முதலில் இந்திய விவசாயிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இது கிண்டல் இல்லை. பொருளாதார பதிவுகள் பிடிக்காதவர்கள் இங்கேயே ஜூட் விடலாம்.
சிதம்பரம் அய்யா வாயை திறந்தால் பங்கு மார்க்கெட் ஜுரம் வந்தா மாதிரி ஏறும், இறங்கும். கடந்த சில நாட்களாக அய்யா உணவு கையிருப்பைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். உலக அளவில் எத்தனால் பித்தம் தலைக்கு ஏற உலகம் முழுவதும் உணவு பொருட்கள் விலை பயங்கரமாக ஏறிவிட்டது. பல நாடுகளில் கோதுமை பயிர் சரியாக விளையாததாலும் நிலங்கள் எத்தனாலுக்கு திருப்பி விடப்பட்டதாலும் கோதுமை விலை தாறுமாறாக ஏறிவிட்டது. தேசிய கட்சிகள் போட்டியிடும் வட மாநிலங்களில் கோதுமை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் மொத்தமாக அடி வாங்கும் என்ற சூழ்நிலையில் திடீரென்று வல்லரசு இந்தியாவுக்கு தேவை இல்லாத கோவணாண்டி விவசாயிகளின் மீது கரிசனம் கூடி உள்ளது. கோதுமை விவசாயிகளின் மீது பொழிந்த அன்பு தென்னாட்டு நெல் விவசாயிகளின் கோபத்தையும் தூண்டி உள்ளது. சிதம்பரம் அய்யா வருங்காலத்தில் உணவு கையிருப்பு பிரச்சினைதான் என்று டெல்லியில் இங்க்லீசுல சொல்லிட்டு தமிழ்நாட்டுல வந்து ரேசன் கடை சரியில்லை னு சொல்றார். எப்படியோ இவரால் இந்தியாவுக்கு ஆஸ்கர் அவார்டு எப்படியும் கிடைத்துவிடும். இப்ப இந்திய விவசாயிகளை கோதுமை உற்பத்தியை பெருக்க சொல்றாரு. அவங்க தான் பரலோகம் போயிட்டாங்களே!
http://news.bbc.co.uk/2/hi/in_depth/7004409.stmஇன்னொரு பக்கம் நெல் , கடலை விளைந்த நிலங்கள் கார் உதிரி பாக ஆலைகளாகவும் ஐடி நகரங்களாகவும் மாறுகிறது. பில்டர்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களும் விவசாய நிலத்தை வாங்கி இல்லாத ஐடி கம்பெனிகள் இருப்பதாக சொல்லி நிலம் விற்று கொழுத்து வருகிறார்கள். இதுக்கு நடுவில பயோ டீசல் விசிறிகள் வேறு. விலை நிலங்களை கரம்பை என்று சொல்லி வாங்க பல விதமான ப்ராடுகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
http://www.itvidya.com/farmers_use_google_earth_to_get_right_compensationவருங்காலங்களில் உணவு பொருட்கள் விலை ஏறும் என்பதால் விவசாயிகள் காட்டில் இனி மழைதான். புத்தி உள்ள அரசாங்கம் சென்செக்சை மட்டும் பார்க்காமல் நீர் பாசனம் , நில வளம் இதை சரி செய்யும். துக்ளக் அரசாங்கம் என்ன செய்யுமோ யார் கண்டார்கள்?