சாமியார் அமைச்சகம் அமைக்க கோரிக்கை
---------------------------
உங்களுடைய நிதி அமைச்சர் இந்தியர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க
மக்களை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி, சலுகைகள் என்றெல்லாம்
அறிவித்தும் நம் மக்களிடம் எதுவும் செல்லுபடியாகவில்லை. ஆகவே
வருமான வரியை பிரச்சினையில்லாமல் வசூலிக்க ஒரு
யோசனை. மத்திய அரசில் சுற்றுலா துறை போல சாமியார் துறை
ஒன்று இருந்தால் வருமான வரியை மிக எளிதாக வசூலிக்கலாம்.
ஏற்கெனவே அறநிலையத்துறை மூலமாக கோயில்களில் சுரண்டுபவன்,
கொள்ளைக்காரன் எல்லாம் கொண்டு வந்து கொட்டுவதை வசூலித்து
நாட்டு மக்களுக்கு ரோடு, மருத்துவமனைகள் கட்டி வருகிறோம்.
அது போல ஒரு சாமியார் துறை அமைத்தால் நதி நீர் இணைப்புத்
திட்டம், மருத்துவமனை , இலவச வீடு, டிவி, கார்
திட்டங்களெல்லாம் நிறைவேற்றிவிடலாம். இந்த துறையையும்
கூட்டணி கட்சியை சேர்ந்த கருணாபாபாவின் கொள்ளுப் பேரனுக்கு
அளிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கு
என்.ஆர்.ஐக்கள், என்,ஆர்,எப் கள் கொடுக்க வேண்டிய வரியையும்
சேர்த்து இந்தியாவே வசூலித்துக்கொள்ளலாம்.
அப்படியே தனியார் சாமியார் மடங்களையும் அரசாங்கமே டேக் ஓவர் செய்து
விடலாம். அப்புறமென்ன இந்தியா சூப்பர் பவராகி நாட்டில் தங்க ரோட்டில்
வெள்ளி கார்கள் ஓட்டலாம்.
சாமியார்களை பணிக்கு எடுப்பதற்கு upsc 'இந்தியன் சாமியார் சர்வீஸ்' (ISS) பரீட்சைகள்
நடத்தலாம். சாமியாராவதற்கு முக்கியமான அடிப்படை தகுதி விண்ணப்பதாரகளுக்கு
வித்தியாசமான ஹேர் ஸ்டைல் இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக
எண்ணையைப் பார்க்காது பரட்டையாக பேன் முதல் புலி சிங்கம் வரை
வன விலங்குகள் தலையில் குடி இருக்கலாம். அல்லது ப்ரேமானந்தாவைப்
போல குடுமியோ நிர்வாணச் சாமியார்களைப் போல மொட்டையாகவோ
இருக்கலாம். அமைச்சகத்தில் விபூதி எடுப்பவர்கள், மோதிரம் எடுப்பவர்கள்,
நிர்வாண பூஜை செய்பவர்கள், தீபாவளிக்கு அருளுரை வழங்குபவர்கள்,
கற்பழிப்பு மட்டும் செய்பவர்கள், கற்பழிப்புடன் கொலையும் செய்பவர்கள் என்று க்ரூப் 1,2,3,4... என்று பிரிவுகள் ஏற்படுத்தலாம். பெண் சாமியார்களுக்கு
இந்த வேலைகளில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட சாமியார் கல்லூரியில்
படித்தால் கோடி கணக்கில் வருமானம் கிடைக்கும். சொல்லிக்கும்படியாக இந்தியாவிடம்
ஒரு பேடன் ட்டும் இல்லை. ஏராளமான புராண குப்பைகள் மட்டுமே நம்மிடம்
உள்ளது. அதனால் இந்த வேலைக்காக அரசாங்கமே (ஐ,ஐ,டிகளை மூடிவிட்டு) இந்தியன்
இன்ஸ்டிட்யூட் ஆப் சாமியாராலஜி தொடங்க வேண்டும். இந்த கல்லூரியில்
அட்மிசனுக்கு கூட்டம் அலை மோதும். ஆகவே பின் தங்கிய வகுப்பினருக்கு
50 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும்
இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.