ullal

Thursday, February 26, 2009

மீடியாவுக்கு மூச்கார் அவார்டு

அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதுபோல மீடியாவுக்கு மூச்கார் அவார்டு கொடுக்கலாம்.


தினமும் யாரை கைது செய்யலாம் என்று முன்கூட்டியே ஐடியா கொடுக்கும் தினமலருக்கு சிறப்பு ஜோதிட சிகாமணி அவார்டும் செய்திகளை தினமும் திரியோ திரி என்று திரிப்பதால் பெஸ்ட் தக்ளியிச்டு அவார்டு கொடுக்கலாம்.



சுனாமியே வந்தாலும் செத்து போன விக்டோரியா மகாராணியின் அங்க அளவை முக்கிய செய்தியாக வெளியிடும் ibnlive க்கு பெஸ்ட் காஸ்ட்யூமர் அவார்டு கொடுக்கலாம்.
அத்துடன் நவம்பர் 26 அன்று ஆரம்பித்த ஒப்பாரியை இன்று வரை விடாமல் பாடுவதால் சிறப்பு ஒப்பாரி அவார்டும் தட்டி செல்கிறது.


பகல் கொள்ளைக்கான சார்ல்ஸ் சோப்ராஜ் அவார்டை குமுதம்.காம் எளிதாக வென்றது. (ஒரு சைடு நன்மை யாரும் இப்பொழுது ஞானி யின் கட்டுரை என்று பதிவு போடுவதில்லை. )
மேலும் இந்திய பெண்கள் புடவை கட்டுவதை மறந்துவிடாமல் கலாச்சாரத்தை காக்க பயிற்சி கொடுத்ததால் சிறப்பு கலாச்சார அவார்டும் பெறுகிறது.


தி ஹிந்துவுக்கு ராஜபக்சே அளிக்கும் சுக முனி அவார்டு. தட்ஸ்தமிழுக்கு சில்க் ஸ்மிதா நினைவு அவார்டும் கொடுக்கலாம்.

Thursday, February 19, 2009

சீமான் இப்படி பேசினாரா ?

சீமானின் சில நடவடிக்கைகள் மேல் எனக்கு சில விமர்கானங்கள் உண்டு.
"Seeman exhorted people for an armed rebellion protesting over what they alleged is India's collaboration with the Sinhalese army against the LTTE," a source said "
IBNlive இப்படி எழுதியிருக்கிறது. எனக்கு தெரிந்து தினமலர் உட்பட எந்த தமிழ் பத்திரிகையிலும் இவர் ஆயுதம் எடுத்து போராட சொன்னதாக படிக்கவில்லை.
இது ஐ.பி.என் லைவின் கண்டுபிடிப்பா ? யாராவது தெளிவுப்படுத்துங்கள்.

Wednesday, February 18, 2009

தமிழ்நாட்டில் ஆயுத தொழிற்சாலை -சு.சுவாமி

தமிழ்நாட்டில் சேலத்துக்கு அருகே தீவீரவாதிகள் பயங்கர உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதாக சு.சுவாமி சொன்னார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
இங்கு ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள்.
தொழிற்சாலையின் படங்களை இங்கு காணுங்கள்.








Tuesday, February 10, 2009

கருணாநிதி கேள்வி பதில்

(கண்டிப்பா முரசொலியில் தேட வேண்டாம்)

திமுகவை சர்வாதிகாரம் செய்வதாக சொல்றாங்களே ? நீங்கள் உண்மையிலேயே ஜனநாயகவாதியா ?

இது உண்மையல்ல. அம்மாவின் ஆட்சியில் இப்படி போராட்டம், கூச்சல் போட முடியுமா? இந்நேரம் எல்லாரும் பொடாவில் புட்பால் விளையாடப் போயிருப்பார்கள். நாங்கள் சீமானை சாதாரண சட்டத்தில்தான் சைலன்ட் ஆக்கினோம்.


திமுக குடும்ப அரசியல் செய்கிறதா?

தவறு. தமிழ்கத்தின் ஒரே ஜனநாயக கட்சி திமுகதான். எப்பவும் பொதுக்குழுவைக் கூட்டியே மந்திரி, எம்பி, கட்சி பதவிகள் குறிப்பாக பொருளாளர் பதவிகள் என் மகன் , பேரன், பேத்தி , கொள்ளு எள்ளு பேத்தி பேரன் களுக்கு கொடுப்போம். என் குடும்பத்தில் கூட ஜனநாயகமா எல்லா 'வீட்டுக்கும்' பதவி கொடுத்திருக்கோம்.


வைகோவை வெளியில் அனுப்பியது ஜனநாயகமா?
அவரை நானே அனுப்பியிருந்தால் தான் தவறு. அது பொதுக்குழு எடுத்த முடிவு.


எம்ஜிஆரை அனுப்பியது?
கட்சியில் கணக்கு கேட்பது தடை செய்யப்பட்டது. கட்சி ரூல்ஸை மதிக்காமல் செயல்பட்டார். பொதுக்குழு அவரை வெளியே அனுப்பியது.


உங்கள் கட்சியில் சகோதர யுத்தம் நடந்ததாமே ?
எங்கள் கட்சியில் மட்டுமே ஜனநாயகமாக உள் கட்சி தேர்தல் நடத்துகிறோம். அதனால் ஒரு சிலரை போட்டு தள்ள வேண்டியிருந்தது. மற்ற கட்சிகளும் தேர்தல் நடத்தினால் அவர்களும் இதையே செய்ய வேண்டியிருக்கும்.


தினகரன்மூன்று பேரை காலி பண்ணிய வழ்க்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

சட்டம் கண்டிப்பாக என்றாவது தன் கடமையை செய்யும். அய்யகோ ! அவர்களை தண்டிக்காமல் நான் எப்படி ஆட்சியை விட்டு போவது ? கண்டிப்பாக அவர்கள் தண்டனை அடையும் வரையில் நான் ஆட்சியை விட்டு போக மாட்டேன்.


ராஜினாமா , இறுதி வேண்டுகோள், பேரணி அடுத்தது என்ன ?

இருங்க . அகராதியை தான் பார்க்கணும். கடைசி மன்றாடுதல் நு வெச்சுக்குங்க. நம் உடன் பிறப்புகள் சத்திய மூர்த்தி பவனை சுற்றி அங்கப்ரதட்சனம் செய்வார்கள். மறக்காமல் இந்த போராட்டத்துக்கு நிதி அளியுங்கள்.


இலங்கை பிரச்சினையை நீங்கதான் தீர்க்கணும் என்று ராஜிவ் காந்தி சொன்னாரா?

ஆமாம் சொன்னார்.

இதற்கு சாட்சி ஏதாவது இருக்கா?

முரசொலி மாறன் பக்கத்தில் இருந்ததாக ஸ்டாலின் சொல்லி இருக்கார். அதை படித்து பாருங்கள்.


அவங்க ரெண்டுபெரும் தான் போய்ட்டாங்களே ? யாரிடம் இதை கேட்பது?

வேண்டுமானால் சோனியா காந்தியிடம் கேட்டு பாருங்கள். பக்கத்தில் இருந்த தங்கபாலுவையும் கேட்டு பாருங்கள்.


இலங்கை பிரச்சினைக்கு என்ன தீர்வு ? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ?

அது தன்னாலேயே தீர்ந்துவிடும். இன்னும் ரெண்டு லட்சம் பேர் தான் மிச்சம் இருக்காங்களாம்.


தமிழ்கத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலினா?

ஆமாம். ஸ்டாலினே தமிழ்நாட்டிற்கு முதலமைச்சரா வரணும் என்று பல வருடங்கள் முன்பு பெரியார் கூட சொன்னார்.


தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரிப்பது தவறா?நிச்சயமாக சட்டப்படி தவறுதான்.


அப்படி ஆதரிப்பவர்களுடன் கூட்டணி வைப்பது ?
தேர்தல் கொள்கை கூட்டணி தவறல்ல. சோனியாவே வைகோவுடன் கூட்டணி வைக்கலியா என்ன?

Thursday, February 05, 2009

ஈழ பிரச்சினை போராட்டம் என் அம்பது சென்ட்

மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டினார்கள். என்ன ஆச்சு ? ஒன்னும் ஆகவில்லை. ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் என்ன ஆச்சு? தினக்கூலி ஆட்களுக்கு ஒரு நாள் சம்பளம் கட். இனி பாராளுமன்றத்தின் முன்னால போராட போறாங்களாம்.


இதெல்லாம் வேஸ்ட்டு , தட்டிவிட்டுட்டு போயிடுவாங்க. தண்ட செலவு வேறு. தற்கொலை செய்துக்கொள்வது அதவிட வேஸ்ட்டு. இதென்ன பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு தெரியாத பிரச்சினையா என்ன? இந்த போராட்டத்தை பார்த்து அவங்கெல்லாம் திருந்தப் போறாங்களா? மற்ற மாநிலக்காரனுக நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு போவான். ஆங்கில பத்திரிகைகள் வழக்கம் போல இதையும் புறக்கணிக்கும். உலகம் முழுவதும் பொருளாதார மந்தம். இப்ப எதுக்கு பக்கத்து நாட்டுக்கு இந்தியா தண்ட செலவு செய்யுது என்று யாராவது எதிர்கட்சி கேட்டார்களா ? இவர்கள் எல்லாம் ஒரே கூட்டம் தான். தூங்கறவனை எழுப்பலாம். தூங்குவதைபோல நடிப்பவனை எழுப்ப முடியுமா?


உருப்படியா மத்திய அரசை கவிழ்க்கும் வரை / தேர்தல் வரை சன்டிவி , கலைஞர் டிவிகளை புறக்கணிக்க சொல்லி போராட்டம் செய்யுங்கள். கலைஞருக்கு காசு , பணம் தவிர வேறு எங்கு அடித்தாலும் வலிக்காது. மத்திய காங்கிரசுக்கு எங்க அடிச்சாலும் வலிக்காது. அவர்களுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணமே இல்லை. தமிழ்நாடு காங்கிரசுக்கு சுரணை இல்லாதது ஊருக்கே தெரியும்.


இந்த டிவிகளை புறக்கணிப்பதால் பல சைடு நன்மைகள் வேறு. அவ்வளவுதாம்பா.