டோண்டு மாமா இனி அடுத்த பதிவுகளில் என்ன எழுதப் போகிறார் என்று படிக்காமலே தெரிகிறது. சோசலிசம் உருப்படாது என்று இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
நம்ம டோண்டு மாமா idpl நிறுவனத்தில் எப்படி வேலை செய்தார் என்று அவரேIDPL நினைவுகள் ( குறிப்பாக நாலாவது பாகம்) பதிவில் விளக்கியிருக்கிறார்.அரசாங்க சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை நேரத்தில் தன் சொந்த மொழி பெயர்ப்புவேலைகள் செய்து வியாபாரம் செய்து வந்தார். இவர் மட்டுமல்லாது இந்த வேலைகளுக்கு ஆபீஸ் டைப்பிஸ்ட்டுகளையும் இந்த வேலைக்கு பயன்படுத்திஇருக்கிறார். இந்த ஆபீசில் எல்லோருமே இப்படித்தான் வேலை செய்ததாகவும்எழுதுகிறார்.
அப்புறம் இந்த நிறுவனம் எப்படி உருப்படும் ? இப்படி இவர் அரசு நிறுவனத்தை ஒழித்துவிட்டு ரிட்டையரானபின் நான் கட்டும் வரிப்பணத்தில் இன்னொருவனுக்குஇட ஒதுக்கீடா என்று பின்னூட்டம் வேறு போடுவார். (இவருக்குசம்பளமாக கொடுத்த வரிப்பணமே வெட்டி !)
சோசலிச நாட்டின் தலைப் பகுதியில் இருப்பவர்கள் இப்படி நாட்டுக்காகஉழைத்து(?)க்கொண்டிருக்கும்போது இவர் வேளாவேளைக்குவத்தக்குழம்பு சாப்பிடுவதற்காக யாரோ ஒரு விவசாயி வெறும் நெல் கூலிக்கு நொங்கு நொங்கென்று உழைக்கிறான்.
சோசலிச சிந்தனை உள்ளவர்களைக்கொண்டுதான் சோசலிச நாடு அமைக்க முடியும்.சுயநல சிந்தனை உள்ளவர்களை வைத்து சோசலிச அரசு அமைத்தால் இந்தியாவைப்போல போண்டிதான் ஆகும்.
உண்மையிலேயே பொது நலத்துக்காக உழைத்துதங்கள் சொந்த குடும்பங்களைக்கூட கவனிக்காமல் விட்டவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் இந்தஅமைப்பில் அவர்கள் எல்லாம் லூசுகள் ஆவார்கள். டோண்டு மாமா தன் குடும்பத்துக்காக ஒன்றரை வேலை செய்து இரண்டு சம்பாத்தியம் செய்தது தவறு என்றும் சொல்ல முடியாது. இவரே ஒரு தனியார் நிறுவனத்தில்வேலை செய்திருந்தால் ஒரு ஐம்பது சதவிகிதமாவது உழைத்திருப்பார். இவருடையசொந்த மொழிபெயர்ப்பு தொழிலுக்காக நூறு சதம் உழைக்கிறார் என்றே நம்புகிறேன். சரியா டோண்டு அவர்களே?
வழக்கம்போல டோண்டு மாமா சீரியசா எடுத்துக்க மாட்டார்னு ஒரு நம்பிக்கையில பதிவு போட்டாச்சு.