ஆறு க்ளாஸில் உலக வரலாறு - interesting ஆன புத்தகம்.வெவ்வேறு காலகட்டங்களில் பிரபலமாக இருந்த பானங்களின்சமூக வரலாற்றை விளக்குகிறது.
பழங்குடிகளின் பியர் மோகம், கிரேக்க க, ரோமன் கலாச்சாரங்களின்ஒயின் கலாச்சாரம், அமெரிக்க விஸ்கி , பிரிட்டிஷ் காபி, டீ ஏகாதிபத்தியம்,கடைசியாக கோக்கினமுலகளாவிய தாக்கம்.
அமெரிக்கர்கள் பிரிட்டிஷிடமிருந்து பிரிந்து போகத் தூண்டியது,முதலில் ரம், விஸ்கி விலைக்கு ஏற்பட்ட பிரச்சினையில் ஆரம்பித்துதேயிலை வரி வரும்பொழுது பெரிய போராட்டமானது.
முதலில் அமெரிக்க காலனியாக்கத்தின் போது வர்ஜீனியாவில் mediterraneanதட்பவெப்பம் போல இருக்குமென்று தவறாக கணக்கு போட்டார்கள். இங்குசிறந்த ஒயின்களையும், பட்டு, பழம், உப்பு போன்றவை உற்பத்தி செய்யலாமென்றுநினைத்தனர். ஆனால் இங்கு கரும்பு, வாழை எதுவும் வளரவில்லை. கப்பலில்வந்தவர்கள் நோய், உணவு பற்றாக்குறை, தொடர்ந்து சண்டைகள் என்று பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தேவையான அளாவு ஆல்கஹால், பியர்எதுவும் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்களுக்கு வெறும் தண்ணீர் குடித்துவாழ்வது பிடிக்காமல் திரும்பி போக விரும்பினார்கள். அடுத்த்தாக MayFlowerகப்பல் Cape Codஇல் வந்து நின்றது. அங்கு குடியேறியவர்களுக்கும் இதே பிரச்சினை. 1628 இல் இங்கிலாந்திலிருந்து 10000 கேலன் பியர் கொண்டு வந்தார்கள்.
ஐரோப்பிய தானியங்கள் அமெரிக்காவில் வளரவே இல்லை. பியர் இறக்குமதி செய்வதற்கு பதிலாக லோக்கலில் கிடைக்கும் சோளம், மேப்பிள், பூசணிஇதைக்கொண்டு பியர் தயாரிக்க முயற்சி செய்தனர். இங்கு விளைந்த திராட்சைகளைக்கொண்டு தயாரித்த ஒயின் சுவை சரியாக வரவில்லை. பதினேழாம் நூற்றாண்டின்கடைசியில் ரம் கிடைக்க ஆரம்பித்து. ஏழை , பணாக்காரன் அனைவரும் ரம் குடித்தார்கள்.ஏதாவது ஒப்பந்தம் கையெழித்து போடும்போது ரம் குடிப்பார்கள். 17 ஆம்நூற்றாண்டின் கடைசியில் நியூ இங்க்லாந்தில் மொலாசிஸ் இறக்குமதி செய்து லோக்கலாக ரம் தயாரித்தார்கள். ஆப்பிரிகாவிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்தவியாபாரிகளுக்கு ரம் கரன்சி போல கொடுக்கப்பட்டது. இந்த் அரம்மை தயாரிக்கமொலாசிஸ் ப்ரான்ஸிலிருந்து இறக்குமதி செய்தது பிரிட்டிஷ் சர்க்கரை தொழிலைபாதித்தது.
1733 இல் பிரிடிஷ் அரசாங்கம் ப்ரென்சு மொலாசிசுக்கு வரி போட்டது. ஆனால் போதுமானஅளவு மொலாசிஸ் இங்கிலாந்திலும் உற்பத்தியாகவில்லை. இந்த் அசட்டம் செயல்படுத்தப்பட்டால்நியூ இங்கிலாந்து ரம் பொருளாதரம் பாதிக்கப்படும். தேவையான அளவு பானமும்கிடைக்காது. ஆனால் பிரிடிஷ் அரசாங்கம் அமெரிக்காவில் நியமித்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் வரி வசூலிக்காமல் இங்கிலாந்தில் உட்கார்ந்துக்கொண்டு தங்கள் சார்பாக ஒரு ஆளை அமெரிக்காவில் நியமித்து ப்ரென்சு மொலாஸிசை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்தார்கள்.
மீண்டும் 1764 இல் பிரிட்டிஷும் அமெரிக்காவும் சேர்ந்து ப்ரான்சுடன் சண்டை போட்டார்கள்.இதன் விளைவாக ப்ரிடிஷாருக்கு நிறைய பணாச்சுமை நேர்ந்தது. இந்த்ஹ சுமையை அமெரிக்காவும்பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று மீண்டும் சுகர் வரி போட்டது.
எங்கெயோ இருக்கும் ஒரு நாட்டுக்கு வரி கொடுப்பது அமெரிக்கர்களுக்கு சுத்தமாகபிடிக்காமல் போனது. இதற்கப்புறம் stampact வந்தது. East India Company யின் தேயிலை வியாபாரத்தை பாதுகாக்க அமெரிக்க தேயிலைக்கு வரி போட்டார்கள். இதன் விளைவாக பாஸ்டன் டீ பார்டி புரட்சி நடந்தது. இங்கிருந்துதான் அமெரிக்க விடுதலை போராட்டம்ஆரம்பித்ததாக சொன்னாலும், முதலில் புரட்சிக்கான காரணியாக் ஐருந்தது ரம். போர் வீரர்கள் நிரறைய ரம் குடித்தார்கள்.
போரினால் தடையில்லாமல் மொலாஸிஸ் கிடைப்பது பிரச்சினையாக ப் போகவே விஸ்கிதயாரித்தார்கள். இதற்குப் பின்னர் அமெரிக்கா விடுதலை அடைந்த பின்னர், அமெரிக்க அரசாங்கமே விஸ்கிக்கு வரி விதித்தது. இதுவும் விவசாயிகளுக்கு பிடிக்கவில்லை.வரி வசூலிக்க வருபவர்களை தாக்கினார்கள். வரி கட்டுபவர்களையும் தாக்கினார்கள்.வரி கலெக்டரின் வீடுகளையும் கொளுத்தினார்கள். David Bradford தலைமியில்6000 பேர் கொண்ட போராட்ட படை pittsburgh இல் உருவானது. இந்த புரட்சியை George Washington பெரும்படை கொண்டு அடக்கினார். பின்னர் இந்த வரியும் கைவிடப்பட்டது.பின்னாளில் George Washington அவருடைய பண்ணையில் விஸ்கி தயாரிப்பையும் செய்தார்.