இந்த வார காமெடி -3
விஜய், சங்கருக்கு கல்விதந்தை டாக்டர் பட்டம் வழங்கியதுதான் இந்த வார சூப்பர் காமெடி. கடைசியாக சூ....ப்பர் ஸ்டார் நடித்த 'சிவாஜி' படத்தில் ரஜினி கருப்புப்பண கல்லூரி உரிமையாள கல்வி தந்தைகளை ஒழித்த கதையை தயவு செய்து மறந்து விடுங்கள். ப்ளீஸ். அப்படியே ஜென் டில்மேன் படக் கதையையும் மறந்துவிடுங்கள். ஒரு வேளை சிவாஜி படத்தை பார்த்து நெகிழ்ந்து இனிமேல் எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் எல்லாருக்கும் பொறியியல் படிப்பு இலவசம் ஆக்கினாலும் ஆச்சரியமில்லை.
விரைவில் டிக்கிலோனா கண்டுபிடித்த சங்கருக்கு நோபல் பரிசே கிடைக்கலாம்.
கலைஞர் ஒரு வழியாக உண்மையை கண்டுபிடிச்சுட்டார். மாறன்கள் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டறாங்களாம்.15 வருடமாக கலைஞர் கோமாவில் இருந்து இப்போதான்முழிச்சுருப்பாரோ!
தினமலருக்கு அமெரிக்க தூதருக்கும் அமெரிக்காவிற்கானஇந்திய தூதருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அமெரிக்கதூதர் எம்.பிக்களை தலையில்லாத முண்டம் என்று திட்டினார் என்று தலைப்பு போடுகிறார்கள் தினமலர் எடிட்டர்கள்.
இதுக்கு மேலே மீடியா பீப்பிளை ஏதாவது சொன்னால் யாருக்கெல்லாம் கோபம் வருமோ, யார் கண்டா? பெப்சி உமா ப்ளாகர்களை மட்டுமாகலாய்த்தார்? சில வாரங்களுக்கு முன் குமுதத்தில் 'எதையோ கிறுக்கிட்டு மாடர்ன் ஆர்ட்'னு சொல்றாங்க என்று முத்து உதிர்த்திருந்தார்.பாவம் ஓவியர்கள். இவருடைய விமர்சனத்தால் இந்திய ஓவிய மார்க்கெட்டே காலி ஆனாலும் ஆச்சரியமில்லை. அம்மணி கொஞ்சம் 'போஸ்ட் மாடர்னிஸ்டுகளை' நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொன்லுங்க! அப்பவாவது சிலர் திருந்தறாங்களா பார்ப்போம்!