ராமர் பாலம், ஏசி பஸ்சும் சின்னஞ்சிறு உலகம் நாகேசும்
இந்த ராமர் பாலம் என்ற ஆதாம் பாலத்தை இடிக்கக்கூடாது. வேறு வழியில் சேது திட்டத்தை நிறைவேற்றட்டும். கலைஞர் இதில் ஜகா வாங்கினாலும் ஒன்னும் குடி முழுகாது. வழக்கமா விழற ஓட்டு விழப் போகுது. யாருமே பல வருசமா கண்டுக்காத ராமர் பாலத்துக்கு திடீர்னு பூஜை என்ன, யாகம் என்னன்னு ஒரே அமர்க்களம். இவ்வளவு நாளா இந்த பாலம் அங்கேயேதானே இருக்கு? எந்த சாமியாராவது கடந்த நூற்றாண்டுகளில் அங்கே பூஜை செய்திருப்பார்களா? முழுகிப்போகும்கப்பல் பயணிகள்(காவி கோஷ்டி) கிடைச்சதை விடக்கூடாத்ன்று இந்தபாலத்தை பிடித்து தொங்குது. நீயே வெச்சுக்கோ உன் பாலத்தை என்றுகொடுத்துவிட்டால், சீ வேணாம் என்று ஓடிப் போய்விடுவார்கள். மீண்டும்பல வருஷத்துக்கு எவனும் இந்த பாலத்தை பூஜை, யாகம்னு தீண்டப்போறதில்லை. நாமும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.
சின்னஞ்சிறு உலகம் படத்தில் நாகேஷ் எதை பார்த்தாலும் அழுவார்.கல்யாண வீட்டுக்கு போனால் கல்யாண வீடு தீப்பற்றி எரிந்தால் என்ன ஆகும்னு செனைச்சு அழுவார். இந்த கதையின் இத்தாலிய வடிவம்சமீபத்தில் படித்தேன். ஒரு கல்யாணப் பெண் ஒயின் பாட்டில் எடுக்கபோவாள். அங்கு கிடக்கும் கண்ணாடி சில்லை பார்த்துவிட்டு அழுவாள். அவளுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்து ஏழு வருடம்ஆகி அந்த கண்ணாடி கீறி குழந்தை இறந்தால் என்ன ஆகும் என்று கற்பனைசெய்து அவளும், அவள் குடும்பத்தாரும் சேர்ந்து அழுவார்கள்.
எனக்கும் சென்னையில் புதிதாக ரிலீசாயிருக்கும் ஏசி பஸ்ஸை பார்த்து மகிழ்ச்சியை விட வருத்தம் தான் வந்தது. இந்த பஸ் இவ்வளவுஅழகா இருக்கே, இந்தியா வெளிநாடு போல ஆயிடுமா என்று யோசிக்கிறவேளையில், நம் உடன் பிறப்புகளின் நியாபகமும் வந்து தொலைக்கிறது.யாரவது ஒரு தலைவர் மோட்சத்துக்கு போனால் பத்து பஸ்ஸாவதுகல்லடி படுமே! கொடநாட்டில் நடவடிக்கை எடுத்தால் சென்னையில்பஸ் பத்தி எரியுமே! எங்கம்மாவே தோத்தப்புறம் உங்களுக்கு சொகுசு பஸ்கேக்குதா என்று உடன்பிறப்புகள் கொந்தளிக்கும்போது இந்த பஸ்சுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க போகிறார்கள்?
4 Comments:
Private not for publication:
Did you get the Microsoft Bhashaindia award delivered to you? I never got mine.
//நீயே வெச்சுக்கோ உன் பாலத்தை என்றுகொடுத்துவிட்டால், சீ வேணாம் என்று ஓடிப் போய்விடுவார்கள். //
TRUE.. :)))
பின்னூட்டம் இட்டவரே,
மைக்ரொசாப்ட் பாஷா அவார்ட் வந்து சேரவே இல்லை.
சொல்லி வாய் மூடலை. பெங்களூரில் பஸ் எரிச்சுட்டாங்க. :(
Post a Comment
<< Home