு எதுவும் பண்ணுமா?)
இது ஒரு வீணாப் போன ஊருங்க... எதுவும் நடக்கும்!
paal vilayal cheese, pizza ellam uyarudham.
aanalum ore oru aal lorry pola truck ottuvadhu karaindhirukka parunga!
Post a Comment
<< Home