நம்மில் பலருக்கும் இந்த தேர்தலில் ஒ போடலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் முதலில் அதுவே சரியாக பட்டது. தார்மீக ரீதியாக அதுவே சரியான முடிவாக இருந்தாலும், இந்திய தேர்தல் கணக்குப்படி பார்த்தால் இந்த தேர்தலில் ஒ போடக் கூடாது.
இந்த தேர்தலில் ஒ போடுவதும், விஜயகாந்த், சரத் மற்ற உதிரி கட்சிகளுக்கு ஒட்டு போடுவதும் ஒட்டு பிரிக்கத்தான் உதவும். நம்மில் சிலர் ஒ போட்டாலும், கட்சி ஒட்டு , கள்ள ஒட்டு, பிரியாணி ஓட்டுகளையும் தாண்டி 'ஒ' வால் ஜெயிக்க முடியாது.
ஒரு உதாரணத்துக்கு விஜயகாந்த் 20௦ சதவிகித ஒட்டு வாங்கி, அதிமுக 30 சதவிகித ஒட்டு வாங்கி திமுக/காங்கிரஸ் வேட்பாளர் 32 சதவிகித ஓட்டுக்கள் வாங்கினால், இன்னும் ஒரு 5-10 சதவிகிதம் ஒ வுக்கு விழுந்தால், 60 சதவிகித ஆட்கள் விரும்பாத திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
தேர்தல் முடிந்தவுடன் நம் பத்திரிகையாளர்கள் மக்கள் தீர்ப்பு (mandate) பற்றி கட்டுரை எழுதுவார்கள். இப்படி மைனாரிடி ஓட்டுக்களை பெற்று காங்கிரஸ் /திமுக தப்பி தவறி ஜெயித்தாலும் ஈழ பிரச்சினை தமிழ் நாட்டில் எதிரொலிக்கவில்லை. இதனால் ஈழ பிரச்சினை தேர்தல் பிரச்சினை அல்ல என்று எழுதுவார்கள். இந்த அரிப்பை வலைப்பதிவுகளிலேயே காண முடிகிறது. ஒருவேளை ஏற்கெனவே இவர்கள் கட்டுரைகளை தயார் செய்தும் இருக்கலாம். இப்படி இவர்கள் எழுதினால் அதையே அரசியல் கட்சிகள் நம்பவும் கூடும்.
(மேலும் இந்த தேர்தல் ஒட்டு பிரிப்பதற்காகவே தேர்தலில் நிற்கும் விஜயகாந்த்தின் உண்மை முகத்தையும் அடையாளம் காட்டி இருக்கிறது. இவர் ஈழ தமிழர்களுக்காக பிரார்த்தனை செய்கிறாராம். )
ஆகவே, இந்த தேர்தலில் திமுக / காங்கிரசு தோற்க வேண்டுமென்றால் 'போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் ' என்று விளம்பிய அம்மாவுக்கு தான் ஒட்டு போடவேண்டும் . இதன்மூலம் ஈழ பிரச்சினையில் தவறான நிலைப்பாடு எடுத்தால் தேர்த்தலில் தோற்க நேரிடும் என்று காங்கிரசு, திமுக வுடன் அதிமுகவுக்கும் சேர்த்து புரிய வைக்கலாம்.