ullal

Tuesday, September 25, 2007

சீதைக்கு ராமன் சித்தப்பா

தசரதனுக்கு பதிலாக அவன் தம்பிக்கு பட்டம் சூட்டியதால் வெறுத்துபோனான். தசரதனின்
தம்பிக்கு ராவணன் (thaoloun lao) பிறந்தான். இவனை யாராலும் வெல்ல முடியாத
அளவு சக்தி படைத்தவன். இவனை போதிசத்வரால் மட்டுமே கொல்ல முடியும்.
ராவணன் தன் பெரியப்பா மகளான (nang chandha) வை தன் அரண்மனையில்
கொண்டு வைத்திருந்தான். தசரதனுக்கு புத்தரின் அவதாரமாக ராமன், இலட்சுமணன்
என்று இரட்டையர் பிறந்தனர். இவர்கள் தங்கள் சகோதரியை ராவணணிடமிருந்து மீட்க
அவனுடன் போர் செய்தனர். என் கணவனை கொன்று விடாதீர்கள், மன்னித்து விடுங்கள்
என்று சீதா ராம லட்சுமணரிடம் கெஞ்சினாள். அதனால் அவர்கள் ராவணணை
மன்னித்து விட்டார்கள். இதற்கு பரிசாக ராவணன் நீரிலும், விண்ணிலும், நிலத்திலும்
போகக்கூடிய படகை ராமனுக்கு கொடுத்தான். ராம லட்சுமணர்கள் நிறைய
பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். ராமர் திருமணத்தில் ராவணனும்
கலந்து கொண்டான்.

ராவணன் இலங்கையில் சென்று தங்கினான். அவன் மனைவியின் மறு
அவதாரமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது (nang sida) . பிறந்தவுடனேயே
அவள் ராவணனை கொல்லப் பார்த்தாள். அதனால் அவளை தண்ணீரில் வைத்து
அனுப்பி விட்டான் ராவணன். ராவணன் சீதையை தன் மகள் என்று தெரியாது
அவளை விரும்பினான். அவளை மணக்க வில்லை எடுக்க
முயற்சி செய்து தோல்வி அடைந்தான். ஒரு ரிஷி இவனுக்கு சீதாவைப் போலவே
ஒரு பெண்ணை உருவாக்கி கொடுத்தானாம். ஆனாலும் அவனால் சீதையை
மறக்க முடியவில்லை. ராமன் வந்து வில்லை எடுத்து, சீதையை மணம்
செய்து கொண்டான்.

பின்னர் வழக்கமான கதை... சீதையை ராவணன் கொண்டு செல்ல
ராமன் போருக்கு போனான். அப்பொழுது பாலம் கட்டினார்கள். ராவணனை வென்று
சீதாவை மீட்டு வந்தார்கள். அரண்மனையில் ஒரு நாள் சீதா ராவணனின்
படத்தை வரைந்தாள். கோபம் வந்து ராமன் சீதாவை சிரச்சேதம் செய்யச்
சொன்னான். பின்னர் லட்சுமணனின் உதவியுடன் சீதா தப்பிச் சென்றாள்.

ஆக... சீதைக்கு ராமன் சித்தப்பா.சரிதானா?

2 Comments:

At 11:35 AM, Blogger வவ்வால் said...

இது எந்த ஊரு கதை(சீனா, திபெத்?), அனேகமாக உங்கள் தலைக்கு விலை வைக்க வேதாளம் வருவார் :-))

 
At 3:27 AM, Blogger aathirai said...

வவ்வால்,
இது தாய் ராமாயணம், இந்த கதையில் பயங்கர ஹீரோயின்
பஞ்சம் போல இருக்கு.

 

Post a Comment

<< Home