ullal

Tuesday, February 28, 2006

திண்ணையின் லாஜிக்

http://www.thinnai.com/pl0224061.html

திண்ணையின் லாஜிக் எனக்கு புரியவில்லை. ஒரு எழுத்தாளர் சிலகிசுகிசுக்கள் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குஆதாரம் தர வேண்டியவர் எழுத்தாளரா வாசகர்களா?

வாசகர்களிடம் எல்லா கிசுகிசு, கட்டுகதைக்கும் ஆதாரம்வைத்திருப்பது சாத்தியமா?

எந்த ஆதாரமும் வைக்காமல் ஒருவர் வரலாறு எழுதினால் அது மெய்யா, பொய்யா?
அல்லது அது பொய்ப்பிக்கப்படும் வரை மெய்யா?

Saturday, February 25, 2006

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாமா?

அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர் ஆகலாமா?
chennaionline கருத்துகணிப்பு நடத்துகிறது.

பெண்கள் ஓட்டு யாருக்கு

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்பது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் பிரதிநதிகள் 100 பேர் சென்னையில் கூடி விவாதித்து வருகின்றனர்.
பெண்களுக்கான பொருளாதார கல்வி மேம்பாட்டு அமைப்பு சார்பில் வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற தலைப்பில் இரண்டு நி௵ள் கருத்தரங்கம் சென்னையில் ௷நிற்று நிடைபெற்றது. தொடர்ந்து இன்றும் நிடைபெறுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பிரதிநதிகள் 100 பேர் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெண்களுக்கான பொருளாதார கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கென்னடி கூறுகையில், ""பெண்கள் கன்னேற்றம் குறித்து பல்வேறு கட்சிகள் பேசி வந்த போதிலும் உண்மையில் பலன் ஏற்படுவதில்லை. பார்லிமென்ட்டில் 33 சதவீத சட்ட மசோதா நறைவேற்றப்படுவதற்கு உ஛ய நிடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் விடுதலை, வீடுகளிலும், அலுவலகங்களிலும் பெண்களுக்கு எதிராக நிடைபெறுகிற வன்கறைகள், பெண் கல்வி, பெண்ணு஛மை ஆகியவை குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் கன்னேற்றம் குறித்து எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கிறதோ அந்த கட்சிக்கு தான் ஓட்டளிப்பது என்றும் பெண்கள் கடிவு செய்துள்ளனர். மார்ச் 8ம் தேதி 20 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் பேரணி நிடத்தவுள்ளோம். அந்த பேரணியில் பெண்கள் ஓட்டு எந்த கட்சிக்கு என்று அறிவிக்கப்படும்,''என்று தெ஛வித்தார்.
courtesy: Dinamalar

நல்ல முடிவு. இந்த பிரதிநித்களை கேட்டு ஓட்டு போடும் பெண்கள ்எத்தனை பேர்?

Thursday, February 23, 2006

மன்னர் விஜயகாந்த் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறார்


மன்னர் விஜயகாந்த் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறார்.

Thursday, February 09, 2006

உலக தேசிய கழுதைகள் திராவிட முன்னேற்ற கழகம்

மேஜர் கழுதை கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.
கழுதை ரசிகர் மன்றத் தலைவர் - அண்ணே, எங்க ஜோரா கெளம்பிட்டீங்க

மே.க. - புதுசா கட்சி ஆரம்பிக்கபோறேண்டா.

க.ர.ம.த - நமக்கு எதுக்குண்ணே இந்த வேலை ?

மே.க. - மக்களெல்லாம் நொந்து போயிருக்காங்கடா. ரெண்டு கட்சிகளும் மாத்திமாத்தி அராஜகம் பண்றாங்க.

க.ர.ம.த. - நமக்கு யாருண்ணே ஓட்டு போடுவா?

மே.க. - டே ரெண்டு கட்சியும் புடிக்காத மக்கள் வேற யார் வந்தாலும் ஓட்டு போடுவாங்கடா. அந்த நெலமைல இருக்காங்க.

க.ர.மத. - அது சரிண்ணே, நம்ம கட்சிக்கு பேர் என்ன?

மே.க - வெக்க மாட்டேனே, நம்ம கட்சிக்கு என்ன பேருன்னு எல்லாரும் மண்டயபிச்சிக்கணும்.

க.ர.மத. - கட்சி ஆரம்பிச்சு என்ன பண்ண போரீங்க.

மே.க - ஊழல ஒழிக்கப்போறேன். வீட்ட வித்து செலவு பண்ணப் போறேன்.

கரமத.- அண்ணி மொறைக்கறாங்க பாருங்க. அப்பொ அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு என்ன பண்ணுவீங்க.

மே.க திடீரென்று ஆவாசம் வந்து "யாராலும் என்ன மெரட்ட முடியாது. நான் மதுர வீரனாக்கும்"என்று சத்தம் போடுகிறார்.

க.ர.ம.த - கட்சின்னா கொள்கை வேணுமே. அதுக்கு என்ன செய்யறது.

மே.க - எதுக்கு கொள்கை ?அவங்க எல்லாம் கொள்கை வெச்சிருக்காங்களா சொல்லு?

க.ர.ம.த - வாஸ்தவந்தான்.

மே.க - தமிழ்நாட்டுல சம்பாதிக்க நாலு வழி இருக்கு. அதுல சினிமாலயும்,காலேஜிலயும் கால் வெச்சிட்டேன். மூணாவது அரசியல்.

க.ர.ம.த - நாலாவது எதுண்ணே

மே.க - அதுதாண்டா, சாமியாராவறது. ரஜினி இதையும் பண்ணிட்டார். கொஞ்ச நாள்கழிச்சு அதுல எறங்கலாம்.

மீண்டும் ஆவேசம் வந்து கத்துகிறார் "எங்கிட்டே மோதினீங்க, காணாம போயிடுவீங்க."

க.ர.ம.த - சும்மா கோஷம் போட்டா போதுமா. மக்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லணும்.

மே.க - மக்களுக்கு ஏதாவது செய்வோம்.

க.ர.ம.த - ஏதாவதுன்னா?

மே.க - டே, அத செய்வோம் இத செய்வோம்னு சொன்னா ஏன் அத செய்யலேன்னு கேப்பாங்க. ஏதாவது செய்வோம்னு சொன்னா எத வேணா செய்யலாண்டா.

க.ர.ம.த - அரிவு கொளுந்துண்ணே,

மே.க - மக்களை இந்தி படிக்க சொல்வோம். நான் இந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.இல்லண்ணா பாலிவுட்ட ஒரு கை பாத்துருக்கலாம்.

க.ர.ம.த - அண்ணே, உங்கள வாழ வெச்சது தமிழ் படம்.

மே.க. - டே அமெரிக்காகாரன் இந்தி படிக்கிறான். அதுனால நாமும் படிப்போம்.

க.ர.ம.த முணுமுணுக்கிறார் (அமெரிக்காகாரன் டாய்லெட் பேப்பர் யூஸ் பண்றான்)

க.ர.ம.த - அப்படி எல்லாம் இல்லியாமே. அங்க இந்திகார பசங்களுக்கே இந்தி தெரியாதாமே. ஏதோ அரபு மொழி படிக்கறாங்களாம்.

மே.க. - டே, இந்தியில பாதி அரபு வார்த்தைடா. அப்ப அமெரிக்காக்காரன் பாதி இந்தி படிக்கிறனா இல்லையா?

க.ர.ம.த - எங்கியோ போய்ட்டீங்க. வேணும்னா இப்பிடி சொல்லலாமா? பின் லேடன்இந்தி படிக்கிறார். அதுனால அமெரிக்காகாரன் இந்தி படிக்கிறான். அதனால நாமும் இந்தி படிக்கணும்.

மே.க. இதுவும் நல்லாதான் இருக்கு.

க.ர.ம.த. - அண்ணே காலேஜெல்லாம் வெச்சிருக்கீங்க. இந்த இட ஒதுக்கீடு மசோதாபத்தியெல்லாம் ஒன்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க.

மே.க.- வாயக் கழுவு. இப்படியெல்லாம் கேப்பாங்கன்னுதான் நான் எந்த நிருபரையும் சந்திக்கறதில்ல.(தொண்டை கீச் கீச்சுகிறது.)

க.ர.ம.த. - நமக்கு இதுல அனுபவம் இல்லயே. இங்க காலம் தள்ள முடியுமா?

மே.க.- டே அவங்களுக்கு என்ன ஒரு 50 வருச அனுபவம் இருக்குமா.
நாம ரெண்டாயிரம் வருசமா பொது வாழ்க்கையில இருக்கோமடா.

க.ர.ம.த. - எப்ப்டி?

மே.க.- டே அந்த காலத்துலெயிருந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினவங்களநாம தானே ஊர்வலமா கூட்டிட்டு போனோம். சமீபத்துல குஷ்பு வீட்டுக்கு கூடஅரசியல் போராட்டத்துக்கு போனமா இல்லயா? நாம சும்மா குரல் கொடுப்போம்.மத்ததெல்லாம் பலாப்பழம் பாத்துக்குவார்.

க.ர.ம.த. - அப்படியா?

மே.க.- ஒரு பேட்டி குடுத்துருக்கார் பாரு. சிமெந்ட் வரி குறைச்சதில் முதலாளிகளுக்கு300 கோடி லாபம். அப்ப ஆட்சி பண்றவங்களுக்கு 100 கோடியாது இருக்கும்னு 'கரெக்டா' கணக்கு சொல்றாரு பாத்தியா? இதுக்குதான் இப்படி அனுபவசாலிங்கள பக்கத்துல வெச்சுக்கணும்.

அண்ணி ஜோசியர் குடுத்த தாயத்தோடு வருகிறார்.

கரமத கட்சி வேலய பாக்க கிளம்புகிறார்.

Wednesday, February 08, 2006

தேர்தல் நகைச்சுவை

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பேசுவது எப்பொழுதுமே நகைச்சுவையாகஇருந்தாலும், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகப்படியாக தமாஷாக இருக்கும்.சென்ற தேர்தலில் அதிக தமாஷாக பேசியவர் வைகோ என்று நியாபகம். ஸ்டாலின் சில சமயம் புல்லரிக்கும் வகையில் பேசுவார்.

இந்த முறை அந்த இடத்தைப் பிடிக்க விஜயகாந்த் கோதாவில் குதித்திருக்கிறார்.இவருடைய மாநாட்டுக் காட்சிகளே ஒரு நகைச்சுவை குவியலாக இருந்தது.சமீபத்தில் இன்னும் தமாசாக பேசுகிறார்.

இவர்தான் இப்படி என்றால் இவருடைய உதவியாளர் பண்ருட்டி இவரையே மிஞ்சுவார்போல இருக்கு. ஒரு சேம்பிள்

நிருபர் - உங்க தலைவருக்கு அனுபவம் பத்தாதுன்னு சொல்றாங்களே!

பண்ருட்டி- கல்யாண மாப்பிள்ளைக்கு அனுபவம் இருக்கான்னு கேக்கலாமா?

நிருபர் - ????

நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாத தலைவர் ஜெயலலிதா. செம போர்.

இந்த விஷயத்தில் lifetime achievement அவார்ட் கொடுப்பதென்றால் அதுசு.சுவாமிக்குதான். இன்னும் இவர் பேஷ ஆரம்பிக்கலை.

கருணாநிதியைப் போல வட்டமிடும் கழுகு, வசந்தசேனை என்பது போலபேசக்கூடியவர் காளிமுத்துவாக இருக்கும்.

இவர் சொன்ன சில கருத்துக்கள் படிக்க தமாஷாக உள்ளன.

"ஆனால், 1996ல் கம்பங் கொல்லைக்கு காட்டெருமையை காவல் வைத்தது போல, கொய்யா தோப்புக்கு குரங்கை காவல் வைப்பது போல, திருடன கையில் சாவிக் கொத்தை கொடுப்பது போல கருணாநதியை கதல்வராக்கிவிட்டனர். "

"சில கோழிகள் அதிகாலை கூவும், சில சாமத்தில் கூவும். சிதம்பரம் சாமக் கோழி. சாமக் கோழி கூவுவது நில்லதல்ல. "

http://thatstamil.oneindia.com/news/2006/02/08/admk.html

(நிச்சயம் தொடரும் என்று நினைக்கிறேன்)

Monday, February 06, 2006

பாருக்குள்ளே நல்ல நாடு

இங்கு ஒரு பதிவில் (யாருடையது என்று மறந்துவிட்டது.) ரஷ்யாவில்எட்டு டாலர் வருமான வரி கட்டாவிட்டால் ரஷ்ய போலீஸ் குதிரையில்வரும் என்று எழுதியிருந்தார்கள்.

சரி அமெரிக்காவில் வருமான வரி கட்டாவிட்டால் மேள தாளத்துடன் பாராட்டு விழா நடக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இங்கு கருப்பு கண்ணாடி, துப்பாக்கியுடன் ஐ.ஆர்.எஸ் காரர்கள் காரில் வருவார்கள்.

இப்படி எல்லாம் செய்யாத நல்ல நாடு இந்தியாதான்.இந்திய கருப்புப்பணம் மொத்த GDP யில் 20 சதவிகிதம் (தோராயமாக).நம்ம இந்திய அரசாங்கமும் பணம் தேவைப்படும்போது, "கண்ணுங்களா உங்க கருப்பு பணத்த வெள்ளையா மாத்த வாய்ப்பு தறோம்" நு செல்லமா பொது மன்னிப்பு தந்தது.

அப்புறம் கோர்ட்டு 'இப்படியெல்லாம் மன்னிக்கக்கூடாது. கடும் நடவடிக்கைஎடுங்கள்' நு சொல்லிச்சாம்.

என்னடாது கடும் நடவடிக்கை எடுத்தா பாராளுமன்றமும் சட்டமன்றங்களும்காலியாகப் போய் ஏதாவது அரசியல் சட்ட சிக்கல் வந்துடுமோன்னு மண்டையை பிச்சிக்கிட்டு யோசிச்சு அடுத்த செல்லமான திட்டம் கண்டுபிடிச்சாங்க. அதாவது உங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தைக் கொடுத்து அரசாங்கம் zero coupon bond வாங்கிக்கொள்ளலாம். இப்படிஒரு கடும் நடவடிக்கையை கேள்விப்பட்டு எல்லோரும் நடுங்கிப் போயிருக்கிறார்கள்.


மொத்த GDP((735 பிலியன் டாலர்) யில்
ராணுவத்துக்கு செலவு பண்ணுவது வெறும் 3 சதவிகிதம்.
பற்றாக்குறை 9 சதவிகிதம்
கருப்புப்பணம் 20 சதவிகிதம்

எல்லா ஊரிலும் இளிச்ச வாயர்கள் உண்டு. இந்தியாவில் சம்பளம் வாங்குபவர்களைத்தான்சொல்றேன். பாவம் TDS என்று ஆரம்பத்திலேயே பிடிச்சுடுவாங்க.

இப்ப சொல்லுங்க. எது உண்மையிலேயே நல்ல நாடுன்னு?

Thursday, February 02, 2006

இரண்டு பாவாடை செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

சானியாவின் பாவாடையை தடை செய்ய முடியாது என்று
முஸ்லிம் சட்ட வாரியம் சொல்லி விட்டது.
http://thatstamil.oneindia.com/news/2006/02/02/sania.html

மேலும் ஒரு அமெரிக்க மாநிலத்தில் பாவாடை போட்டோ சட்டம்.
http://www.baltimoresun.com/news/local/politics/bal-md.upskirt02feb02,1,5009741.story?coll=bal-home-headlines&ctrack=1&cset=true

Wednesday, February 01, 2006

மார்ச்சீலைப் போராட்டமும் ஜீன்ஸ் அணியும் போராட்டமும்

மார்ச்சீலைப் போராட்டமும் ஜீன்ஸ் அணியும் போராட்டமும்
கற்பகவினாயகம் என்பவர் திண்ணையில் எழுதிய இந்த( http://www.thinnai.com/pl0127062.html ) கட்டுரையை பார்த்தபோதுதோன்றியது.
ஒரு காலத்தில் மார்ச்சீலை போடுவோம் என்று இவர்கள் போராடினார்கள்.அப்படி போடக்கூடாது என்று தடுத்தார்கள். இப்பொழுது கல்லூரிகளில்ஜீன்ஸ், டி ஷர்ட் அணியக்கூடாது சேலைதான் அணிய வேண்டும் என்றுசொல்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தாலி வேண்டும் என்று போராடினார்கள். இப்போநாய்க்கு கட்டற லைசென்ஸ் போன்ற தாலி எதுக்கு என்று கேட்கிறோம்.

மேலோட்டமாக இது முறன்பாடு போல தோன்றினாலும், அடிப்படை ஒன்றுதான்.பெண்களுக்குசேலை கட்டவும் உரிமையில்லை. கட்டாமல் இருக்கவும் உரிமையில்லை.

பொறியியல் கல்லூரியில் சேலை பொருத்தமான உடை இல்லை. சேலைகட்டிக்கொண்டு டூவீலரில் போய் பரலோகம் போனவர்கள் உண்டு.காலத்திற்கு ஏற்ப தங்களுக்கு வசதியான உடையை அணியவும் உரிமையில்லை.