சண்முகநாதா, நம்ம மன்மோகனுக்கு ஒரு லெட்டர் எழுதுப்பா .
மதிப்பிற்குரிய மாண்புமிகு ,
பிரதமர் ,
மன்மோகன் சிங் சமூகத்திற்கு,
கலைஞர் ,
நான்,
கருணாநிதி,
எழுதும் கடிதம். நடுவில் மானே தேனே போட்டுக்க.
.........
**********************************
இயக்குனர் சேரனின் அடுத்த திரைப்படத்திற்கு கதை ரெடி.
ஒரு மாநில முதலைச்சர் மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்காக பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.
பதில் வரவில்லை.
மீண்டும் அதே பிரச்சினைக்கு மீண்டும் முதலைச்சர் ,பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.
பதில் வரவில்லை.
மீண்டும் அதே பிரச்சினைக்கு கோரிக்கை வைத்து மீண்டும் முதலைச்சர், பிரதம மந்திரிக்கு
கடிதம் எழுதுகிறார்.
பதில் வரவில்லை.
இப்படி ஒரு நாற்பது கடிதங்கள் எழுதுகிறார்.
பதில் வரவில்லை.
கருணாநிதி எழுதிய கடிதங்களில் தில்லி, இந்தியா என்று வரும் இடத்தில்
தில்லி, சைனா என்று யாரோ விஷமத்தனமாக முத்திரை குத்திவிட்டதாக ஆங்கில பத்திரிகைகள் பரபரப்பு
செய்தி போடுகிறது.
கடைசி க்ளைமாக்சில் தான் சஸ்பென்ஸ் தெரிகிறது. தலைமை செயலக மெயில் ரூம் க்ளெர்க் முதுகு வலி காரணமாக ஆறு மாதமாக லீவுல போய் இருக்கார்.
*****************************
தேர்தல் முடிந்த கையோடு மலை ஏறிய ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.
பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது; துதிபாடிகள் மத்தியில்
உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை
வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது; தனக்குத் தானே
விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்
திமுக அரசின் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின்
மூலம் நிரூபித்து இருக்கிறார்.
என்னுடய மெஜாரிட்டி ஆட்சியில் எப்பொழுதும் நான் மற்றவர்களுக்குத்தான் கடிதம்
எழுதுவேன். தமிழ்கத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி
அதிக கடிதம் எழுதும் தற்பெருமைக்காக தனக்குத் தானே கடிதம்
எழுதிக்கொள்வதை பார்த்து தமிழ்கமே எள்ளி நகையாடுகிறது ......
**********************************
சந்திராயன் மிஷன் மாதவன் நாயர் சொல்கிறார். தமிழ்நாட்டு கடிதங்களை விரைவாக நேரடியாக தில்லிக்கு அனுப்புவதற்கு, அவற்றை நிலவுக்கு அனுப்பி அங்கிருந்து தில்லிக்கு போஸ்ட் செய்யலாம். (இவர் செவ்வாய் கிரகத்துக்கு நிலா வழியா போட்ட ரூட் மாதிரி ) -
பி.கு. - ஜோக் ( ஜோக்தானே !) படிச்சுட்டு பின்னூட்டம் போடாமல் போனால் ரத்த வாந்தி வரும்.