ullal

Thursday, March 30, 2006

கட்சி நல்ல கட்சி

எல்லா கட்சிகளும் (நேத்து ஆரம்பிச்ச ) கட்சிகூட வேட்பாளர் மனுவுடன்பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். இந்த கட்சியில் மட்டும் தான் கட்சியேவேட்பாளர்களுக்கு சீட் கொடுக்க வலிந்து முன் வருகிறது.

தொண்டர்களிடையே சீட்டுக்காக அடிதடி , மண்டை உடைப்பு, போலீச், ஸ்ட் ரெச்சர், வேட்டி கிழிப்பு எதுவும் இல்லை.

தலைவர்களுக்கு தொண்டர்கள் மிரட்டல் போஸ்டர் ஒட்டுவதில்லை.

தலைவர்களுக்கு சீட் பெற்ற வேட்பாளர்களைப் பற்றி புகார் fax அனுப்புவதில்லை.

சீட் கொடுக்காத தலைவர்களின் உருவப்பொம்மை எரிப்பதில்லை.

கட்சியில் சீட் கிடைக்காத காரணத்தால் யாரும் கட்சி தாவுவதில்லை.

கட்சி சீட் கொடுத்தாலும் தொண்டர்கள் பெருந்தன்மையாக மறுத்து விடுகிறார்கள்.

தேர்தல் அறிக்கை கூட காணோம்.

கடைசி நேரத்தில் கூட்டணி தாவல்கள், கூட்டணி உடைப்புகள் இல்லை.

அமைதியின் இலக்கணமாக இருக்கும் இந்தகட்சி எது ?

Sunday, March 26, 2006

காங்கிரஸ் அன்றும், இன்றும்

அன்று
http://www.gandhiserve.org/cgi-bin/if2/imageFolio.cgi?action=view&link=Photographs/Events/Salt_Satyagraha&image=EVSS1930055003.jpg&img=&tt=


இன்று
http://www.dinamalar.com/2006mar26/political_tn17.asp

Friday, March 17, 2006

ஆன்மீக பொருளாதாரம்

இந்த கட்டுரையை (http://www.thinnai.com/pl0317061.html ) படித்தபொழுது தோன்றியது. இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை. இதை படித்தபொழுதுகோபத்தைவிட சிரிப்புதான் வந்தது. வெற்றிலை போட்டதற்காக ஒரு அரசன் 100 பேருக்கு நிலம் தானமாக கொடுத்தானென்றால் அவன் எப்பேற்பட்ட அடிமூடனாக இருந்திருக்க வேண்டும்?.(தெனாலி ராமன்கதையில் இப்படி வரும்.) சுரண்டியவர்களின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கிறது. உலகம் முழுவதும் அரசர்கள், ஜார் மன்னர்கள்சுரண்டிய கதைகளும் புரட்சிகள் நடந்த கதைகளும் உள்ளன. இது போன்றஒரு மூடத்தனம் வேறு எங்காவது நடந்திருக்குமா?

அந்த காலத்து அரசந்தான் இப்படி என்றால் இந்த காலத்திலும் அப்படிதானேநடக்கிறது. நம் தலைவி ஜெயலலிதாவுக்கு பள்ளிகளுக்கு ஆசிரியர் போடுவதற்கு பட்ஜட்டில் இடமில்லை. ஒரு வகுப்பில் 139 குழந்தைகள் இருக்கிறார்கள். 140 வது குழந்தை இருந்தால்தான் இன்னொரு ஆசிரியர் போடுவார்களாம். அந்த குழந்தைகளின் படிப்பையும், ஆசிரியர் நிலைமையும்நினைத்துப் பாருங்கள். ஆனால் கோவில்களில் அன்னதானம் என்ற சோம்பேறிகளுக்கு சோறு போடும் திட்டத்திற்கு பட்ஜட் அளிக்கிறார். கோவில்களுக்கு குடமுழுக்கு என்று செலவு செய்கிறார்.

ஏதோ கொஞ்சம் ஆடம்பரமில்லாமல் எளிமையாக சாமி கும்பிடமுடியாதா? அண்ணன் இளையராஜா வைர கிரீடத்துடன் மூகாம்பிகைக்கு படை எடுக்கிறார். இவர் தலித் என்று சொல்கிறார்கள். அவர் மற்றாவருக்கு உதவுகிறாரா இல்லை மோட்சத்துக்காக செலவு செய்கிறாரா என்பது தனிப்பட்டஉரிமை. இன்னும் இது போல ஏராளமான தங்க வாசக்கால்களும், தேர்களும்,தங்க கோபுரங்களும் இந்த ஏழை நாட்டில் எந்த பயனும் இல்லாமல் முடங்கி கிடக்க, இந்தியா வெளிநாட்டு முதலீட்டுக்கு கையேந்துகிறது.

சரி மக்கள் கொண்டு வரும் காணிக்கையில் உருப்படியாக என்ன செய்கிறார்கள்.?திருப்பதியில் பல்கலைகழகம் கட்டியிருக்கிறார்கள். அமிர்தானந்தமயி மடம் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி ஒதுக்கி வீடுகட்டிக்கொடுக்கிறது. இதை பாராட்டலாம். இவர்களிடம் இருக்கும் பணம் மலைக்க வைக்கிறது. விட்டால் அரசாங்கத்துக்கே இவர்கள் கடன் கொடுக்கலாம்.

இன்னும் ஜோசியர்களின் பேச்சை கேட்டு தோஷம் கழிக்க செலவழிப்பதைஎல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த ஊருக்கு ஒரு பெரியார் போதாது.

Wednesday, March 15, 2006

பேண்ட் அணிவதும் பெண்ணீயமும்

பேண்ட் அணிவதால் பெண்கள் விடுதலை அடைவார்களா அல்லது அதைஅணியாவிட்டால் அடிமைப்படுவார்களா என்று ஒரு கேள்வி தங்கமணியின்பதிவில் எழுந்தது. பெண்ட் அணிவதாலோ, அணியாததாலோ பெண்கள்விடுதலை அடைய முடியாது.

இருந்தாலும், பேண்ட் அணிவதற்கும் பெண்ணீயத்துக்கும் கொஞ்சூண்டு சம்மந்தம்இருக்கு. மேற்கத்திய பெண்கள் பேண்ட் போன்ற ஒரு உடைக்கு மாறியதற்கு முன் பெண்களை முதலில் விடுவித்தது இரு சக்கர சைக்கிள்.சைக்கிள் ஓட்ட கற்றதால் பெண்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும்போக முடிந்தது. அந்த காலத்து மேற்கத்திய பெரீஇய வளையங்கள் வைத்து தைக்கப்பட்ட கூடை போன்ற பாவாடை உடையுடன் எப்படி காலம் கழித்தார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

பெண் சைக்கிள் ஓட்டினால் தங்கள் கண்பாரவையை விட்டு எங்கு செல்வாளோஎன்ற பயத்திலும் சைக்கிள் ஓட்டுவது அனாச்சாரமான விஷயமென்றும் எதிர்ப்புகள் எழுந்தது. மேல்தட்டினர் சைக்கிளை ஆதரித்ததும் இது மற்றவர்களையும் சென்றடைந்தது. கூடை போன்ற பாவாடையுடன் சைக்கிள் ஓட்ட முடியாது என்பதால் பேண்ட் போன்ற உள்ளாடைகளும, வெளியாடைகளும் உருவாக்கினார்கள்.

Back to india, என் உஅறவினர் ஒருவர் சமீபத்தில் ஒரு விபத்தில் இராந்துவிட்டார்.இவருடைய மக்ளின் டூ வீலரின் பின்னால் அமர்ந்து சென்றவர், (புடவை கட்டியிருந்ததால் ஒரு பக்கமாக தான் அமமுடியும்) ரோட்டிலிருக்கும் குண்டுகுழியில் வண்டி ஏற இவர் அப்படியே தூக்கி எறியப்பட்டு பஸ் சக்கரத்தில் போய் விழுந்தார். கால்களை இரு புறமும் போட்டு அமர்ந்திருந்தால்இன்னும் கொஞ்சம் பேலன்ஸ் இருந்திருக்கும். டூ வீலரில் புடவை மாட்டி ரோட்டில் அவமானப்பட்டபெண்களை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன். காரில் போகும்போது நான் விரும்பும் உடையை அணிவேன் என்று சொல்லலாம். காரிலும், ஓட்டும்போது சேலை இடைஞ்சல செய்யலாம். இடம், செய்யும் வேலைக்கேற்ப உடை அணிவதே சிறந்தது. சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோதுகூட எவ்வளவு ஆபத்தான வ்கையில் உடை அனிந்து பெண்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகிறார்களென்று பார்க்க முடிந்தது.

இந்திய பெண்களையும் டூவீலர் விடுதலை செய்திருக்கிறது. பல்லவன் பஸ்ஸுக்காககாத்திருந்து, இடிபட்டு கடிபட்டு, எங்காவது செல்வதற்கு அண்ணன்மார்களை பணிவிடை, பாதபூசை செய்து கெஞ்சிய அனுபவம் நிறைய பேருக்கு இருக்கலாம்.

இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அண்ணா பல்கலைகழகத்தில் ஒரு பெண்ணின்தலைமுடி டர்பைனில் மாட்டி மருத்துவமனைக்கு கொண்டு போக நேர்ந்தகதையை workshopஇல் சொல்வர்கள். அதனால் கோட் அணிய சொல்வார்கள். சில பெண்களுக்கு அந்த கோட்டையும் தாண்டி நீண்ட கூந்தலாக இருக்கும். இதே பல்கலைகழக துணை வேந்தர் தான் பெண்கள் புடவையும், சுடரிதாரும் அணிய வேண்டும் என்ற சட்டம் போட்டிருக்கிறார். இந்த இரண்டையும் விட பேண்ட்எவ்வளவோ பாதுகாப்பானது? இவருடைய லாஜிக்கை எப்படி மெச்சுவது. பெண்கள் என்ன அணிய வேண்டுமென்று ஆண்கள் முடிவு செய்தால் இப்படிதான் இருக்கும்.


மேலும் பெரியார் எழுதியது ஐம்பது அண்டுகளுக்கு முன்பு. என் அக்காகல்லூரி படிக்கும் காலத்தில்கூட சுரிதார் அணிய அனுமதி இல்லை. இந்த நூற்றாண்டிலும் துக்ளக் குருமூர்த்திகள் பெண்கள் நீண்ட கூந்தல் வைத்திருக்க வேண்டுமென்று எழுதுகிறார்கள். இது குறித்து திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருந்தார்.

மேற்கத்திய உடை வரலாறுhttp://www.jolique.com/undergarments/bloomers%20_and_bicycles.htm

Saturday, March 04, 2006

சொன்னாங்க - பொடாவுக்கு வாஜ்பாய் காரணம்

அன்று

2002 - வைகோ கைதானதால் தொண்டர் அறிவழகன் தீ குளித்தார்

கருணாநிதியே கூட்டணியை உடைப்பார் - வளர்மதி

திருமா அவசப்பட்டுவிட்டார் - ராமதாஸ்

நன்றி மறப்பது நன்றன்று - வைகோ

கருணாநிதியின் மகாபாரதம் - http://www.dinakaran.com/daily/2006/Feb/11/politics/PollNews4.html

இன்று
பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அரசு. நி௵ன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும் வாஜ்பாய் அரசுதான் மத்தியில் இருந்தது.

அப்போது மதிககவைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாகவும் இருந்தனர்.
எனவே பொடா சட்டத்தின் கீழ் நி௵னும், மற்ற தோழர்களும் கைதாகி சிறையில் இருந்ததற்கு தமிழக அரசை மட்டும் குறை கூற கடியாதுஎன்றார் வைகோ.


தீ குளிக்கும் தொண்டர்களுக்கு இனி புத்தி வருமா?