ullal

Wednesday, October 10, 2007

ரிடையர் ஆக வேண்டிய பெருசுகள்-சங்கராச்சாரி, சோ, சுஜாதா

ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் கருணாநிதியோடு இன்னும் நிறைய பேர்இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தது இந்த இருவர். விரைவில் ஞானி இவர்களைப் பற்றியும் எழுதுவார் என்று நினைக்கிறேன்.
இந்த ஜெயேந்திரரும் எவ்வளவு நாள்தான் சங்கராச்சாரியாக இருப்பார்?இவருக்கு வயது எழுபதை தாண்டியிருக்குமென்று நினைக்கிறேன். இவர்பெறாத பரிசுகளோ, கனகாபிஷேகமோ இல்லை. இவர் பெறாத அவதூறுகளும் இல்லை. இவர் மேல் போலீஸ் வழக்கு போடாத செக்க்ஷனும்இல்லை.இவர் ஏறாத கோர்ட்டும் இல்லை. இவர் 'மக் ஷாட்' வராதபத்திரிகையும் இல்லை. இன்னும் எத்தனை நாள்தான் இந்த சங்கராச்சாரிஎன்ற முட்கிரீடத்தை சுமந்து திரிவார்.? அடுத்த பெரியவாக்கு வழி விட்டுவிட்டுக்ருஷ்ணா, இந்த்ரா என்று காலம் தள்ள வேண்டிய வயதில் இவருடைய பக்தர்கள் இவரை இப்படி துன்புறுத்தலாமா?

ரிடையர் ஆக வேண்டிய இன்னொருவர் சிரந்த நகைச்சுவை நடிகர்,பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்று எல்லா பரிமாணங்களிலும் கலக்கிய திரு.சோ. இவருக்கும் வயது எழுபதை தாண்டி இருக்குமென்று நினைக்கிறேன். இவர் பெறாத பாராட்டுகளும் இல்லை. சகுனி,சோமாறி என்று இவர் வலையுலகில் பெறாத வசவுகளும் இல்லை. இவர்பல காலமாகவே உளறி வந்தாலும், சமீபத்தில் கொஞ்சம் அதிகமாகவேஉளறி வருகிறார். யாராவது பேட்டி கண்டால் புஷ்பக விமானம், ராமர்பாலம் என்று முட்டாள்தனமாக உளறுகிறார். போயிங் விமானத்தைபார்த்தால் அதோ நம் வேத காலத்து புஷ்பக விமானம் என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். குழந்தைகள் எங்காவது பாலம் கட்டி விளையாடினால் "ஐ, ஸ்ரீராமர் கட்டிய பாலம்" என்று தொட்டு வணங்குகிறார். குமுதம் தான் இன்னும் எத்தனைவருசத்துக்கு சோவின் பேட்டியை போடும்? அடுத்த தலைமுறையில் இவர் இடத்தை எஸ்.வி.சேகர் போன்ற லூசுகளிடம் கொடுத்துவிட்டு இவர் ஏன்வீட்டில் ஓய்வெடுத்து ராமாயணம், மகாபாரதம் படிக்கக்கூடாது?


ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் அடுத்ததாக இருப்பது எழுத்தாளர்,பொறியியலாளர், சினிமா கதாசிரியர் திரு சுஜாதா. இவரும் பல விதமான கதைகளை ஆங்கிலத்திலிருந்து காப்பியடித்து எழுதிவிட்டார். இவரைபாராட்டுபவர்கள் பலர். இவர் வசனம் எழுதிய பாய்ஸ் திரைப்படத்தை திட்டாத ஆட்களே இல்லை. இன்னமும் எழுபது வயதைத் தாண்டி அயோக்கியா மண்டபம் போல அயோக்கியத்தனமான கதைகளைஎழுதிக் கொண்டிருக்கிறார். இந்த அயோக்கிய வேலையை அடுத்ததலைமுறை எழுத்தாளர்களுக்கு இடம் விட்டு விலகி க்கொண்டு ஏதாவது இன்க்லீசு படம் பார்த்து காலத்தை ஓட்டலாம்.

இவர்களுடைய ரசிகர்கள் இது குறித்து தீவீரமாக சிந்திக்க வேண்டும்.

16 Comments:

At 7:23 AM, Blogger பெருசு said...

//ரிடையர் ஆக வேண்டிய பெருசுகள்//

அப்பாடி என்னைச் சொல்லலை

 
At 1:22 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

:))))

நிசம் தான் ஆதிரை. கலக்கல் பதிவுக்கு வாழ்த்துக்கள். :)

 
At 1:24 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

தோழி, பின்னூட்டங்களை மட்டுறுத்தி வெளியிடுவதால்.. Word Verification- ஐ தூக்கி விடுங்கள்.

தாவூ தீருது. :(

 
At 5:18 PM, Anonymous Anonymous said...

இவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தது?

சோ, சுஜாதா ஆகியோரை பிடிக்காவிட்டால் அவர்களது எழுத்துக்களை வாசிக்காதீர்கள்.

நீங்களாகவே அவர்களது எழுத்துக்களைப் படிக்கிறீர்கள், பின் குறை சொல்கிறீர்கள்.

சுஜாதாவின் வசனம் என்றால் அந்த படத்தை பார்க்காதீர்கள்.

அவர்கள் யாரும் உங்களை படிக்க-பார்க்கச் சொல்லி வற்புறுத்தவில்லயே!

சங்கராச்சாரியாரை பிடிக்காவிட்டால் காஞ்சி மடத்திற்க்கு போகாதீர்கள்.

 
At 6:51 PM, Blogger ஜோ/Joe said...

:)))))))

 
At 12:21 AM, Blogger Gurusamy Thangavel said...

Good post Aathirai.
Bala bharathi - What is the meaning of "தாவூ தீருது"? :)

 
At 2:36 AM, Anonymous Anonymous said...

இன்னொரு பெருசு ஞாநி

 
At 11:35 PM, Blogger K.R.அதியமான் said...

While we may have difference of opinion with Cho, you mustn't forget the fact that he is one of the rare journalisits who opposed Indira Gandhi's draconian emergency in 1975-77 at great personal courage and forthrightness. Difference of views or idealogy is one thing ; but outrightly rejecting all his views as biased or blabberings is not rational. he is a multi-varioius personality : actor, dramatist, director, author and journalist. he is now 73 and still going strong. Will you be so active and involved at his age ? doubtful.

and yes, Sujatha has indeed written vulgar and unacceptable works and film - dialogues. but he too is a versatile genius and has the distinction of introducing tamils to computers and electronics in the 70s itself. his simple and lucid writings about technology, science and tamil literature for beginners, etc is appreciable. I have read almost all his works since early 80s and i cannot accept that he is a plagiarist. his originality is well know. he could have avoided sexisit dialogues. that's all.

One day you too will reach 70 age and the next genration may taunt you with same words ; only then you will realise...

 
At 11:26 AM, Blogger கோபி said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

 
At 12:07 PM, Blogger Kanchana Radhakrishnan said...

oruvarai vimarisanam seivadharkumun naam adharkku thagudhiyanavara ena yosikkattum.Idhu ponra thanippatta muraiyil irukkum ungal vimarisanam ungaladhu paarpaniya veruppaiye kaattugiradhu

 
At 12:28 PM, Anonymous Anonymous said...

"ஈட்டி said...
இவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? "

"ஈட்டி said...
இவர்களால் உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? "


யோவ்! என்ன‌ தொல்லையா? நீ என்த‌ உல‌க‌த்தில‌ இருக்கிறாய்? மொட்டைக் க‌டுதாசி பெருசு சோ என்ன‌ செய்யுதா? . பார்ப்ப‌ண‌னைத் த‌விர‌
யார் என்ன‌ செய்தாலும் டில்லிக்கு மொட்டைக் கடித‌ம் போட்டு வ‌ம்பு ப‌ண்ணுற‌து க‌ண்ணுக்குத் தெரிய‌லையா? அம்மா வ‌ன்தா ஜ‌ல்ரா, ஐயா வ‌ன்தா வ‌ம்பு!. லூசுக் கூட்ட‌ங்க‌.

புள்ளிராஜா

 
At 10:58 AM, Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

Iyah varadhukku 1996le idhe mottathalaiyan CHO vin dhayavum vendi irundhadhu marandhu pochcha.andha therthalle dmk koottanikku Cho eduththa muyarchi marandhu ponadha? en nanri konrarkkum uyvundam...
T.V.Radhakrishnan

 
At 7:04 PM, Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

1996 therdhalle aiyah aatchikkuvara paarppanar CHo vum seida udhaviyai sowgariya marandhudaradhu nalla gunama.paarppanargal kariveppilai maadhiri.vendiapodhu pottukkolveergal vendavittal thhokki erivadhum vazhakkamaaga natakkaradhudhanee.
T.V.Radhakrishnan

 
At 4:25 AM, Blogger aathirai said...

அப்போது ஜெயலலிதாவை மட்டம் தட்டுவதற்காக சோ & கம்பெனி
இப்படி செய்தது.தானாக வருகிற உதவியை கலைஞர் பயன்படுத்திக்கொண்டார்.
அது அவர் திறமை.

 
At 7:29 PM, Anonymous Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் கருத்தை சொல்வதற்கும் வயது தேவை என்கிறீர்களே..கருணாநிதி, சங்கராச்சாரியார், பரவாயில்லை...ஆனால் சோ, சுஜாதா பற்றி நீங்கள் சொன்னது தவறு என்றே கருதுகிறேன்.

 
At 8:23 AM, Anonymous Anonymous said...

//Iyah varadhukku 1996le idhe mottathalaiyan CHO vin dhayavum vendi irundhadhu marandhu pochcha.andha therthalle dmk koottanikku Cho eduththa muyarchi marandhu ponadha? en nanri konrarkkum uyvundam...
T.V.Radhakrishnan//

ஐயா ஆட்சி வந்ததும் "சங்கரராமன் கொலை" பற்றிய வழக்கை கிடப்பில் போட்டபட்டிருக்கிறதே...சங்கராச்சாரி ம்ற்றும் பலான் பெரியவா வெளியில் இருக்கிறார்களே...நன்றி மறந்துவிட்டதா...?

-- சங்கரராமன் ஆவி

--

 

Post a Comment

<< Home