சுந்தரப்பாண்டி தேவரின் 500 மனைவிகள்
மார்கோ போலோ பயணக் குறிப்புகள் இரண்டாம் பாகத்திலிருந்து சில குறிப்புகள்
(Author: Marco Polo and Rustichello of Pisa )
1. 'மாபாரை'ப் பற்றி - http://www.susqu.edu/history/medtrav/MarcoPolo/travel.htm
மார்கோபோலோ சிலோனிலிருந்து மாபார் வந்தபோது இங்கிருந்த மன்னன்சுந்தரபாண்டி தேவர். (SONDER BANDI DAVAR.)
மாபாரில் 'டெய்லர்' களே இல்லை. எல்லோரும் பெரும்பாலும் நிவாணமாக திரிகிறார்கள்.(naked) ஒரு துண்டு துணிதான்; ஆண், பெண், ஏழை, பண்க்காரன், அரசனுக்கும் இதுதான்உடை.
அரசன் இடுப்பில் மெல்லிய ஆடை அணிந்திருக்கிறான். கழுத்தில் நவரத்தினஆபரணங்கள், ஜெபம் செய்வதற்கு முத்து மாலை. (டெய்லர் என்ற வார்த்தையே இந்தியாவில் எந்த மொழியிலும் இல்லை) முத்து மாலையை கொண்டு 104 முறை 'பச்சோதா, பச்சோதா'என்று ஜெபம் செய்கிறார்கள். ("The word ... was probably _Bagava_ or _Pagava, ..)
மன்னனுக்கு 500 மனைவிகள். ஏதாவது அழகிய பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டால் உடனேதிருமணம் செய்து கொண்டுவிடுவான். அவன் தம்பியின் மனைவியையும் தன்னுடையதாக்கிக்கொண்டவன்.
அரசனைச் சுற்றி அவன் விசுவாசிகள் இருக்கின்றனர். அரசன் இறந்தபின் இவர்களும் உடன்கட்டைஏறினார்கள். கணவன் இறந்த பின் மனைவிகளும் அவர்களுடன் உடன்கட்டை ஏறினர்.(ஓ.இதனால்தான் நம்மூரில் அரசியல் தலைவர்களுக்காக சிலர் தீக்குகுளிக்கிறார்கள் போல.) கடுங்குற்றம் செய்தவர்கள் ஊரைச்சுற்றி வல்ம் வருவார்கள். 12 கத்திகளுடன் தாங்களே குத்திக்கொண்டுசாமிக்கு பலியாகிவிடுவார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கிறார்கள். (மாதம் மும்மாரி பெய்ந்ததால் இருக்கும்)குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. மது குடிப்பதில்லை. ஆனால் பாலியல் குற்றங்களை பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை.
ஒருவன் கடன் வாங்கிவிட்டு திரும்பி கொடுக்காவிட்டால் கடன் கொடுத்தவன் அவனைச் சுற்றிஒரு வட்டம் வரைந்துவிடுவான். அந்த வட்டத்துக்குளிருந்து வெளியே வரக்கூடாது. அரசனும்கூடஇந்த வட்டத்துக்கு கட்டுப்பட்டவன். அவனுக்கு வேறு ஏற்பாடு செய்யாமல் வட்டத்தைவிட்டுவெளியே வந்தால் கடும் தண்டனை (citibank, மார்வாடிகள் கவனிக்க)
ஆண் குழந்தைகளை 13 வயதுக்கு மேல் வீட்டில் வைத்துக்கொள்வதில்லை. அதற்கப்புறம் அவர்களேஉழைத்து சாப்பிட வேண்டியதுதான். (ஆஹா, இது இந்தியாவா, அமெரிக்காவா. காலேஜுக்கு பைக்எல்லாம் வாங்கி குடுக்க மாட்டாங்களா?)
மடத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட பெண்கள் கடவுளுக்கு முன் ஆடிப்பாடி அசைவஉனவு படைத்துவிட்டு போகிறார்கள். சாமி சாப்பிட்டு முடிக்கும் வரை அரை நிர்வாணமாக ஆடி பாடுகிறார்கள்.(all but naked). ஆண் கடவுள்கள் பெண்கடவுள்கள் மீது கோபமாக இருப்பதால், அவர்களை சாந்திப்படுத்த இந்த சடங்கு. இதற்கப்புறம் ஆண் கடவுள் சமாதானமாகிவிடுவார். (கிரேக்கத்திலும் இந்த பழக்கம் உண்டு. இவர்கள் பெயர் - lerodouloi . அங்கு ஆண்களும் பெண்களும் வீனஸ் கோயிலில் இப்படிவழிபட்டதாக பைபிள் சொல்கிறது)
போருக்கு போகும்போது வேலும், கேடயமும் தவிர நிர்வாணம்தான்? மிருகங்கள், பறவைகளைகொல்வதில்லை.
குதிரைக்கு வேக வைத்த சோறும், கறியும் கொடுக்கிறார்கள். அதனால்தான் குதிரைகள்செத்து போகிறது. :) வருடத்திற்கு 2000 குதிரைகள் இறக்குமதி செய்கிறார்கள்.
பணக்காரர்கள் அந்தரத்தில் தொங்கும் பிரம்ம்புக் கட்டிலில் தூங்குகிறார்கள். அதில் ஏறிபடுத்துக்கொண்ட பின் கயிறை இழுத்தால் கட்டில் மேலா போய்விடும். பூச்சிகள் தொந்தரவுக்காகஇப்படி அந்தரத்தில் தூங்கினார்கள்.