என் கடனை மன்மோகன் சிங் அடைப்பார் - ராஜு
ஒரு பாரதியார் கதையில் இப்படி வரும். ஒரு செட்டியார் இப்படி சொல்வார். நான் சொல்றது மட்டும் பொய்யா இருந்தா என் கடனெல்லாம் இந்த முசசந்தி பிள்ளையார் தீத்து வெப்பார். நம்ம ராமலிங்க ராஜு நான் கொள்ளையடித்தது மட்டும் உண்மையா இருந்தா என் கடனை மன்மோகன் சிங் அடைப்பார் என்று சொல்லி இருப்பாரோ?
இவங்க மோசமாக செய்த நிர்வாகத்துக்கு இந்திய அரசு 2000 கோடி கொடுக்க போகுதாம்.
இப்போதைக்கு வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறப் போகிறார்கள். புதுசா யாரும் வாடிக்கையாளர்கள் வரப்போவதில்லை. நிறுவனத்தில் பணம் இருக்கா , இல்லையா, எங்கு இருக்கு என்றும் தெரியாது.UK நிறுவனம் 1 பில்லியன் டாலர் கேட்டு வழக்கு போட்டிருக்கு. அமெரிக்க லாயர்கள் நாளொரு வழக்கும் பொழுதொரு கேசும் போடுகிறார்கள்.ஊழியர்களுக்கு ரொம்ப நாளைக்கு சம்பள உயர்வும் வராது.
அரசு கடனாக கொடுத்தாலும் பணம் திரும்பி வரும் வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை. அழியப் போற நிறுவனத்துக்கு எதற்கு தண்ட செலவு ? இலவசமா பணம் கொடுக்க போறாங்களா ? பதிலுக்கு சத்யம் பங்குகள் அரசுக்கு கொடுக்கப்படுமா ? சத்யம் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் ஆகப்போகுதா? இந்த விஷயத்தில் உள்துறை மந்திரி சிதம்பரத்துக்கு என்ன அக்கறை ? இவர் இன்னும் நிதி மந்திரியாக இருக்காரா ? பிஜெபியாவது சத்தம் போடுமா?
http://ibnlive.in.com/news/govt-plans-rs-2000crore-financial-aid-for-satyam/82663-7.html