ullal

Wednesday, April 30, 2008

ஜெறேமியா ரைட் - அமெரிக்கா, அடிமைகள், ஹிரோஷிமா, மன்னிப்பு etc etc

http://www.youtube.com/watch?v=2lV8x_-Uk2c


ஒபாமா இனி ஜெயிக்க வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இவருடைய பேச்சில் யோசிக்க வேண்டிய பல கேள்விகள் இருக்கு

காலை உணவுக்கு அறுசுவை பயோடீசல் சமையல் குறிப்பு

காலை உணவுக்கு அறுசுவை பயோடீசல் சமையல் குறிப்பு

1 கப் எதனால்

1 தேக்கரண்டி எஞ்சின் ஆயில்

1 கப் போடேஷ் உரம்

1 தேக்கரண்டி ஆமணக்கு


மூன்றையும் நல்லா கலக்கி 2 நிமிடம் மைக்ரோவேவில் சுட வைத்து குடிக்கவும்.



http://www.cagle.com/news/CornFuel/main.asp

Thursday, April 17, 2008

அம்மா ஐ ஐ எம் மில் பாடம் நடத்த போகிறார்

அதிமுக தொண்டர்களின் அம்மா தமிழ்நாட்டில் ஒரு கோடி விளக்கு ஏற்ற வேண்டும் என்று கட்டளை இட்டதால் விளக்கு வியாபாரம் ஜோராக நடைபெறுவதால் விளக்கு வியாபாரிகளும் தயாரிப்பாளர்களும் பெரும் திரளாக மற்ற கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனால் திமுக, தேமுதிக , மற்றும் நீண்ட பெயர் கொண்ட சரத்குமார் கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இதனால் மற்ற வியாபாரிகள் கட்சி தலைவர்களிடம் இப்படி அறிவிப்பு வெளியிட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழ் நாட்டு மக்கள் ஹெலோவீன் கொண்டாடினால் விளக்குமாறு, பூசணி வியாபாரம் பெருகும். பன்னாட்டு கம்பெனிகளும், ஐஐஎம் நிறுவனமும் இப்படி ஒரு மார்க்கெடிங் உத்தியை நாங்கள் எந்த புத்தகத்திலும் படித்ததில்லை என்று வியக்கிறார்கள். விரைவில் அம்மா லாலுவின் வழியில் ஐ ஐ எம் நிறுவனத்தில் மார்க்கெடிங் பாடம் நடத்த போவதாக கேள்வி. சின்னம்மாவுக்கு விளக்கு தொழிலில் முதலீடு இருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கலைஞரின் மனைவி #2 மர வியாபாரம் செய்வதால் தமிழஅக மக்கள் மேசை நாற்காலி வாங்க சொல்லி அறிவிப்பு வெளியிடக் சொல்லி முதல்வரை நச்ச ரிக்கிறாராம்.


பி.கு - இந்த செய்தி கற்பனை தவிர வேறு எதுவும் இல்லை.