ராமஜென்மபூமி
இடம் - ராம ஜென்மபூமி
ராமன் - லட்சுமணா, என்ன தமிழ்நாட்டில் ஒரே ரவுசாக இருக்கிறது?கொஞ்சம் நேரம் நிம்மதியா தூங்க முடிவதில்லை. பஜனை பாடி எழுப்பி விடுகிறார்கள்.
லட்சுமணன் - அண்ணா, தமிழ்நாட்டில் நம் வானரப் படைகளுக்கும்ராவணன் படைகளுக்கும் இடையே பெரிய மோதல் நடக்கிறது. ராமா, ராமா என்று கத்தி நம்மை டிஸ்டர்ப் செய்கிறார்கள்.
ராமன் - எதற்காக மோதலாம்?
லட்சுமணன் - சோமபானம் அருந்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தால் நாட்டுநடப்பை எப்படி தெரிஞ்சுக்கறது? கொஞ்சம் செய்தித்தாள்களையும் நீங்கள்படிக்க வேண்டும்.
ராமன் - என்ன செய்தி?
லட்சுமணன் - தமிழ்நாட்டுலே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் விடப்போறாங்களாம். அதுக்காக நீங்க கட்டின பாலத்தை லேசாதட்டப் போறாங்களாம். இதனால் தமிழ்நாட்டு பொருளாதாரம் வளருமாம். நம் வானரப் படைகள் இதை எதிர்க்கிறது.
ராமன் - நான் எங்கே பாலம் கட்டினேன்? குரங்குகள் அல்லவா கட்டியது?அதுவும் வெறும் பாறைகளைதானே மிதக்க விட்டோம்?
லட்சுமணன் -தெரியல . அங்க இருக்க மணல் மேட்டதான் நீ கட்டிய பாலம்னு சொல்றாங்க.
ராமன் - தமிழ்நாடு வளர்ச்சி அடையுமென்றால் அதை ஆதரிக்கதானே வேண்டும்?
லட்சுமணன் - நமக்கு தெரியுது. குரங்கு படைக்கு தெரியலையே!
குரங்குகள்கொஞ்சம் காலமாக எந்த வேலையும் இல்லாமல் பார்லிமென் டில் கத்திகூச்சல் போட்டே காலம் தள்ளி வந்தது. இப்ப இதை வெச்சு ஆட்சியபிடிக்கலாமா என்று முயற்சி செய்யுது.
தமிழ்நாட்டில் ஒரு கிழட்டு ராவணன் நீங்க எந்த பொறியியல் கல்லூரியில் படிச்சீங்கன்னு கேட்டுட்டானாம்.
ராமன் - நான் எங்கே கல்லூரிக்கு போனேன்? நாம் குருகுலத்தில் அல்லவா படித்தோம்?
லட்சுமணன் - இந்த ராவணனின் தலையை சீவ வேண்டுமென்று ஒரு பிராணிபேட்டி கொடுத்தது. இதுக்கு முன்னால பெரியார்னு ஒரு ராவணன் இருந்தான்.அவன் சிலையின் தலையையும் இதே போலதான் துண்டித்தார்கள். அதனால, ராவணன் படை ரொம்ப கோபமாகி நம் குரங்கு படை ஆபீசின் மீதுபடை எடுத்து அங்கு இருப்பவர்களை உதைத்துவிட்டதாம்.
ராமன் - நம் பக்தர்களுக்கு உதவ தமிழ்நாட்டில் யாருமே இல்லையா ?
லட்சுமணன் - ராவணனுக்கு ஒரு துறு பிடிச்ச போர்வாள் இருக்காம். அப்புறம் ஒரு மந்தி இருக்கு. சில சமயம் நம்மை ஆதரிக்கும்.சில சமயம் நம் பக்தர்களை கொலை கேசில் உள்ளே தூக்கிப் போடும். இதை நம்ப முடியாது.
புஷ்பக விமானத்தில் பயணம் செய்யும்மொட்டைத்தலை பத்திரிகையாளன் இருக்கான். போதையில் பேட்டி கொடுக்கும் சில நடிகர்கள் இருக்காங்க.
ராமன் - நடிகர்களா?
லட்சுமணன் - ஆம். ஆளுங்கட்சியை எதிர்ப்பது என்ற ஒரே பாடத்தை 'மக்' அடிச்சு ஒப்பிப்பாங்க. வேறு பாடம் எதுவும் தெரியாது.
ராமன் - பாவம் , தமிழ்நாட்டு மக்கள். அப்புறம்?
லட்சுமணன் - அப்புறம் நம் படைகள் ஜனாதிபதியிடம் போய் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியை கலைக்க மனு கொடுத்ததாம்.
ராமன் - யாரெல்லாம் மனு கொடுத்தார்கள்?
லட்சுமணன் - அத்வானி, மோடி..
ராமன் - என்ன மோடியா? அவன் செய்யாத வன்முறையா?என்கவுன்ட்டரா? அவன் ஆட்சியையே கலைக்கலையே! இது என்ன காமெடி!
லட்சுமணன் - காமெடிதான். ஆக, நாம் இப்போ நம் வானரப்படையை காப்பாத்தணும்.
ராமன் - நாம் எப்படி அவர்களை காப்பாத்துவது? நம்மையே புல்லட் ப்ரூப் அறையில் சிறை வெச்சிருக்காங்களே!
மேலும், நமக்கு கோவில் கட்டுவதாக சொல்லி நம் பெயரை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியையும் பிடித்துவிட்டு கடைசியில் நமக்கே அல்வா கொடுத்துவிட்டார்கள்.இவர்களை நாம் அவசியம் காப்பாத்தணுமா?
நமக்கு பூஜை செய்துவிட்டு எல்லா சுண்டலையும் அவர்களே காலி செய்து விடுகிறார்கள்.
நான் சற்று நேரம் சீதையுடன் உல்லாசமாகஇருக்கப் போகிறேன். நீ வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்.
வேண்டுமென்றால் அனுமார்@ராமசென்மபூமி.காம் என்ற இமெயில் முகவரியில் உதவி கேட்க சொல்.