கலைஞர் in full form,தினமலரின் பொய்கள்
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: ராமர் பாலத்தை இடிக்க விட மாட்டோம். அப்படியே மீறி இடித்தால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அந்த அதிகாரிகளை தண்டிக்காமல் விட மாட்டோம்என உமாபாரதி பேசியுள்ளாரே..
கருணாநிதி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு பாஜக கூட்டணி அரசு அனுமதி அளித்தபோது, அந்த அமைச்சரவையில் உமாபாரதியும் இடம் பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு உயிர் இருந்ததா என்பது தெரியாது
கேள்வி: திமுகவுடன் சித்தாந்தப் போர் தொடங்கியிருப்பதாக இல.கணேசன் கூறியுள்ளாரே..
கருணாநிதி: அவர்கள் நிலைக்கு அவர்களால் போர் (ஆழ்துளைக் கிணறு) தான் போட முடியும்.போரிட முடியாது.
கேள்வி: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புகிறீர்கள், ஆனால் ராமரை நம்ப மாட்டீர்களா என்று உங்களைப் பார்த்து விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே.
கருணாநிதி: எனது பூம்புகார் படத்தில் கடைசிக் காட்சியை எப்படி வைத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றார் கருணாநிதி.
(பூம்புகார் - கடைசி காட்சியில் கண்ணகியின் காலில் குத்து விளக்கு தட்டி, அதனால் அரண்மனையும் மதுரையும் எரிந்து போகும். குத்துவிளக்கு இப்படி ஒரு பயங்கர அழிவு ஆயுதமா, அப்படிப்பட்ட விளக்கை சாதாரணமாக நாட்டில் வைத்திருப்பார்களா என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். )
உங்கள் தலையை வெட்ட சொல்லவில்லை என்று வேதாந்தி மறுத்துள்ளார். பிறகு எதற்கு அவரை கைது செய்ய வற்புறுத்துகிறீர்கள்?
அவர் பகவத் கீதையை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நான் சொல்ல வில்லை. பகவத் கீதை தான் சொல்லி இருக்கிறது என்கிறார்.(இது என்ன கதை, வலைப்பதிவாளர்களே?)
இன்றைய தினமலர் பொய்கள்
--------------------------------------
1. கருணாநிதியை 'விமர்சித்த' வேதாந்தி
2.சேது சமுத்திர கால்வாய் திட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிராகச் செயல்பட்டு வரும் மதவெறிக் கூட்டத்தை சார்ந்த ஒருவர் தி.மு.க., தலைவரின் தலை, நாக்கையும் அறுத்து வருபவருக்கு அதற்கு ஈடாகத் தங்கம் பரிசளிக்கப்படும் என்று பேசியதன் மூலம் மதவெறி துாண்டப்பட்டுள்ளதால், ...
(அடப்பாவமே எந்த அமைப்பு என்று கூட தினமலர்காரனுக்கு தெரியாதா?)
2 Comments:
நீங்களும் "FULL" form-ல் இருப்பதாக தெரிகிறது. இல்லையென்றால், தானே "கேள்வி" கேட்டு அதற்கு தானே பதிலும் எழுதி அதை பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பதை "செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள்" என்று சொல்வீர்களா ?
இதை "கேள்வி-பதில் அறிக்கை" என்று பத்திரிகை வட்டாரங்களில் அழைக்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று அன்பரே.
விழிமின்.
அன்புடன்
முத்துக்குமார்
ethaiyum oru thalaipatchamaga yosikkakkoodadhu.kalaignar raman oru engineera enru kettadhu thappudhane.hindukkal ulla naattil oru state chief minister avargalin madha nambikkaiyai punpaduththalama?
Post a Comment
<< Home