தயாளு அம்மா - ஏங்க, இன்னைக்கு புளி
முதலமைச்சர் மு.க - கமிஷனர், இந்த அம்மாவ கைது பண்ணுங்க.
தயாளு அம்மா - இது என்ன வம்பா போச்சு, மதியம் சாப்பாட்டுக்கு புளிக்குழம்பு வேக்கலாமான்னு கேக்க வந்தேன்.
மு.க. இன்னும் இரண்டு மாசத்துக்கு புளிக்குழம்பு செய்யக்கூடாது. தெரியுதா,
தங்கபாலு - தலைவரே, கோயிலில் புளியோதரை பிரசாதமாக தராங்க. இதை தடை செய்யணும் நீங்க.
மு.க. - அதுக்கென்ன தமிழ்நாட்டில் இனி புளியோதரை , புளிக்க்ச மோர் எல்லாம் தடை செஞ்சுடலாம்.
மரு. அன்புமணி - புளிப்பு மருந்தையெல்லாம் தடை செஞ்சுடலாம்.
மரு. ராமதாஸ் - தமிழ்நாட்டில் இருக்க புளிய மரத்தை எல்லாம் வெட்டிடலாம் .
தயாளு அம்மா - அப்ப யாரும் சாம்பார் வெக்க முடியாது. நிச்சயம் இந்த முறை தாய்க்குலம் ஒட்டு காலி.
மரு. ராமதாஸ் - சாம்பார் உடலுக்கு கெடுதல். இனிமேல் எல்லாரும கறிக்குழம்பு சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும் நு பிரச்சாரம் செஞ்சு பிச்சுடலாம்.
மரு.அன்புமணி - புதுசா வந்த படத்துல ரஜினி சாம்பார் சாப்பிட்டு மாணவர்களை கெடுக்கிறார் . இதுக்கு ஒரு போராட்டம் பண்ணனும்.
மு.க. - டாஸ்மாக்கில் கறிக்குழம்பு வித்தா என்ன ? நல்ல வருமானம் வருமே !
தங்கபாலு - ஐயோ, புலி, புலி
கனிமொழி - பயப்படாதீங்க. என் மகன் ஸ்கூல் ல இன்னிக்கு மாறு வேடப்போட்டிக்கு புலி வேஷம் போட்டிருக்கான்,
கனிமொழியின் மகன் - தாத்தா, எனக்கு புளிப்பு மிட்டாய் வாங்கிட்டு வாங்க.
மு.க. - இனிமேல் புளிப்பு மிட்டாய் சாப்பிட கூடாது. புது சா காவி, வெள்ளை, பச்சையிலே ஒரு மிட்டாய் வாங்கி வெச்சிருக்கேன். சாப்பிடு. நல்லா இருக்கும்.
தங்கபாலு - ஏவ் ஏவ்
டாக்டர் இந்த புளிச்ச யேப்பத்துக்கு என்ன மருந்து சாப்படறது ?
மரு. அன்புமணி - புதுசா ஒரு யோகா வந்திருக்கு. போயி சோனியா முன்னாடி செய்யுங்க . சரியாயிடும். இன்னும் எவ்வளவு நாள் தலைவரா இருக்கப் போறீங்களோ , பாவம் !
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs