ullal

Friday, June 30, 2006

சிவபெருமானும் க்ளோபல் வார்மிங்கும்

எல்லாம் வல்ல சிவ பெருமானே க்ளோபல் வார்மிங்கில் பாதிக்கப்பட்டுட்டாராம்.வருடா வருடம் அமர்நாத்தில் உருவாகும் பனி லிங்கத்தை பார்க்க மிகவும் கஷ்டப்பட்டு குகைக்குள் சென்று லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று பார்ப்பார்கள். இந்த வருடம் குளோபல் வார்மிங்க்காரணமாக லிங்கம் உருவாகவில்லை. அதனால் டூரிசம் பணத்தைஇழக்க முடியுமா? செயற்கையாக் டில்லியில் செய்த பனி லிங்கத்தை சத்தமில்லாமல் நிறுவி விட்டார்கள்.

இப்ப லிங்கம் சாமியா இல்லையா? எல்லாம் வல்ல இறைவன், எம்பெருமான் எப்படி குளோபல் வார்மிங்கால் பாதிக்கப்பட்டார். ?யாராவது சந்தேகத்தை தீர்த்து வைங்க.

சென்னை ஓட்டல்களில் நர்வாண நிடனம்

துணை நடிகைகள் உட்பட 16 பெண்கள் கைது ......
பின்னர் "பொது இடத்தில் ஆபாசமாகவும், சட்ட விரோதமாகவும் நிடந்து கொண்ட பெண்களை, இம்மாதம் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெண்களை ஜாமீனில் விடுவிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு நிபர் ஜாமீனில் அப்பெண்களை விடுவிக்க, மாஜிச்டிரேட் ராமநாதன் உத்தரவிட்டார்.

(நன்றி தினமலர் செய்தி)

வழக்கம் போல பொது இடத்தில் ஆபாசமாக கண்டு களித்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

ஜனநாயகம் - புதிய விளக்கம்

சமீபத்தில் டிவியில் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய விளக்கம்கேட்டேன். சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


ஜனநாயகம் என்பது -

கார்பரேஷனின் அரசாங்கம்

கார்பரேஷனால் அரசாங்கம்

கார்பரேஷனுக்காக அரசாங்கம்


Government of the corporation,

by the corporation,

for the corporation

Thursday, June 29, 2006

பரத முனிக்கு கோவில் கட்டலாமா?

http://www.keetru.com/anaruna/jun06/madivanan.html

இந்த பரத சாஸ்திரத்தை எழுதியது ஒருவர் தானா அல்லது பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டதா என்று ஒருவருக்கும் தெரியாது. இவர் பரத முனி கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் இருந்ததாக எழுதியுள்ளார். பெரும்பாலானவர்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை இருக்கலாமென்கிறார்கள்.


கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இசை, நாட்டியம் பற்றிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது. இது பத்மா சுப்ரமணியத்திற்கும்தெரியும். அவரே ஏதோ ஒரு பேப்பரில் குறிப்பிட்டிருந்ததாக நியாபகம்.
(இந்த கல்வெட்டு நான் பிறந்த ஊரில் இருப்பதை கொஞ்சம் சைடில்பீற்றிக்கொள்கிறேன்.)

இந்த கலையை வளர்த்த பெண்மணிகள் இந்த நவீன கலைஅரசிகளைப் போல உலகம் சுற்றாமல் இன்றும் கிராமங்களில் பயங்கரவறுமையில் இருப்பதாக படித்திருக்கிறேன். இந்த பணத்தை பரதருக்கும் (யாரிவர் எப்படி இருப்பார்) அவிநயருக்கும் கோவில் கட்டுவதை விட உண்மையில் இவர்களுக்கு உதவுவதே பொருத்தமாக இருக்கும்.


இந்த கலையை வளர்த்தவர்கள் வறுமையில் வாடும்போது, யாரென்றே தெரியாத இரண்டு பேரில் யாருக்கு கோவில் கட்டுவதென்று போட்டி தேவைதானா?

ஒரு கும்பலுக்கு கண்ணகி சிலை வைக்க வேண்டும், இன்னொரு கும்பலுக்குபரத முனிக்கு கோவில் கட்ட வேண்டும். வாழ்க்கை நடைமுறை பிரச்சினைகளைவிட சிலை வைப்பதுதான் இப்பொழுது தலையாய பிரச்சினையாக இருக்கிறது. ( கண்ணகி சிலையை எதிர்த்தவர்கள் ஏன் பரத முனி கோவிலை எதிர்க்கவில்லை என்று சிலர் கேட்கலாம். )

அரசாங்க பணத்தில் சிலை, கோவில்கள் போன்றவை கட்டுவதை ஒட்டுமொத்தமாக தடை செய்யலாம்.

வலைப்பதிவு பங்கு மார்க்கெட்

வலைப்பதிவுகளை வைத்து இணையத்தில் ஒரு பங்கு மார்க்கெட் நடக்கிறது. இது குறித்து யாரும் எழுதினார்களா என்று தெரியவில்லை.

blogshares.com - இந்த தளத்தில் சேர்ந்தால் ஒரு 500டால்ர்கள் (பச்சை டாலர் இல்லை விளையாட்டு டாலர்கள்) கொடுப்பார்களாம். இந்த பணத்தை உங்களுக்கு பிடித்தவலைப்பதிவில் முதலீடு செய்யலாம்.

வலைப்பதிவிற்கு வரும் தொடுப்பு( link )களை வைத்து அந்த வலைப்பதிவின்பங்கு விலை நிர்ணயிக்கப்படும். அதிக பிரபலமான பதிவுகளின் விலை உயரும் பொழுது உங்கள் முதலீடும் உயரும் .
இதன் மூலம் வலைப்பதிவுகளின் உண்மையான popularityஎன்னவென்று கணிக்கலாம்.

இன்றைய தமிழ் பதிவுகளின் விலை இங்கேhttp://blogshares.com/industries.php?weight=light&id=1228

இது உள்ளல் பதிவின் விலைhttp://blogshares.com/blogs.php?blog=http%3A%2F%2Fullal.blogspot.com%2F

Tuesday, June 27, 2006

கண்ணகி காமெடி- இரண்டாவது சுற்று

கண்ணகியை பின்பற்ற சொல்லுகிறதா தமிழக அரசுhttp://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_4.html
பகுத்தறிவாளர் வேடத்தில் பகைவர் கூட்டம்http://www.keetru.com/anaruna/jun06/anaruna.html

ஆனாரூனாவின் கட்டுரை படித்து சிரித்து மகிழ உதவும். ஞானியின் எந்தகேள்விக்கும் பதில் வைத்ததாக தெரியவில்லை. பார்ப்பன சங்கரன்பகுத்தறிவு பேசுவதா என்று பெரிய ரப்பர் ஸ்டாம்ப் எடுத்து குத்துகிறார்.

அடிமைத்தனத்திற்கு அன்பு என்று பெயர் வைத்து ஜல்லியடித்து ஏமாற்றும் வித்தை எவ்வளவு நாள் ஓட்டுவார்கள்? யார் கண்டார்கள் ? பாண்டிய மன்னன் கோவலனைகொல்லாமல் இருந்திருந்தால் சிலம்பு விற்ற காசில் மாதவிக்கு பதிலாக வேறு ஒரு தேவியை தேடியும் போயிருப்பான்.

இப்பொழுது பிரச்சினை கிருஷ்ணனை போற்றுபவர்கள் கண்ணகியை இழிப்பது அல்ல.பகுத்தறிவாளர்கள் பிற்போக்குவாதிகளாக ஆனதுதான் பிரச்சினை.

இந்த கட்டுரையின் அதிகபட்ச நகைச்சுவை ஜமீன்களை எல்லாம் மந்திரிகளாகவைத்திருக்கும் கருணாநிதி கம்யூனிஸ்டான கதை.

இன்று உண்மையிலேயே பெண்களுக்கு பேசப்படவேண்டிய பிரச்சினைகள் உள்ளது. கண்ணகிக்கு சிலை வைத்ததால் யாரும் சிலம்பு அணிந்துகொண்டு போக போவதில்லை. ஞானியும் திமுகவின் தமிழ் உணர்ச்சிவிளையாட்டுக்கு எண்ணை ஊற்றி வளர்க்கிறார். திமுக காரர்களுக்கு வேண்டியதும் அதுதான். இந்த சிலை வைத்ததால் தாங்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பறைசாற்றும் வாய்ப்பு. எத்தனையோ சிலை போல இதுவும் ஒரு சிலை என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம்.

மக்கள் பணத்தில் தினமும் அரசாங்க விளம்பரம் ("பேரன் பத்திரிகையில்") கொடுப்பதைப் பற்றி தனியாக பேச வேண்டும். இது போன்ற விஷயங்களைபேசாமல் திசை திருப்புவதற்காகதான் இந்த உணர்ச்சி தூண்டும் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.

Monday, June 26, 2006

பாஷாவுக்கு நன்றி

பாஷா இந்தியாவில் உள்ளல் பதிவுகளை சிறந்த அரசியல் பதிவாக தேர்ந்தெடுத்த பாஷா இந்தியாவுக்கு நன்றி.

இந்த சேதியைச் சொன்ன வவ்வாலுக்கும் நன்றி.

உண்மையிலேயே ஆச்சரியமாக தான் இருக்கிறது.

வெற்றி பெற்ற பதிவர்களுக்கு பாராட்டுகள். (thoughtsintamil,chathurangam,cinemapadalkal)

Category winnersஇல் இந்தியும் , தமிழும் சரிபாதிஇடம் பிடித்திருக்கிறது.

முக்கியமாக சிறந்த டெக்னாலஜி தளமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மணத்திற்கு நன்றி.

Monday, June 12, 2006

இட ஒதுக்கீடும் என்.ஆர்.ஐ இந்தியரும்

nri 1 -என்னப்பா இந்தியால என்ன நடக்குது ?

nri 2- ஓபிசிக்கு ஐஐடில இட ஒதுக்கீடு கேக்கறாங்க.

nri 1 - அதனால என்ன ?

nri 2- முப்பது மார்க் வாங்கிட்டு சீட் வாங்கப்போறானுங்க.

nri 1 - அப்படியா ?

nri 2- இந்த கருணாநிதிக்கும், ராமதாசுக்கும் கோடி கணக்கில்பணம் இருக்கு. இவங்க பசங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு குடுக்கணும்?

nri 1 - ஓஹோ.

nri 2- நர்மதா அணை கட்டக்கூடாதாம். இந்த ஆதிவாசிங்களால நாட்டுக்கு என்ன ப்ரயோசனம்? நர்மதா அணையை ஒரு துலுக்கன் ஆமிர்கான்எதிர்க்கறானாம்.

nri 1 - சரி. விடுப்பா. இப்ப எங்க வேலை பாக்கறே?

nri 2 - அரசாங்க கான்ட்றாக்ட் பேர் சொல்லுகிறார்.

nri 1 - மைனாரிடி கம்பெனியா? அப்ப நீயும் இட ஒதுக்கீட்டுல தான வேலை செய்யறே

nri 2 - அத எப்படி கண்டுபுடிச்சீங்க.

nri 1 - ஆமாம். உங்க பையன் என்ன செய்யறான்.

nri 2 - இந்தியாவுக்கு அனுப்பிட்டேன். மெடிகல் காலேஜில் படிக்கிறான்.

nri 1 - என்.ஆர்,ஐ கோட்டாவா

nri 2 - ஆமா, அனியாய காசு புடுங்கறாங்க.
சரி. நான் கெளம்பறேன்.இங்க இந்தியாவில் இட ஒதுக்கீடு எதிர்த்து நாங்க போராட போறாம். வரட்டுமா?

இதற்கு மேல் உரையாடல் கேட்டவருக்கு தலை சுத்தி விட்டது.

Friday, June 09, 2006

சாதி ஒழிந்துவிட்டதா

இட ஒதுக்கீடு பற்றிபேசும்போது மட்டும் சிலர் இந்தியாவில்சமத்துவம் மலர்ந்து அனைவரும் ஒரே தட்டில் இருப்பது போல நீட்டி முழக்கி வியாக்கியானம் செய்வார்கள்.


சாதியை பார்க்க அதிக தூரம் போக வேண்டாம்.கொஞ்சம் தலையை நிமிர்த்தி அல்லது scrollbar ஐ நகர்த்தி தமிழ்மணத்தின் நெற்றிப் பட்டையில் Tamil Groom Meet 1000s of members of your caste விளம்பரத்தை பாருங்கள்.

கண்ணகி - பெரியார்

இது கண்ணகி சீசன் ஆகிவிட்டதால் பெரியாரின் இந்த கட்டுரையை

(புதுசா வலைப்பதிவுக்கு வந்து பழைய சண்டைகளை பார்க்காதவர்களுக்காக)

மீண்டும் மறுபதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20403045&format=html

Monday, June 05, 2006

சாத்தான் தின வாழ்த்துக்கள்

நாளை ( IST இன்றூ ) 6/6/06. இது சாத்தானுடைய நம்பருங்களாம்.

அம்மாக்கள் தினம், மகளிர் தினத்துக்கெல்லாம் பதிவு போட்டார்கள்.

சாத்தானின் தினத்துக்காக இந்த பதிவு.

மார்க் ட்வெயினின்
சாத்தான் பூமியிலிருந்து எழுதிய கடிதங்கள்.

இங்க
( http://www.positiveatheism.org/hist/twainlfe.htm )
போய் நீங்களே மொழிபெயர்த்து படிச்சுக்கோங்க.

Happy சாத்தான் Day.