விஜயகாந்தை நம்பலாமா?
கருணாநிதி மற்றும் ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்து விட்டோ ம். இவர்கள்அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை. ஒருவர் குடும்ப அரசியல் செய்கிறார்.பத்திரிகை துறையில் ஆதிக்கம் செய்கிறார். மற்றவர் ஆட்சியில் வேட்பாளர்களேரோட்டில் நடந்து செல்ல துப்பாக்கி போலீஸ் துணை போட வேண்டியிருக்கிறது.அதனால இவருக்கு போட்டு பாத்தா என்ன என்று ஒரு வாதம் வைக்கிறார்கள்.
ஆக தமிழகத்தில் ஓட்டு போடுவது என்பது லாஸ் வேகாஸ் ஸ்லாட் மெசின் போலஆகிவிட்டது. இவருக்கு போட்டுதான் பார்ப்போமே என்று சூதாடும் விஷயாமாக கருதுகிறார்கள்.
விஜயகாந்த் சிலசமயம் ரொம்ப யோசித்து முடிவெடுப்பது போலவும் தெரிகிறது.சில சமயம் தமாசாக ஒவரான அதீதமான கற்பனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவருக்கு இருக்கும் ஒரே தகதி இதற்கு முன்பு அராஜகம் செய்யும்வாய்ப்பு இவருக்கு கிடைக்காததே. இந்த ஒரு தகுதியை பார்த்து எப்படி ஓட்டுபோடுவது?
இட ஒதுக்கீடு பிரச்சினை நாட்டையே போட்டு உலுக்கினாலும் கல்லூரி உரிமையாளரான இவர் அது பற்றி பேச மாட்டார். ஜெயலலிதாவை திட்டியே ஆட்சியைப்பிடிக்கும் கருணாநிதியைப் போல மற்ற இரண்டு கட்சிகளையும் திட்டினாலேஆட்சியை பிடிக்கலாம் என்று நம்புகிறார்.
இவருக்கு இருக்கும் ஒரே முதலீடு இவருடைய சினிமா புகழ் மட்டுமே. இப்படிஒரு ஒற்றை முகத்தை மட்டுமே வைத்து எந்த அடிப்படையும் கொள்கையில்லாத கட்சி ஜெயாவின் அதிமுக கட்சி போலதான் இருக்கும். இது போன்ற கட்சிகளில் தலைவர் எப்பொழுதும் ஒன்றாகவும் மற்றவர்கள் பூஜ்யமாக இருப்பார்கள். இன்று ஜெயலலிதாவின் முன்பு மண்டியிடும் வேட்பாளர்களைப் போல இவரைத்தவிர வேறு யாருக்கும் மதிப்பு இருக்காது. இங்கும் குடும்ப அரசியல் கொடிகட்டி பறக்கிறது. இவரை ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் சுற்றி வரும். என்னுடைய கணிப்பில் இவர் கருப்பு ஜெயலலிதாவாகதான் இருக்க முடியும்.
நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். முதலில் நாட்டில் இருக்கும் பொது பிரச்சினைகளை விவாதிக்கட்டும். இவர்களுடைய கருத்துகளை எடுத்து வைக்கட்டும். ஜனநாயக முறையில் முதலில் கட்சியை நடத்திக் காட்டட்டும். இவருடைய கருத்துகள், நடைமுறைகள் தெரியாமல் சும்மா வீராவேசமாக சினிமா ஹீரோவைப் போல வீறாப்பாக பேசுவதும், எந்த பொருளாதார அடிப்படையும் இல்லாது இலவசங்கள் அறிவிப்பதையும் வைத்து நம்பி ஓட்டு போடுவது முட்டாள்தனம் அல்லது ஊதாரித்தனமானபரிசோதனை.