ullal

Thursday, May 24, 2007

மாயாவதியின் மாயாஜாலத்தால் டயாரியா வந்தவர்கள்..

சோ.தமிழழகன், பொள்ளாச்சி, கோவையிலிருந்து எழுதுகிறார்: "சிங்கம் இளைத்து விட்டால், சிறு கயல்கள் கொண்டாடும்!'மாநலக் கட்சிகள், மக்களை ஏமாற்றி வளர்ந்தன. இனம், மொழி, பிராந்திய உணர்வுகளை மக்களிடம் து௵ண்டிவிட்டு, தங்களைக் காப்பாற்ற தங்கள் மாநலத் தலைவர்களை விட்டால் யாருமில்லை என்று நிம்ப வைத்து, மாநல கட்சிகள் நி௵டு கழுக்க அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.தேசியக் கட்சிகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மாட்டி, விழி பிதுங்குகின்றன. காவி஛, கல்லைப் பெ஛யாறு, பாலாறு இன்னும் பலவித பிரச்னைகளிலும், தேசியக்கட்சிகளின் மாநலக் கிளைகள் அந்தந்த மாநலங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, பல வேடம் புனைவதால், அக்கட்சிகளின் நலவரம் மக்களிடம் எள்ளி நிகையாடக்கூடிய இடத்துக்குப் போய் விட்டது.அதனால், தேசியக் கட்சிகள், தங்கள் தசாவதார வேடங்களைக் களைந்துவிட்டு, தற்போதைய உடனடி பலன்களை எதிர்பாராமல், தேசியக் கண்ணோட்டத்துடனும், ஒட்டு மொத்த மக்களின் நின்மையைக் கருதியும், கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து செயல்பட வேண்டும். அதன் உலம் நி௵ட்டு மக்களின் நிம்பிக்கையைப் பெற்று, ஜனாதிபதி விரும்புவது போல், இரு கட்சி ஆட்சி கறை ஏற்பட வழி வகுக்க வேண்டும். மெஜா஛ட்டி பலம் பெற்ற ஒரு ஆளுங்கட்சி,பலமான ஒரு எதிர்க்கட்சி என்ற நலை ஏற்பட்டால் தான், ஆளுங்கட்சி உறுதியான கொள்கை கடிவுகள் எடுத்து செயல்படவும், ஆட்சியில் தவறுகள் ஏற்படும் போது, எதிர்க்கட்சி தட்டிக் கேட்டு சீர் செய்யவும் ஏதுவாகும்.இதில் கம்யூனிஸ்டுகளைநி௵ம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் ஏதோ ஓ஛ரண்டு மாநலங்களில் மாநலக் கட்சிகளாகத் தான் ஜிவனம் செய்து கொண்டு உள்ளனர். ஆகவே, காங்கிரசும், பா.ஜ.,வும் பொம்மலாட்ட ஆட்சி நிடத்தும், மாநலக் கட்சிகளை உதறி விட்டு, தேசியம் நோக்கி தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும்.

நன்றி- தினமலர்

குருவாயூரும் கோல்மாலும்

எத்தனை முறை ஷொன்னாலும் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு ஷிலதெல்லாம் புரியாது. உங்கள் ஊனக் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் ஏன் புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்? பெரியவர்கள் எல்லாம் காரண காரியத்தோடுதான் ஆகம விதிகளை எழுதியிருப்பார்கள். அது உங்களுக்கு புரியாவிட்டால் யார் என்ன செய்ய முடியும்? எல்லாம் அவன் விதித்தபடியே நடக்கிறது.

நாங்கள் என்ன தினமும் குருவாயூர் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை சோதனை போட்டு மதச் சான்றிதழ் சரி பார்த்தா உள்ளே விடுகிறோம்? அழகாக ஒரு பலகை வைத்திருக்கிறோம். இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று. பக்தர்கள் ஏன் அதை புரிந்து நடந்துக்கொள்ள கூடாது? தினமும் வரும் பக்தர்களில் பிறமதக்காரர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அதற்கெல்லாம் தீட்டு கழிக்கிறோமா? இல்லையே? அவர்கள் பிற மதத்தவர்கள் என்று எங்களுக்குதான் தெரியாதே! இதனால் சாமி தீட்டு தாங்காமல்எழுந்து ஓடியா விட்டது?

ஆனால் இந்த பிரபலங்கள் விஷயம் அப்படி இல்லை. பிரபலமானகிருத்துவர்கள் இங்கு வரும்பொழுது வேற்று மதக்காரர்கள் இங்கு வருவது 'எல்லாருக்கும்' தெரிந்துவிடுகிறது. நாங்களும் ஆகம விதிகளின்படிநடப்பதாக ஒரு நாடகம் நடத்த வேண்டியிருக்கிறது.
இந்து கோயில்களில் பிற மதத்தவர்கள் வந்தால் பாதுகாப்பு பிரச்சினை என்று எங்கள் சிறை புகழ் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சங்கராச்சாரி சாமிகள் சொல்லியிருப்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இது போன்ற விஷயங்களை பார்த்துக்கொள்ள தானே நாங்கள் இருக்கிறோம். பிறகு நீங்கள் ஏன் வீணாக மூளையை குழப்பிக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்?

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அதனால் மற்றவர்கள்உங்கள் வீட்டிலேயே குருவாயூரப்பனை வணங்குங்கள். ஆனால் இந்துக்களே!நீங்களும் இப்படி செய்த்விடாதீர்கள். அவசியம் கோவிலுக்கு வந்து தட்டில் ஐம்பது நூறு பறக்காமல் போடுங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணா!

Wednesday, May 23, 2007

அமெரிக்க நுகர்வு - போட்டோ கேலரி

அமெரிக்கா நுகரும் பொருட்களின் புள்ளி விபரத்தைக் கொண்டுஒரு கலை படைப்பு சியாட்டிலில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தூக்கி போடப்படும் 426000 செல்போன்கள்,5 நிமிடங்களில் 2 மில்லியன் பாட்டில்கள், ஒவ்வொருமாதமும் சிகரெட்டுக்கு அடிமையாகும் டீன் ஏஜர்கள், 30 நொடிகளில்106000 அலுமினிய கேன்கள், அமெரிக்காவில் ப்றக்கும் ப்ளேன்கள்,கந்டெய்னர்கள், ஆபீஸில் பயன்படுத்தப்படும் பேப்பர், துப்பாக்கியால்இறந்தவர்கள் , 5 நொடிகளுக்கு 60000 ப்ளேஸ்டிக் பேக், இராக் போருக்கு செலவு செய்யப்படும் நூறு டாலர் பில்கள் - இந்த புள்ளி விபரத்தை போட்டோவில் அடைத்தால் இப்படி இருக்கும்.

http://www.chrisjordan.com/current_set2.php?id=7

Monday, May 14, 2007

குடும்பச் சண்டையை கூடி ரசிக்கும் குடிமக்களே..

ஒரு திருடனுக்கு ரொம்ப வயதாகி விட்டது. இனி திருட்டு தொழில்செய்ய முடியாது என்ற நிலைமை. தன் நான்கு மகன்கள்கால் திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்ஆகியோரைக் கூப்பிட்டு உங்களில் யார் திருட்டு தொழிலை நன்றாக செய்கிறீர்களோ அவனை தலைவனாகக் கொண்டு நீங்கள் திருட்டுத்தொழிலை நன்றாக செய்ய வேண்டும் என்று சொன்னான். ஒரு திருடன்மதுரையில், ஒருவன் சென்னையில் தங்கள் திறமையை காட்ட...கொஞ்சம் இருங்க ஏதோ ஆட்டோ சத்தம் கேக்குது.
தேர்தலில் தோற்கும்போது மானங்கெட்ட தமிழர்களே என்று ஒருவர்கடிதம் வரைவார். இந்த உண்மையை நன்றாக் புரிந்துக் கொண்டவர்கள் நாம் என்ன செய்தாலும் இந்த தமிழ்ர்களுக்கு ரோசம் வராது என்றதைரியத்தில் ஆடுவது அமர்க்களமாக உள்ளது.

ஒரு பக்கம் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பிரதம மந்திரிக்கு கஷ்டப்பட்டு கடிதம் எழுதி போஸ்ட் பண்ணுவது. அடுத்த நாளே பொன் விழா கொண்டாடுவது. பொன் விழா மேடையில் பிரதம மந்திரி. விழாவை முதல் வரிசையில் அமர்ந்து கண்டு களித்தவர்அஞ்சா நெஞ்சன். அதற்குள் இவர் மனு நீதி சோழனா , மக்கா சோளமா, மனு சோழன் மனு நீதியை கடைபிடித்தானா, மனு நீதியா இப்படி ஒரே ஜல்லியடி சவுண்டு.(இவர்தான் அய்யா உண்மையான 'மனுநீதி' சோழன்.) டாட்டாவை மிரட்டினார்,பாட்டாவை மிரட்டினார் என்று எழுதிய பதிவர்கள் தயாநிதி மாறனின்திறமையை திடீரென்று கண்டுபிடித்து விட்டார்கள்.(?)


கருத்து சுதந்திரத்துக்காக வலைப்பதிவு ஆரம்பித்தவர்கள் கூட கருத்து கணிப்புகளைஆதரிப்பதில்லை என்ற உண்மையும் வெளி வந்துள்ளது. தங்கள் கட்சியைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக கருத்து வெளியிடலாம்.ரவுடித்தனத்தை மொத்த கட்சியும் குடும்பமும் ஆதரிக்குது.



இது எல்லாம் போதாது, கனவு காணும் ஜனாதிபதி, கனவு காண்பதை விட்டுவிட்டு நாட்டில் இரண்டு கட்சி ஆட்சி முறைவேண்டுமென்று ஐடியா குடுக்கிறார். ரிடையர் ஆகும் நேரத்தில்இப்படி ஒரு நல்லெண்ணம் இவருக்கு.


அப்பாவி சிட்டிசன்கள் என்ன செய்ய வேண்டும்? போலீஸ் உதவாத போது சிட்டிசன்களே அவ்வப்பொழுது ரவுடிகளை சுட்டு தள்ளிடலாமா? அல்லது ரவுடிகளுக்கு போட்டியாக ஒரு மக்கள் ரவுடிப் படையை இறக்குவதா? அல்லது செக்யூரிடி கேட்டுகளுக்கு பின் ஒளிந்துக் கொள்வதா? அல்லது கம்முன்னு நாடகத்தை தொடர்ந்து பார்ப்பதா?

Wednesday, May 09, 2007

அண்ணன் கேப்டன் விஜயகான்த் அவர்களே,

உங்களுடைய குமுதம் பேட்டியை படிச்சேங்க. சும்மா பின்னி எடுத்திட்டீங்கண்ணே.

அதிலும் இந்த இட ஒதுக்கீடு பத்தி தெளிவா பேசியிருக்கீங்க. இதுக்கு முன்னாடி செய்தி வாசிப்பவரா இருந்தீங்களா? கோர்ட் என்ன சொல்லுது, அவங்க என்ன சொல்றாங்கன்னு சொல்றீங்க. இது எங்களுக்கு தெரியாதா? 'நீங்க' இட ஒதுக்கீடு பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு எப்ப சொல்வீங்க?

சட்டசபைல ஒரு வேலையும் இல்ல. அங்க போகறதில்லேன்னு சொல்றீங்க. ஓரளவு நியாயமாவே இருக்கு. உங்க தொகுதிக்கு கோரிக்கை எல்லாம் எதுவும் இல்லீங்களா?


தொகுதி நிதி ஒரு கோடி 20 லட்சத்த அப்படியே தொகுதிக்கு குடுத்திட்டீங்க. ரொம்ப சந்தோசமுங்க. ஆமா தொகுதி நிதின்னா என்னங்க? தொகுதிக்கு குடுப்பதுதானேன்னு சிலர் கேக்கறாங்க. நான் கேக்க மாட்டேன். நீங்க சொன்னா கரெக்டாதான் இருக்கும்.


தொகுதிக்கு பத்து கோவில், ஆறு லட்சத்துல கிறிஸ்தவ ஆஸ்பத்திரி ( அப்ப இந்துக்கள் இங்க போகக்கூடாதா?) முஸ்லிம் கட்டடம்னு நிறைய நிறைய சென்சுருக்கீங்க. ஆறு லச்சத்துல ஆஸ்பத்திரி கட்ட முடியுங்களா? ஆனா அரசியல்ல நல்லாவே தேறிட்டீங்க.


வித்தியாச அரசியலுக்கு விஜயகான்த். கேக்கவே எவ்வளோ நல்லா இருக்கு? அடுத்த பத்தில் அவங்க மட்டும் போஸ்டர் கட் அவுட் வெக்கலாமான்னு பின்னிட்டீங்க போங்க. அப்ப நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசன்னு நான்,' நான் ' கேக்க மாட்டேன்.


ஏதோ பாண்டிச்சேரி ஆஸ்பத்திரி பத்தி சொல்லி இருக்கீங்க. சத்தியமா இன்னும் புரியவே இல்லீங்க.

இவ்வளவு ஏன்? என் சம்பளமே தொகுதிக்குதான் போகுதுன்னு சொல்றீங்க. உங்களுக்கு உண்மையிலேயே பெரிய மனசு. இது ஒரு அம்பது கொடி இருக்குமா?ஆனா @இலர் இப்படி சொல்றாங்க. வாரன் பப்பே கொடுக்கற பில்லியனை விட புஷ்ஷோட கையெழுத்து ந்றைய பேரோட தலியெழுத்த மாத்தும். சமூகசேவை வேற. அரசியல் வேறன்னு சொல்றாங்க. கிறுக்கு பயலுக.

கடைசி பத்தில உங்க மதுவிலக்கு கொள்கைய சொல்லிட்டீங்க. கள்ளச்சாராயத்த ஒழிக்கணும்னு சொல்றீங்க. நீங்க மதுவிலக்கு ஆதரவாளர். கரெக்ட்டா? அப்ப இதுக்கு முன்னாடி கள்ளுக்கடைய தெறக்கனும்னு சொன்னது நீங்களா? பண்ருட்டியா?


உங்க கொள்கை பேட்டிய படிச்சு லேசா கிறுகிறுன்னு வருது. யாராது வாங்களேன்.

இந்துக்களுக்கு பலதார மணம் செய்யும் தனி மனித உரிமை வேண்டும்

இப்பொழுதெல்லாம் அந்த காலத்து சர்வாதிகாரம் போலஇல்லாமல் பல விஷயங்களில் தனிமனித உரிமை பெருகி வருகிறது. ஊருக்குள் சாமியார்கள் நிர்வாணமாக போவது தனி மனித உரிமை, மத உரிமை என்றெல்லாம்சொன்னார்கள். பொது இடத்தில் கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பதற்கும் தனி உரிமை இருக்கிறது. (இன்னும்வேறு எதற்கெல்லாம் தனி மனித உரிமை இருக்கு என்றுதற்போது தெரியவில்லை. காலப்போக்கில் தெரிய வரும்.)

இப்படி பொது இடங்களில் பெண்கள் இருப்பார்களோ,குழந்தைகள் இருப்பார்களோ, அவர்களுடைய பெற்றோர்கள்விரும்புவார்களோ என்று கவலைப்பட தேவையில்லாத அளவுக்குதனிமனித உரிமை இருக்கிறது.
சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை (இப்போதைக்கு மூன்று என்று வைத்துக்கொள்வோம்) தவிர வேரு யாரையும் பாதிக்காதபட்சத்தில்மனைவியும், கணவனும் ஆட்சேபிக்காத பட்சத்தில் இந்து ஆண்களோ, பெண்களோ ஏன் பலதாரமணம் செய்யக்கூடாது?இது ஏன் கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டிருக்கிறது? அதுவும்இந்துக்களுக்கு மட்டும்?


இரண்டு மனைவிகளை வைத்திருப்பவர்களை சிலர் ஏளனம் செய்கிறார்களே? இது நியாயமா? இது சம்பந்தப்பட்டவரின் தனிமனித உரிமை இல்லையா?

80 கோடி இந்துக்களே பதில் சொல்லுங்கள்.

துண்டு செய்தி:குமுதத்தில் ஒரு கட்டுரை வந்தது. ஒரு தமிழக அரசு அதிகாரி இரண்டு மனைவி வைத்திருந்ததால் வேலையில் மெமோ கொடுத்தார்களாம்.

திமுக அடுத்த வாரிசு யார்? கருத்துக் கணிப்பு

கட்சியை ஜனநாயகமாக நடத்தாமல் குடும்பக்கட்சி போல நடத்தினால்இப்படிதான் அடிதடி ஆகும். உயிரியல் வாரிசு இல்லாத எம்ஜிஆர் கட்சிக்கே அவ்வளவு கலாட்டா நடந்தது. மிகப் பெரிய குடும்பம் உள்ள திமுகவில் வன்முறைக்கு பஞ்சம் இருக்காது.

திமுகவில் அடுத்த வாரிசு யார்?

முக.ஸ்டாலின்
அழகிரி
கனிமொழி
தயாநிதி மாறன்
ஆதித்யா

வலைப்பதிவர்களே உங்கள் பொன்னான வாக்குகளை பின்னூட்டத்தில் இடுங்கள்.

Tuesday, May 01, 2007

உ.பி. தேர்தலில் கீதையும், பூணூலும்

"சாதி இல்லை. இல்லவே இல்லை."

உத்தரபிரதேச தேர்தலில் கல்யாண்சிங் பிரச்சாரக் கூட்டத்தில்பாஜக கீதையும், பூணூலும் வினியோகித்தது. அனுமார் வேசம்போட்ட ஆட்களும் இதை வினியோகம் செய்தனர்.

"பூணுலும்,கீதையும் இந்துக்களுக்கு இரண்டு கண் மாதிரி. இதில்தவறு இல்லை. ஜாதி அரசியல் (!!!!) செய்வதற்காக இந்துக்களை பிரிப்பவர்களின் முகத்தில் அறைவதற்காகவே இவை வினியோகிக்கப்பட்டன" என்று பாஜக விளகம் அளித்துள்ளது.

அப்ப கீதையும் பூணூலும் பாக்காத இந்து குருடனா அல்லது இந்துவே இல்லையா என்று எண்பது கோடி இந்துக்களும் யோசிக்கப்படாது. ப்டாதுன்னா ப்டாதுதான்.

சாதி அரசியல் ஒழிக.

ஜெய்ஹிந்த்