ullal

Tuesday, September 26, 2006

இதுதாண்டா புரட்சி

தினமலரிலிருந்து...
செக் பவரால்' பஞ்., தலைவர் பதவி ஏலம் போட்டிக்கு கன்பே வெற்றி உறுதி
தர்மபு஛: தமிழகம் கழுவதும் பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களுக்கு மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவியில் "செக் பவர்' இருப்பதால் இந்த பதவிக்கு ஏலம் விடப்படும் கொடுமை நிடந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் அக்.13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நிடக்கிறது. மாநலம் கழுவதும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நலையில் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள் பல பகுதியில் மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்படுவது நிடந்து வருகிறது.
தர்மபு஛ மாவட்டத்தில் பென்னாகரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு எண் 4, 5 மற்றும் 6 ஆகிய வார்டுகள் மக்கள் கன்னிலையில் ஏலம் விடப்பட்டது. 4வது வார்டு ஏலத்தை ரவி என்பவர் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும், 5வது வார்டை குமரவேல் என்பவர் ரூ.91 ஆயிரத்துக்கும், 6வது வார்டை அசோகன் என்பவர் ரூ.70 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்துள்ளனர்.
பென்னாகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சித்தியோப்பனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திகிலோடு, ஆலமரத்துப்பட்டி, எட்டிக்குட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டி தரும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதாக கூறி கவுன்சலிங் நிடத்தியுள்ளனர்.
இதில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சீனிவாசன் என்பவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊர் கவுண்டர் கோவிந்தசாமி ஆகியோர் பள்ளிக்கு கட்டிடம் கட்ட சம்மதம் தெ஛வித்ததை தொடர்ந்து உன்று கிராம மக்களும் இவர்களுக்கே ஓட்டு போட வேண்டும் என கடிவு செய்துள்ளனர்.
இதே பஞ்சாயத்துக்கு உட்பட்ட மண்னே஛ கிராம மக்கள் அந்த பகுதியை சேர்ந்த சிவா என்பவரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், நி௵கராஜ் என்பவரை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்வு செய்து, இவர்களுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும் என கடிவு செய்துள்ளனர்.
மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வெங்கடதாரஹள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவி புது௵ர் பகுதியில் நிடந்த ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த சண்ககம் என்பவர் ரூ.ஒரு லட்சத்து 58 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர். கதல் தவணையாக ஊருக்கு ரூ.10 ஆயிரம் கன்பணம் கொடுத்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நிடந்த பொது ஏலத்தில் அறிவழகன் ரூ.28 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். ஏலம் நிடந்த கிராம பகுதியில் ஆர்.டி.ஓ., உலம் விசாரணை நிடத்தப்பட்டாலும், ஊர் மக்கள் கூடி தேர்வு செய்வதால், கிராம மக்கள் இந்த விசாரணைக்கு கழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மேலும், தற்போது ஊர் பகுதியில் ஏலம் விடுவது வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளதால், கிராம பகுதியில் தற்போது ரகசியமாக ஏலம் விடும் நகழ்ச்சிகள் நிடந்து வருகிறது.
குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு கடுமையான போட்டிகள் இருப்பதோடு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பல இடங்களில் ஏலம் விடும் கறை நிடைகறைக்கு இருக்க காரணம் உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்து தலைவர் பதவியிடத்துக்கு மட்டுமே பஞ்சாயத்துக்கு வரும் நதியை கையாளும் செக் பவர் உள்ளது.
டவுன் பஞ்சாயத்து சேர்மன், யூனியன் சேர்மன், நிகராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு நதியை கையாளும் அதிகாரம் இல்லை. இதனால் கிராம பஞ்சாயத்துக்களில் தலைவராக இருப்பவர்கள் பதவிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தங்கள் தேவைக்கு ஏற்ப பணிகளை ஒதுக்கி நதிகளை செலவு செய்வதோடு, பணிகளுக்கு 12 சதவீத கமிஷன் தொகையும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கறையாக கிடைப்பதால், வெற்றி என்ற இலக்கோடு தேர்தல் களத்தை சந்திக்க ஏல கறைக்கு வேட்பாளர்களும் ஒத்துழைத்து வருகின்றனர்.
* போட்டியாளர்களுக்கும் பணம் பட்டுவாடா ஜோர்: கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு பக்கம் கிராம மக்கள் கன்னிலையில் ஏலம் நிடப்பதோடு, எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை கவுன்சலிங் கறையில் ச஛கட்டும் வேலைகளும் அரங்கேறி வருகிறது.
பல பஞ்சாயத்துக்களில் எதிர்த்து போட்டியிடுவோரை வாபஸ் பெற வைக்க குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவதோடு, பஞ்சாயத்து பணிகளுக்கு கமிஷன் கொடுக்கவும் ஒப்பந்தங்கள் நிடந்து வருகிறது.
------------------------------------------
தேர்தலில் ஓட்டு போட்டு அதற்கு பின் வென்றவர்களின் பின்னால் போய் நிற்பதற்கு பதிலாக இப்படி ஒரு புரட்சி செய்கிறார்கள். முதலிலேயே ஊருக்கு வேண்டிய பணம் கிடைத்துவிடுகிறது.தலைவருக்கு கமிசன் கிடைக்கிறது. இதனால் என்ன ப்ரச்சினை? பணக்காரர்கள் மட்டுமேதலைவராக முடியும் அல்லது வங்கியில் ஏலப்பணம் கடன் பெற்று தேர்தலில் நிற்கலாம்:)

கட்டாயம் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும், இல்லையென்றால் குண்டர் சட்டம் பாயும்என்று சன( ?)நாயகத்தை திணிப்பது நகைமுரண்.

Monday, September 11, 2006

(IT) ஐ.டி. யில் விபச்சாரம்

டெலிமார்க்கெடிங்க் பற்றிய பதிவில் திரு டோண்டுவும் , மற்றொருவரும்இதை விபச்சாரம் என்று சொல்லி நிறைய எதிர்வினை பதிவுகள் வந்தது. இது அதைப் போல இல்லை. the real deal.

எனக்கு வரும் டெலி மார்க்கெடிங்க் அழைப்புகளில் சரி பாதி ஆண்களும்,பெண்களும் அழைக்கிறார்கள். இப்படி ஒரு ஐடியா இவர்களுக்கு எப்படி வந்தது என்று வியந்துக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே இப்படி ஒரு சிந்தனை நம் ஊரில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிந்தது.

இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக வரக்கூடிய ஒரு பிரபலஐ.டி. கம்பெனியில் என் கணவர் வேலை செய்கிறார். இவர்களுடைய தில்லி கிளையின் ஒரு பார்ட்டி போட்டோவை காண நேர்ந்தது. இவர்களுடைய அமெரிக்க கஸ்டமர், அவருக்கு இரண்டு புறமும் அறைகுறை உடையுடன் இரண்டு பெண்கள். ஜாலியாக அவர்கள்மீது கை போட்டுக்கொண்டு காட்சி தருகிறார். (அமெரிக்க மனைவிக்குபோட்டாவா கிடைக்க போகிறது?) இவர்கள் தொழில் முறையில் இப்படி கம்பெனி கொடுப்பவர்களாம். இந்த வேலைக்கு ஐ.டி நிறுவனமே இந்த பெண்களுக்கு பணம் கொடுக்கிறது. இதற்கு பெயர் என்ன?

இந்தியாவில் ஐடி நிறுவன வலைப்பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுவரை யாரும் இது பற்றி பதிவு செய்யவில்லை. எல்லா நிறுவனங்களிலும் இது வழக்கமா, அல்லது இது தில்லி ஸ்பெஷலா ?

Thursday, September 07, 2006

சமணம், செல்வன் - சில பதில்கள்

/..ஏற்பதை விட கழுவேறுவதே மேல் என கழுவில் ஏறிய சமண மதத்தாரை இன்று பாரதீய ஜனதா கட்சியினர் வந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு பகுத்தறிவு இயக்கத்தினர் கொண்டுவந்து விட்டுள்ளனர்.எங்கே சொல்லி அழ இந்த கொடுமையை?//

ஆடு கோழி வெட்டினால் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி தடைபோடுபவர்களுக்கு அம்மணமாக போவது மாடர்னிசமானது எப்படி?
அமெரிக்காவிலும் சமணர்கள் கோயில் வைத்திருக்கிறார்கள். நிர்வாணசமண சாமியார்கள் யாரும் இங்கு ஊர்வலம் போவதில்லை. அப்படி போனால் கைது செய்யப்படுவார்கள்.

//.உலகெங்கும் தனிமனித சுதந்திரத்தின் காவலனாக பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படும்போது தமிழ்நாட்டில் //
அறைக்குள் இருக்கும்வரைதான் தனிமனித சுதந்திரம். உன் சுதந்திரத்தைஎன்மீது திணிக்கும் போது அது வன்முறை. உலகமே free country என்றுசொல்லப்படும் அமெரிக்க நாட்டில் சுதந்திரமாக ரோட்டில் துணி இல்லாமல் போக முடியுமா? சுதந்திரமாக ரோட்டில் குப்பை போட முடியுமா? உங்கள் சொந்த வீட்டுகொல்லைப்புறத்தில் உங்கள் சொந்த துணியைக்கூட காய போட முடியாது. வீட்டிற்குசன்னலுக்கு துணி போட்டு மூடாமல் இருக்க முடியாது. தனி மனித சுதந்திரத்தின் எல்லை தன் வீட்டு கொல்லப்புறம் வரை கூட இல்லை.

அந்த காலத்து சாமியார்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். இவர்களும் தனியே ஒரு இடத்தில்நிர்வாணமாக வாழ்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கட்டும். அங்கு போக விரும்புவர்கள்போகட்டும்.

எனக்கு தெரிந்த ஒரு சமணப் பெண்மணி இங்கு மகளுக்கு பிரசவ ட்யூட்டிக்கு வந்தார்.இங்கு மருமகனை லேபர் வார்டில் அனுமதிப்பர்கள் என்று கேள்விப்பட்டு 'அட கண்றாவி,நான் லேபர் வார்டுக்கே போக மாட்டேன்' என்று சொன்னார். இவர் எப்படி சமணசாமியார்களை தரிசிப்பார் என்று யோசிக்கிறேன்.
இந்த சமண சாமியார்களை விட 'ஆயிரம்' மடங்கு ஆபாசமானது அண்ணாசாலையில்மெகா சைசில் உள்ள சினிமா போஸ்டர்களும், டிவி மூலம் குழந்தைகளை சென்று தாக்கும் ஆபாசசினிமா பாடல்களும். தி.க.காரர்கள் இவற்றிற்கு எதிராக போராட்டம் செய்து இந்த வன்முறையை ஒழிக்கட்டும்.
மார்வாடிகள் பின்பற்றும் சமணத்தைப் பற்றி...இவர்களுக்கு ஐந்து உறுதிகள் முக்கியமாக சொல்லப்படுகிறது.இதில் முதலாவது வன்முறையின்மை.நேரடியாக உயிர்கொல்லாமையை இவர்கள் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். ஐந்தாவது உறுதியாக சொல்லும் அளவுக்கு மீறிய பொருள் சேர்க்காமை மார்வாடிகளுக்குபொருந்தவே பொருந்தாது. எல்லா மதத்தவர்களை போலவே மதப்பற்று என்பதே தங்களுக்கு வேண்டியதை மட்டும் மட்டையடியாக பின்பற்றும் big farce.

Friday, September 01, 2006

திப்புசுல்தான் ராக்கெட்டும் அமெரிக்க தேசிய கீதமும்

திப்புவின் ராக்கெட்டுக்கும் அம்ரிக்காவுக்கும் என்ன சம்மந்தம்?1780 இல் ப்ரிட்டிஷாரரை மைசூர் படை வெற்றி பெற காரணமாக இருந்தது ராக்கெட் கள்.

ஒரு நான்கு அடி மூங்கிலின் முனையில் இரும்பு குழாயினுள்gun powder அடைக்கப்பட்டு எதிர்களின் மீஹு ஏவ பயன்படுத்தப்பட்டது.இந்த ராக்கெட்கள் 2.5 கி.மீ வரை போகும் ஆற்றல் படைத்தது .திப்புவிடம் ராக்கெட் ஏவுவதற்கு 5000 ஆட்கள் இருந்ததாக தெரிகிறது.திப்புவின் ராக்கெட்டுகள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.William Congreve 'A Concise Account of the Origin and Progress of the Rocket System'என்ற பேப்பர்வெளியிடப்பட்டது.
அப்பொழுது லண்டனில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளை விடஇரு மடங்கு தூரம் அதிகம் பயணிக்கும் திப்புவின் ராக்கெட் ஆராயப்பட்டது.இந்த ராக்கெட்டின் வடிவமைப்பை பின்பற்றி ஸ்டீல் குழாய்களைபயன்படுத்தி பிரிட்டிஷ் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், அமெரிக்க போரிலும் இந்த ராக்கெட்டுகள் பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.
அமெரிக்க தேசிய கீதமான star spangled bannerபாடலில்வரும் And the rockets' red glare .. சீறி வரும் இந்த ராக்கெட்டுகளை குறித்கும் வரிகள்.

வயிற்றெரிச்சலின் மறுபக்கம்



இதில் உள்குத்து ஏதும் இல்லை.
Liquid, Tablet, Caplet என்று மூன்று விதத்தில்
கிடைக்கிறது.