21 ஆம் நூற்றாண்டின் புதிய சூப்பர் பவர்கள் இந்தியாவும் சைனாவும் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இப்படி இருக்கு,
http://www.hindu.com/2008/08/19/stories/2008081956912000.htmஅசிங்கமாக பதக்க பட்டியலில் ஜீரோ வாங்காமல் கொஞ்சம் டீசண்டா ஒன்று வாங்கியதற்கு காரணமான மானம் காத்த மகராசன் பிந்த்ராவை சிலர் வைகிறார்கள். வேலைக்காரியின் தலையில் பாட்டில் வைத்து கிட்டு பழாகும் அளவு வசதி படைத்த மிலியா, சில்லியநேர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.அப்பா , தாத்தா செல்வாக்கில் மந்திரிகளாக, எம்பிகளாக, லோக்கல் தாதாவாக, கவிஞ , கவிக்நிகளாக, நடிக நடிகைகளாக , பத்திரிகைகாரர்களாக இருக்கும்போது கொஞ்சம் சொந்தமாக முயற்சி எடுத்து மடல் வாங்கிய பின்த்ராவின் முயற்சியை பாராட்ட வேண்டும.
நம்ம ஞானி சொல்ல வருவது என்ன வென்றால் இது தனிப்பட்ட ஒரு மனிதரின் வெற்றி, இந்தியாவின் வெற்றி இல்லை என்பதே. கிராமத்தில் இருந்தெல்லாம் விளையாட்டு வீரர்கள் வர வேண்டாம் குறைந்தது நடுத்தர வர்க்கத்தில் கொஞ்சம் மெடல்கள் வந்திருக்க வேண்டும்.
ஒரு ஒப்பீட்டுக்கு இந்தியாவைப் போல அமைப்பை கொண்ட நம்ம அமெரிக்காவிலும் அரசாங்கம் பயங்கரமாக விளையாட்டை ஊக்குவிப்பதேல்லாம் இல்லை. இவர்கள் விளையாட்டுக்காக நிறைய செலவு செய்வதால் மெடல் வாங்கி குவிக்கிறார்கள் என்று நானும் ஒரு காலத்தில் நினைத்தேன். இங்கிருந்து மெடல் வாங்கியவர்கள் யாருடைய பிள்ளைகள், எந்த பகுதியில் இருந்து (rural/city) வந்தவர்கள், எந்த வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்று ஆராய்ச்சி செய்தால் நல்லா இருக்கும்.
பெரும்பாலும் உயர் வர்க்க குழந்தைகள் பெரிய முயற்சி எடுக்காது. இங்கு எல்லாம் தனியார்மயம் தான். விளையாட்டி பயிற்சிக்கு குழ்ந்தைகளை அனுப்ப நேரம், பணம் இரண்டும் வேண்டும் . நிறைய பேருக்கு இந்த இரண்டில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது. சில குறிப்பிட்ட விளையாட்டுகள் விலை உயர்ந்தவை. டென்னிஸ் அகாடெமி யில் வாரத்திற்கு 1500 டாலர்கள் கட்டணம். எப்பொழுதாவது வில்லியம்ஸ் சகோதரிகள் போல அரிதாக அடிமட்டத்து ஆட்கள் நன்றாக விளையாடும்பொழுது ச்காலர்ஷிப்கள் கிடைக்கும். அப்பா வில்லியம்ஸ் பொது பார்க்கில் இருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் டென்னிஸ் புத்தகங்களை படித்து மகள்களுக்கு பயிற்சி கொடுத்தாராம். பெரும்பாலும் மணிக்கு பத்து டாலர் சம்பளத்தில் இருப்பவர்களுக்கு மேற்படி பயிற்சிகளுக்கு வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன்.
இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு இது போல பப்ளிக் பார்க் வசதிகள் கூட கிடையாது. கொஞ்சம் வசதி இருந்தால் தனியாக பயிற்சி பெறலாம். உடல் வலுவாக இருக்கும் கிராமத்து இளைஞ்சர்களுக்கு வாய்ப்புகள் கிட்டத்தட்ட பூஜ்யம்தான்.
அடுத்த முறை இந்தியா அதிக பதக்கங்கள் பெற என்ன செய்யலாம்?
1. மைகேல் பெல்ப்ஸ் போல ஒரு நாலு பேரை ப்ளூ கார்டு கொடுத்து இந்தியாவுக்கு அழைத்தோ, கடத்தியோ செல்லலாம். சிரிக்காதீங்க. அமரிக்க சார்பில் தங்க பதக்கம் வாங்கிய சிலரின் அம்மாவோ , அப்பாவோ, சோவியத்தில் ஒலிம்பிக் பதக்கம் வாங்கி பின்னர் பச்சை அட்டை வாங்கி அமேரிக்கா வந்தவர்கள்.
2. நம் மென்பொருள் திறமையை கொண்டு இந்த பதக்க பட்டியல் வைத்திருக்கும் சர்வரை ஹேக் செய்து இந்தியாவை முதல் இடத்திற்கு மாற்றி வைக்கலாம்.
3. நம்ம கேப்டனை விட்டு இந்தியா ஜெயித்ததாக அறிக்கை விட சொல்லலாம்.
4. கொஞ்சம அடிப்படை திறமை இருப்பவர்களை தேர்வு செய்து எங்காவது boarding school போல எல்லா வசதிகளும் அமைத்து விளையாட்டு பயிற்சி கொடுக்கலாம.