மசாலா
புரட்சித் தலைவி "ஏன் எல்லா மனநோயாளிகளும் என் வீட்டுக்கே படை எடுக்கிறார்கள்" என்று கேட்கிறார். யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
ரஜினி தலையை சாய்த்து இந்துத்துவா ஸ்டைலில் யோசிக்கிறார். கனிமொழி தலையை இன்னொரு புறம் சாய்த்து திராவிட ஸ்டைலில் யோசிக்கிறார். இப்படியே போனால் விரைவில் தும்முவதற்கு முன் நான் திராவிடமா இந்துத்துவமா என்று யோசிக்க வேண்டியிருக்கும்.
கர்நாடகாவில் பாஜக கணக்கு தொடங்கியிருப்பதை பெருமையாக சொல்பவர்கள் உ.பியில் கணக்கு முடிந்ததைப் பற்றி ஏன் பேசுவதில்லை?
பாம்பன் பாலத்தை இந்தியர்கள் தானே கட்டினார்கள். போயும் போயும் ஒரு சட்டசபை வளாகம் (வருடத்துக்கு பத்து நாட்கள் மட்டுமே பயன்படும்) கட்ட ஏன் அமெரிக்கா ஜெர்மனி வரை டெண்டர் கேட்கிறார்கள்? இது போல இங்கு அமெரிக்காவில் நடந்தால் பின்னி பெடல் எடுப்பார்கள். நியூ ஜெர்சியில் அரசு கான்றாக்ட்களை outsource செய்யக்குடாது என்று போராட்டமே நடத்தினார்கள். இந்த reverse outsourcing பற்றி ஏன் யாருமே பேசவில்லை? இங்கு 5000 டாலருக்கு மேல் ஆகும் அரசு செலவினங்களை இணையத்தில் வெளியிட்ட வேண்டுமென்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் உருப்படாதற்கு காரணம் படித்தவர்களா, படிக்காதவர்களா என்று ஒரு விவாதமே நடத்தலாம். படித்த வலைப்பதிவர்களே பொருளாதார பதிவுகளை விட்ட ராமர் பாலம் போன்ற உணர்ச்சியை தூண்டும் பதிவுகளுக்குத்தான் ஆதரவு கொடுக்கிறோம்!
இந்த நல்ல நேரத்தில் தமிழ்மணத்தில் பாசி அதிகம் என்று சொல்லி வெளியேறி மீண்டும் சைலண்ட்டா வந்து சேர்ந்தவர்களை வரவேற்போம். .