ullal

Monday, September 17, 2007

2011 இல் நானே முதல்வர்

சமீபத்தில் இந்த 2011இல் நானே முதல்வர் என்று கோஷம் போடற லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது. லிஸ்டில் முதலில்இடம் பிடித்தவர் தமிழ்குடிதாங்கி. ஏற்கெனவே இருக்கும் கட்சிகளால் நொந்து போயிருந்த மக்களை பயன்படுத்திக்கொள்ள சரியான நேரத்தில் குதித்தார் நம் கேப்டன். இது போதாது என்று நம்ம நாட்டாமையும் களத்தில் குதிச்சார். இவங்கெல்லாம் முதல்வர் கனவு கண்டா நான் சும்மா இருப்பேனா என்று தட்டி பார்த்த கொட்டாங்குச்சியோடு நம்ம டி.ஆரும் குதிச்சுட்டார். இதுல யார் எந்த கட்சியோட உள் ஆளுன்னு வேற புரியமாட்டேங்குது.


இன்னும் குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் குதிப்பதற்குள் ,இந்த பொன்னான நேரத்தில் நான் ஏன் 2011 இல் முதல்வராகக்கூடாது? தமில்நாட்டை தமிலந்தான் (அல்லது தமிலி) ஆள வேண்டும்என்பதுதான் எம் கட்சியின் கொள்கை. அதனால் நானே 2011 இல் முதல்வராக் போறேன். வலைப் பதிவு மக்களே உங்கள் பொன்னான வாக்குகளைஎனக்கே போட்டு அப்படியே உங்கள் சொந்த பந்தங்களிடையே நம் கட்சியின்பெயரை பரப்புங்கள்.


சரி கட்சிக்கு பேரு வேணுமே. அ.உ.வ.த.தி.தே கழகம் அகில உலகவலைப்பதிவு தமில திராவிட தேசிய கழகம். நியாபகம் வெச்சுக்க கஷ்டமாஇருந்தா நம்ம கட்சி சின்னமான 'எலிக்குட்டி'யை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.(ஒரிஜினல் எலி இல்லை. கம்ப்யூட்டர் எலி).


விளம்பரத்துக்கு இருக்கவே இருக்கு நம் தமிழ்மணம் மற்றும் வேலையத்தகுமுதம் ரிபோர்ட்டர். இப்ப கட்சிக்கு தொண்டர்களும், கொஞ்சம் கொளுகைகளும் வேணும். பரவாயில்லை. இணையத்திலிருந்து கொளுகைகளை cut and paste பண்ணிக்கலாம்.நம்ம பொருளாதார கொளுகை ரொம்ப புரட்சிகரமானது. தமில்நாட்டில்அனைவருக்கும் வீட்டுக்கு ஒரு ஐ.டி வேலை. எல்லாரும் ஐ.டி. வேலை செய்துவிட்டு,மற்ற பொருள்களை பஞ்சாப் அல்லது மும்பையிலிருந்து இறக்குமதி செஞ்சுக்கலாம். அம்புடுதேன்.

வீட்டுக்கு வீடு open source நிரலிகளை டவுன்லோட் செய்து ஒருசிடியில் போட்டு வினியோகிப்போம்.அப்பப்ப ஏதாவது விழா எடுப்போம். வலைப்பதிவு கூட்டங்களுக்கு போண்டா இலவசம்.


ஆ. அரசியல் செய்ய எதையாவது எதிர்த்து குரல் கொடுக்கணுமே. அமிஞ்சிக்கரை வாராவதி மேலிருக்க பாலம் பாட்டனுக்கு பாட்டன் காலத்துல அகத்திய முனிவர்கட்டினதுன்னு ஒரு போராட்டம் செஞ்சுடலாம்.'வாராவதி பாலம் பாதுகாப்புஇயக்கம்' ஆரம்பிச்சுடலாம்.


கழகத்தில் கொ.ப.செ, இளைஞர் அணி தலைவர், வட்ட, மாவட்ட செயலாளர்போஸ்ட்டுகள் காலியா இருக்கு. first come first serve அடிப்படையில்பதவிகள் ஒதுக்கப்படும். ஆகவே அ.உ.வ.த.தி.தே. கழகத்திற்கு திரண்டு வாருங்கள்.அப்படியே ஒரு லெட்டர் பேடும் கொண்டு வரவும். கட்சித் தலைவிக்கு ஒரு நல்ல பட்டப்பெயரும் கொண்டு வாருங்கள். நல்ல பெயர் சொல்பவருக்கு ஒரு எலிக்குட்டி பரிசு.

2 Comments:

At 10:43 AM, Blogger Thamizhan said...

முக்கிய தகுதிகள்
வீட்டில் தமிழ் பேசக்கூடாது.
அப்பா,அம்மா யாராவது ஒருவராவது தமிழராக இருக்கக் கூடாது.
வேறு மாநிலங்களில் சொந்த பந்தங்கள்,முக்கியமாக நிறைய சொத்துக்கள் பதுக்கி வைத்திருக்க்க்க்க(நிறைய) வேண்டும்.

யாராவது நடி்கரோ,நடிகையோ காதலராக அல்லது மாஜி காதலர்/காதலியாக இருந்திருப்பது கட்டாயம்.
பொருள் ,தொண்டர்,மாலைகள்,வேறு எது வேண்டுமானலும் இளிச்சவாய்த் தமிழர்கள் குடும்பத்துடன் வந்து காலில் விழுந்து வணங்கி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.இன்னும் உடலாலும்,உள்ளத்தாலும் சேவை செய்திட படித்த,பட்டங்கள் பெற்ற மடையர்கள் பெரிய பட்டாளமாகவே தமிழில் அழகாகப் பட்டி மன்ற ரேஞ்சிலே பேசவும்,உறவினரைக் கொடுத்தும் சேவை செய்திடவும் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறார்கள்.

 
At 4:28 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. எல்லாப் பதவியும் இன்னும் காலியாத்தான் இருக்கு போலயே..

எலிக்குட்டி கொடுக்கும் எங்கள் செம்மல் புரட்சிக் கலைஞி ஆதிரை அம்மா! வாழ்க..

யக்கா, எந்தப் போஸ்ட்னாலும் பரவாயில்ல.. பார்த்து போட்டு கொடுங்க ;)

 

Post a Comment

<< Home