தமிழ் உணர்வும் ஆபாச சினிமாக்களுக்கு வரி விலக்கும்
தமிழக முதல்வர் தமிழ் பெயர் வைத்த சினிமாக்களுக்கு வரி விலக்குஅளித்திருக்கிறார். இதன் மூலம் இவர்களுக்காக தேர்தலில் கூட்டம் கூட்டிய சினிமாக்காரர்களுக்கு தமிழ் உணர்வு முலாம் பூசிய பரிசு அளித்திருக்கிறார்.
இந்த வரி விலக்கின் விளைவு என்னவென்றால்,
1. தமிழில் பெயர் வைத்து படத்தில் சந்தமிழில் (சன் டிவி பெண்கள் டாக் பண்ணும் தமிழ்) வசனம் இருக்கலாம்.
2. 'டேக் இட் ஈசி பாலிசி' போன்ற பாட்டுக்கள் இருக்கலாம்.ஆனால் படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்க வேண்டும்.
3. தூய தமிழில் இம்சை அரசன் போல 'பொத்திக்கொண்டு போங்கள்'என்று தலைப்பு வைத்தாலும் வரி விலக்கு கிடைக்கும்.
இந்த வரி விலக்கு மூலம் தமிழ் வளர்கிறதோ இல்லையோ, சினிமா உலக காக்கா கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான். இத்துடன் சூட்டிங்க் எடுப்பதற்காக தமிழக அரசுக்கு கொடுக்கும் வாடகையும் குறைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமான விசயம்.இதனால் அரசு எத்தனை கோடி இழக்கும் என்ற விபரம் இல்லை.விபரம் இருந்தால் இந்த பணத்தில் எத்தனை பள்ளிகள் கட்டலாம் என்று சொல்ல முடியும்.
அப்படி தமிழ் சினிமாக்கள் ஏதாவது சமூக நீதி கருத்துக்களை பரப்புகிறதா?சமூகத்திற்கு நல்ல செய்தி ஏதாவது தருகிறார்களா? அத்தனையும் ஹாலில் குழந்தைகளோடு பார்க்க முடியாத ஆபாசப் படங்கள்.
பா.ம.க. தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்று போராட்டம்நடத்தியது. இவர்கள் சினிமா நடிகர்களையும் எதிர்த்தார்கள். ஆனால் சிலதயாரிப்பாளர்களை மட்டும் ஆதரித்தார்கள்.
சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை சினிமா தியேட்டரில் கொட்டுகிறார்கள்.இதில் பெரும் பகுதி சூப்பர் நடிகர்களின் வங்கி கணக்கைதான் நிறைக்கிறது. சினிமாதொழிலாளர்களுக்குக் கூட பெரிய நன்மை இல்லை.
இவர்களுடைய பட்ஜட்டை பார்த்தாலே தமிழக அரசியல் பார்முலா தெளிவாகிறது.
2 ரூ அரிசி + பண்ணயார்களுக்கு விவசாயக் கடன் ரத்து + சினிமா காக்காய்களுக்கு வரிவிலக்கு + கலர் டிவி + கட்சிக்காரர்களுக்கு கமிஷன் + அரசு ஊழியர்களுக்கு சம்பள படி + வாட் வரி + ஏதோ கொஞ்சம் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் = ஸ்டாலின் முதல்வர்