நடிகர் விஜய் தன தலையில் மண் அள்ளி போடுகிறாரா?
யானை தன தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்ளும். அது போல
நடிகர் விஜய் காங்கிரசில் சேர்ந்து யானையாயிட்டாரா ? இவர் தமிழர்களுக்கெதிராக முடிவு எடுக்கலாமா என்பதல்ல என் கேள்வி.
இவருக்கு அப்படி என்ன பயங்கர வயதாகிவிட்டது .? கெழட்டு விஜயகாந்த்தே
இன்னும் ஒத்தை காலால் வில்லன்களை புரட்டி எடுக்கும்போது இவர்
ஒட்டுமொத்தமா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருக்க மாட்டார்.
இன்று தமிழ் சினிமா நடிகர்கள் எல்லாம் கோடி கணக்கில் சம்பாதிக்க
வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழ்ர்கள் டாலர் கொடுத்து படம் பார்ப்பதும்
ஒரு காரணம். எப்படியும் இவர் இன்னும் ஒரு பத்து வருடமாவது
சினிமாவில் நடிக்கலாம். வெளிநாட்டில் வியாபாரமாகாத படங்களை
பெரிய நிறுவனங்கள் தயாரிக்குமா ? உள்ளூர் மார்க்கெட்டை மட்டும்
நம்பி படம் எடுத்தால் இவ்வளவு சம்பளம் கிடைக்குமா?
அப்படியே ஏதாவது வருமான வரி தொல்லை இருந்தால் கட்டிவிட்டு போகவேண்டியதுதானே? ஏன் முதலுக்கே மோசமாக்கணும் ? மொத்தமா பத்து வருசத்துல சம்பாதிக்கறதை இப்பவே காங்கரஸ் மொத்தமா தரப் போகுதா ?
உள்ளுரில் ஏங்கி கிட்டிருக்கும் கோஷ்டி வாரிசுகள் இவருக்கு ஒத்துழைக்குமா?
இருக்கற கோஷ்டி கும்பலில் இன்னும் ஒரு கோஷ்டியாகப் போறாரா?