ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் கருணாநிதியோடு இன்னும் நிறைய பேர்இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தது இந்த இருவர். விரைவில் ஞானி இவர்களைப் பற்றியும் எழுதுவார் என்று நினைக்கிறேன்.
இந்த ஜெயேந்திரரும் எவ்வளவு நாள்தான் சங்கராச்சாரியாக இருப்பார்?இவருக்கு வயது எழுபதை தாண்டியிருக்குமென்று நினைக்கிறேன். இவர்பெறாத பரிசுகளோ, கனகாபிஷேகமோ இல்லை. இவர் பெறாத அவதூறுகளும் இல்லை. இவர் மேல் போலீஸ் வழக்கு போடாத செக்க்ஷனும்இல்லை.இவர் ஏறாத கோர்ட்டும் இல்லை. இவர் 'மக் ஷாட்' வராதபத்திரிகையும் இல்லை. இன்னும் எத்தனை நாள்தான் இந்த சங்கராச்சாரிஎன்ற முட்கிரீடத்தை சுமந்து திரிவார்.? அடுத்த பெரியவாக்கு வழி விட்டுவிட்டுக்ருஷ்ணா, இந்த்ரா என்று காலம் தள்ள வேண்டிய வயதில் இவருடைய பக்தர்கள் இவரை இப்படி துன்புறுத்தலாமா?
ரிடையர் ஆக வேண்டிய இன்னொருவர் சிரந்த நகைச்சுவை நடிகர்,பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்று எல்லா பரிமாணங்களிலும் கலக்கிய திரு.சோ. இவருக்கும் வயது எழுபதை தாண்டி இருக்குமென்று நினைக்கிறேன். இவர் பெறாத பாராட்டுகளும் இல்லை. சகுனி,சோமாறி என்று இவர் வலையுலகில் பெறாத வசவுகளும் இல்லை. இவர்பல காலமாகவே உளறி வந்தாலும், சமீபத்தில் கொஞ்சம் அதிகமாகவேஉளறி வருகிறார். யாராவது பேட்டி கண்டால் புஷ்பக விமானம், ராமர்பாலம் என்று முட்டாள்தனமாக உளறுகிறார். போயிங் விமானத்தைபார்த்தால் அதோ நம் வேத காலத்து புஷ்பக விமானம் என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். குழந்தைகள் எங்காவது பாலம் கட்டி விளையாடினால் "ஐ, ஸ்ரீராமர் கட்டிய பாலம்" என்று தொட்டு வணங்குகிறார். குமுதம் தான் இன்னும் எத்தனைவருசத்துக்கு சோவின் பேட்டியை போடும்? அடுத்த தலைமுறையில் இவர் இடத்தை எஸ்.வி.சேகர் போன்ற லூசுகளிடம் கொடுத்துவிட்டு இவர் ஏன்வீட்டில் ஓய்வெடுத்து ராமாயணம், மகாபாரதம் படிக்கக்கூடாது?
ரிடையர் ஆக வேண்டிய லிஸ்டில் அடுத்ததாக இருப்பது எழுத்தாளர்,பொறியியலாளர், சினிமா கதாசிரியர் திரு சுஜாதா. இவரும் பல விதமான கதைகளை ஆங்கிலத்திலிருந்து காப்பியடித்து எழுதிவிட்டார். இவரைபாராட்டுபவர்கள் பலர். இவர் வசனம் எழுதிய பாய்ஸ் திரைப்படத்தை திட்டாத ஆட்களே இல்லை. இன்னமும் எழுபது வயதைத் தாண்டி அயோக்கியா மண்டபம் போல அயோக்கியத்தனமான கதைகளைஎழுதிக் கொண்டிருக்கிறார். இந்த அயோக்கிய வேலையை அடுத்ததலைமுறை எழுத்தாளர்களுக்கு இடம் விட்டு விலகி க்கொண்டு ஏதாவது இன்க்லீசு படம் பார்த்து காலத்தை ஓட்டலாம்.
இவர்களுடைய ரசிகர்கள் இது குறித்து தீவீரமாக சிந்திக்க வேண்டும்.